Tuesday, February 6, 2024

#*தமிழகம் கேரள,கர்நாடக இடையேபிரச்சனைகளைத் தீர்க்காமல் டெல்லியில் போய்என்ன போராட்டம் நடத்தபோகிறீர்கள்*? ⁉️



————————————-
டெல்லியில் (8-2-2024)
கேரளா முதல்வர்  பினராய்விஜயன் தன் மத்திய மாநில நிதிப் பங்கீடுகள் பற்றியும்  இந்தியா முழுக்க மாநில உரிமைகளுக்கான சமஸ்டி முறையை பாதுகாக்க  என கோரிக்கைகளை முன் வைத்து தன் போராட்டத்தைத் நடத்த உள்ளார்.

இப் போராட்டத்தில் கலந்து கொள்ளும்படி கர்நாடக முதல்வர் சித்தாராமையாவிற்கும் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கும் அவர் அழைப்பு விடுத்ததை ஒட்டி இருவரும் அப்போராட்டத்தில் கலந்து கொள்ள ஒப்புதல் தெரிவித்துள்ளார்கள்.

மத்திய அரசையோ பிரதமர் மோடியையோ எதிர்த்து  தங்கள் வேண்டுகோள்களை முன்வைப்பதன் மூலம் போராடுவது என்பது மாநிலங்கள் சார்ந்த அவர்தம் உரிமை என்பதில் எந்தவித மாற்றுக் கருத்துக்களும் நமக்கு இல்லை. போராடட்டும்.

செரி,
ஆனால் இந்த மூன்று மாநிலங்களின் முதல்வர்கள் அணிக்குள் அவரவர் மாநிலங்களுக்குள் பேசியோ உடன்பட்டோ பகிர்ந்து கொள்ளப்பட வேண்டிய  பல காலமாகத் தீர்க்க முடியாத பிரச்சனைகள் எத்தனை இருக்கின்றன? அவை ஏன் இன்னும் நீடிக்கின்றன என்பதை  உண்மையில் இந்த முதல்வர்கள் உணர்ந்திருக்கிறார்களா?

தமிழ்நாட்டுக்கும் கேரளாவிற்கும் இடையே நீர் பங்கீடு விவகாரங்களில் *நெய்யாறு, முல்லைப்பெரியாறு, ஆழியாறு பரம்பிக்குளம் போன்ற 10 நதிகளை தீர சிக்கல்கள* பற்றிய தீர்வுகள், *கண்ணகிகோட்டம்* என இன்னும் முடிவுக்கு வரவில்லை. தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய கொடுக்கக்கூடிய நீர் ஆதாரங்களை முற்றிலுமாக மறுத்து விட்டுப் பதிலாக குதிரை குப்புறத் தள்ளியது மாதிரி
ஏராளமான இறைச்சி மருந்து கழிவுகளையும் *கேரளகுப்பைகளையும்* கொண்டு வந்து தமிழக எல்லைகளில் கொட்டி விட்டு போகும் கேரள அரசின் செயல்பாடுகளை நிறுத்தச் சொல்லி முதலில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்க வேண்டாமா?

அது ஒரு புறம் என்றால் மற்றொரு பக்கத்தில் *காவேரி,தென்பெண்ணை, ஒகேனக்கல், மேகேதாட்
* என நீர் பங்கீடுகள் குறித்த அளவுகள் எல்லைகள் மற்றும் கால்வாய்கள்  யாவற்றிலும் தொடர்ந்து வரும் தீராத சிக்கல்களைக் கர்நாடக முதல்வர் சித்தாராமையா உடன் முதலில் பேசியல்லவா தீர்த்திருக்க வேண்டும்.

நாம் கேட்பது என்னவென்றால் இந்த மூன்று மாநிலங்களுக்கு இடையே இருக்கக்கூடிய பிரச்சனைகளைத் தீர்க்காமல்   தலைநகர் டெல்லியில் போய் என்ன போராட்டம் நடத்த போகிறீர்கள்?

கர்நாடகா கேரளாவெல்லாம் திராவிட நம்பிக்கைகள் கொண்ட மாநிலங்கள் என்றும் பேசும் திராவிட மாடல் முதல்வர் ஸ்டாலின் அன்பாகவோ பாசமாகவோ நட்பாகவோ இந்த போராட்டத்திற்கு வரும் இரண்டு முதல்வர்களிடம் பேசி நல்லிணக்கத்தோடு கேட்டு முதலில்  தமிழ்நாட்டுக்கு அவர்கள் மறுக்கும் அனைத்து பிரச்சனைகளையும் நட்பின் அடிப்படையில் அல்லது ஒருங்கிணைக்கப்பட்ட திராவிட மாடல் அடிப்படையிலாவது தீர்த்துக் கொள்ளலாமே?

ஓட்டைப் படகை வைத்துக் கொண்டு உலகம் சுற்றப் போன கதையாய்
முதலில் தங்களுக்குள் இருக்கும் பிரச்சினைகளைச் சுமூகமாய்த்   தீர்த்துக்கொண்டு அதை ஒரு முன்மாதிரியாக வைத்துவிட்டு அல்லவா பிறகு மாநில மத்திய உறவுகளைப் பற்றி பேச வேண்டும் அதுதானே பண்பட்டவர்களின் செயல்பாடு.

அதை விட்டுவிட்டு தங்கள் அதிகாரத்திற்கான அரசியல் அடையாளப் போராட்டங்களை நடத்துவதன் மூலம் கண் துடைப்பு நாடகங்களை போடக்கூடாது.  கதைக்கு உதவாத வெறும் பேச்சு இண்டி கூட்டணி  வேறு… காங் vs சிபிஎம் vs மம்தா என சிக்கல்கள்.

#தமிழகம்-#கேரள_கர்நாடகசிக்கள்கள்
#தமிழகம்

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸட்
6-2-2024.

No comments:

Post a Comment

*Live in joy. Life goes by in the blink of an eye*

*Live in joy. Life goes by in the blink of an eye*. Don't live in upset, angry  or ungrateful. Look for the good, you'll find it. Ch...