Thursday, February 22, 2024

#*இருத்தலுக்கு மாறானபழியான, பிழையான வினைகள் வேண்டாம்*.



————————————
நீங்கள் தான் எதிர்காலத்தை வடிவமைக்கும் சந்ததியினர் எனஅரசியல்வாதிகளிட
மிருந்து, கல்வியாளர்களிடமிருநந்து, பெற்றோர்களிடமிருந்து மற்றும் பொதுமக்களிடமிருந்து நீங்கள் நிச்சயமாக அடிக்கடி கேட்டிருப்பீர்கள் என நான் கூறுகிறேன்.

ஆனால் உங்களை ஒரு புதிய தலைமுறை என அவர்கள் கூறும்போது, அவர்கள் உண்மையில் அந்த அர்த்தத்தில் கூறவில்லை, ஏனெனில் அவர்கள்  சமூகத்தின் பழைய வடிவமைப்போடு நீங்கள் ஒத்துப்போவதை உறுதிபடுத்துகிறார்கள். 

அவர்கள் நீங்கள் ஒரு புதிய,
 வித்தியாசமான மனிதராக இருப்பதை  அவர்கள் உண்மையில் விரும்பவில்லை. அவர்கள் நீங்கள் இயந்திரத்தனமாக இருப்பதை, பாரம்பரியத்துடன் பொருந்தி இருப்பதை, ஒத்துப்போவதை, நம்பிக்கை கொள்வதை, ( மனோரீதியான விஷயங்களில்) அதிகாரங்களை ஏற்பதை விரும்புகிறார்கள் .

அப்படி இருந்தும், நீங்கள் உங்களை பயத்திலிருந்து விடுவித்து இருப்பீர்கள் என்றால்,    தத்துவார்த்தமாக அல்ல, சீர்மையாக அல்ல (Not ideally), வெறுமனே வெளிப்புறமாக அல்ல மாறாக நிஜமாகவே, மனதுக்குள்ளாக, ஆழமாக, அப்போது நீங்கள் ஒரு வித்தியாசமான மனிதராக இருப்பீர்கள். 

அப்போது நீங்கள் வருங்கால தலைமுறையாக ஆவீர்கள்.

 வயதானவர்கள் எல்லாம் பயம் நிறைந்தவர்கள் - மரணபயம், வேலையை இழந்து விடுவோமோ என்ற பயம், மக்கள் தவறாக விமரிசிப்பார்களோ என்ற பயம்.

அவர்கள் முழுவதுமாகப் பயத்தின் பிடியில் இருக்கிறார்கள். ஆகவே அவர்களின் கடவுள்கள், அவர்களின் திருமறைகள், அவர்களின் பூஜைகள் எல்லாம் பயத்தின் களத்தினுள்
 களத்திற்கு உட்பட்டதாகும். 

ஆகவே மனம் விசித்திரமாகத் திரிக்கப்பட்டுள்ளது, திசைதிருப்பப் பட்டுள்ளது.

அப்படிப்பட்ட மனதால் நேராகச் சிந்திக்க இயலாது, தர்க்கரீதியாக, விவேகமாக, ஆரோக்கியமாக காரணகாரியத்தை அறியமுடியாது, ஏனெனில் அது பயத்தில் வேரூன்றி உள்ளது.

பழையத் தலைமுறையைக் கவனியுங்கள், அது அனைத்தையும் பற்றியும் எவ்வளவு பயம் கொண்டுள்ளது எனக் காண்பீர்கள் - மரணத்தைப்பற்றி, நோய் பற்றி, தற்போதைய சம்பிரதாயங்களுக்கு எதிராகப் போவதுபற்றி, வித்தியாசமாக இருப்பது பற்றி, புதியவராக இருப்பது பற்றி...

உயர்ந்து நிற்கும் மரங்கள் எல்லாம்,  என்றோ ஒரு நாள் நிலத்தில் விதையாய் விழுந்தவையே!  இருத்தலுக்கு மாறான பழியான -பிழையான வினைகள் வேண்டாம்.

#வாழ்வியல்
#ksrpost
22-2-2024.

No comments:

Post a Comment