Wednesday, February 7, 2024

#*அன்றைய செய்திகள் 1982 … முதல்வர் ஸ்டாலின் பார்வைக்கு-1*

#*அன்றைய செய்திகள் 1982 …
முதல்வர் ஸ்டாலின்
பார்வைக்கு-1*
————————————

உங்களைப் பொறுத்த வரை உங்களின் தந்தை கலைஞர் காலத்தில் நடந்த  அரசியல் முக்கியத்துவங்கள் எல்லாமே  மறந்து இருக்கும் ?

விவசாய சங்கங்களின் போராட்டம்  நாராயணசாமி அவர்களின் தலைமையில் 1970 முதல் 84 வரை மிக உக்கிரமாகத் தமிழகமெங்கும் தீவிரமாக நடந்து கொண்டிருந்த காலத்தில் நானும் அதனுடன் இணைந்து இருந்தேன் என்பது எல்லோருக்கும் தெரியும்.

 அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தியும் எம் ஜி ஆர் அவர்களும்  தேர்தலை மனதில் கொண்டு நாராயணசாமி அவர்கள் குடியிருந்த   சிறு கிராமமான கோவை மாவட்ட வையம்பாளையம் ஓட்டு வீட்டிற்கே போய் அவரைச் சந்தித்து தங்களுக்கு ஆதரவு தரும்படி  வேண்டிக் கொண்டார்கள்.

அப்போது கலைஞர் என்னிடம் என்னையா நாராயணசாமி நாயுடுவை நான் சந்திக்கனும் என்றார்.

நான் சொன்னேன் அதற்கென்ன நாராயணசாமி நாயுவை நானே அழைத்து வந்து உங்களை சந்திக்க வைக்கிறேன் என்று சொன்னதோடு அவரைக்கையோடு கோபாலபுரத்துக்கு அழைத்து வந்து கலைஞரைச் சந்திக்கவும் வைத்தேன். அப்போது திமுகவில் கூட நான்இல்லை. கல்கி ப்ரியன் கூட இந்த நிகழ்வு கல்கியில் பேட்டி எடுத்து எழுதினார்.

வேலுப்பிள்ளை பிரபாகரனையும் எம்ஜிஆரையும் சந்திக்க வைத்ததில் எம்ஜிஆரும் எனக்கு நல்ல அறிமுகம். கலைஞர் - நாயுடு சந்திப்பை குறித்து எம்ஜிஆர் என்னிடம் கேட்டதுண்டு
அடியேனின் பணி என்ன என்பது 
அப்போது திமுகவில் இருந்த துரைமுருகன் மற்றும் டி ஆர் பாலு மாவட்ட துணைச்செயலார்- கீரிம் கலர் பியட் கார் வைத்திருந்தார். இந்த இருவரும் தான் அன்றைய நிர்வாகிகள் உள்ளனர். நேரு பொனமுடி எல்லாம் 1989க்கு பின்தான் வந்தார்கள். இப்போது உங்கள் அருகே இருக்கக்கூடிய எவருமே அப்போது திமுகவின் அரசியலில் இல்லை. அம்மாதிரியான முக்கியமான சந்தர்ப்பங்களில் என்ன நடந்தது என்று இப்போது உங்களை சுற்றி இருப்பவர்களுக்குத் தெரியாது.

அப்படியாகக் கலைஞருக்கு உதவிசெய்ய ஒரு சிந்தனையாளனாய் அதை நடத்தக்கூடிய வழிமுறை தெரிந்தவனாய் பல்வேறு சிக்கலான நேரங்களில் அவருக்கு அருகில்  அடியேன் இருந்திருக்கிறேன்..  இக்காலத்தில் அப்படியானவர்கள் யாரும் உங்கள் பக்கத்தில் இல்லை என்பதை நீங்கள் உணர்ந்தால் போதும். வாழிய உங்கள் கொற்றம்.
…..*தொடரும் பழைய சங்கதிகள்*(2)

..

#கேஎஸ்ஆர்போஸட்
#ksrpost
7-2-2024.

No comments:

Post a Comment

*Live in joy. Life goes by in the blink of an eye*

*Live in joy. Life goes by in the blink of an eye*. Don't live in upset, angry  or ungrateful. Look for the good, you'll find it. Ch...