Tuesday, August 22, 2023

#*HBD Madras* #*சென்னப்ப நாயக்கர் பட்டினம்* #*சென்னை தினம்* #*மெட்ராஸ்* #*Chennai Day 2023*

#*HBD Madras*
#*சென்னப்ப நாயக்கர் பட்டினம்* #*சென்னை தினம்* 
#*மெட்ராஸ்* 
#*Chennai Day 2023*
****
‘’ இன்னாப்பா, ஒத்துப்பா, தா, கஸ்மாலம், பேமானி, கய்தே, அந்தாண்ட… இந்தாண்ட… ,கம்னாட்டி, ”இன்னாடா இது பேஜாரா போச்சு.. இன்னாடி எப்ப பார்த்தாலும் ராங் பன்ற நீ”  என இப்படிஒரு அகராதி அளவில் சென்னை நகர பாஷைகள்" என்று சென்னையில் நான் கற்றுக்கொண்டது.
 மெட்ராஸ் பாஷைகள் ஏராளம்... ஸ்ரீதர் இயக்கத்தில் 1962ஆம் ஆண்டு உருவான ”போலீஸ்காரன் மகள்” படத்தில்தான் முழுவதுமாக மெட்ராஸ்பாஷை பேசி நடித்தார். ’‘மணிக்கொடி’ இதழ் எழுத்தாளர்களில் ஒருவரான பி.எஸ்.ராமைய்யா எழுதியிருந்த நாடகம் தான் போலீஸ்காரன் மகள். இப்படத்தில் சந்திரபாபு – மனோரமா ஜோடிக்கான வசனங்கள் அனைத்தையும் சென்னை வட்டார வழக்கில் எழுதியிருந்தார் கோபு. 







”மதராஸ்ல ரிக்‌ஷாகாரங்களுக்குனு தனியா ஒரு பாஷை உண்டு”. ஒருத்தன் கேட்பான். “இன்னா நைனா…நேத்து உன்னே காணும்”.? என்று. அதற்கு ”உடம்பு பேஜார் பிடிச்சுப் போச்சு வாத்தியாரே! ஜல்பு புடிச்சுகிச்சு.!” என்பார். அதாவது ஜலதோஷம் பிடித்திருப்பதை ஜல்பு என்று சொல்லுவார்கள்!” இப்படி என்.எஸ்.கே அவர்கள் நகைச்சுவையாக கூறுவார். 

இன்னாடா இது பேஜாரா போச்சு.. இன்னாடி எப்ப பார்த்தாலும் ராங் பன்ற நீ” என சந்திரபாபு அவ்வப்போது மெட்ராஸ் பாஷை பேசுவார்.

என்.எஸ்.கேவுக்குபின் சினிமாவில் மெட்ராஸ்பாஷையை அதிகம் பயன்படுத்தியவர் சந்திரபாபு. இவரது பூர்வீகம் தூத்துக்குடி, ஆனால் பெரும்பாலும் மெட்ராஸ் பாஷைதான் படங்களில் பயன்படுத்தி வந்தார். 

மெட்ராஸ் பாஷை, இப்போது வட சென்னையில் சில பகுதிகள் மட்டுமே அவ்வப்போது காதில் விழுகிறது....தென் சென்னையில் சில நேரங்களில்…..
தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும், வந்த மக்களின் எண்ணிக்கை கணிசமான அளவு உயர்ந்து போனதால், பேச்சுத்தமிழில் தனது அடையாளத்தை இழந்து போனது மெட்ராஸ் பாஷை.
சென்னைவாசிகள் பயன்படுத்திய சரித்திரப் புகழ் இந்த வார்த்தைகள் எல்லாம் கிழக்கே விசாலமாக கிடக்கும் வங்கக் கடலில் இனி சில காலத்தில் கூவம் வழியாக மூழ்கிப் போகும்.

#KSRPost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
22-8-2023.


No comments:

Post a Comment

*Live in joy. Life goes by in the blink of an eye*

*Live in joy. Life goes by in the blink of an eye*. Don't live in upset, angry  or ungrateful. Look for the good, you'll find it. Ch...