Tuesday, February 20, 2024

*மாதர் குல நாயகி* *பார்வதி கிருஷ்ணன்* *ParvathiKrishnan*

*மாதர் குல நாயகி* *பார்வதி கிருஷ்ணன்* 
*ParvathiKrishnan*
————————————
குமாரமங்கலம் ஜமீன்தாரrன டாக்டர் பி. சுப்பராயன் சென்னை ராஜ்யப் பிரதமராக இருந்தவர்.நேரு மந்திரிசபையில் -  ராஜாஜி மந்திரி சபையில் அமைச்சராக இருந்தவர். பம்பாயில் கவர்னராகவும் பணியாற்றி உள்ளார். Parvathi Krishnan (15 March 1919 – 20 February 2014) was an Indian politician from the Communist Party of India.She was a three time former Member of Parliament representing Coimbatore Lok Sabha constituency and Rajya Sabha member. She was the daughter of former Madras Presidency Premier P. Subbarayan.

 காஷ்மீர் சரஸ்வத் பிராமண குடும்பத்தைச் சார்ந்த ரங்கராவ் ஏழைகளுக்காக வாதாடிய வழக்கறிஞர். இவரது இரண்டாவது மகள் ராதாபாய் முன்னேற்றத்தில் ஈடுபாடு கொண்டிருந்தவர். வாய்ப்புகள் ஏற்படும் போதெல்லாம் பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதுவதோடு மேடைகளில் பெண்களின் முன்னேற்றம் குறித்து பல சொற்பொழிவுகள் செய்தவர். ராதா பாயின் கட்டுரைகளைப் படித்தும் சொற்பொழிவுகளைக் கேட்டும் அவரோடு அறிமுகம் செய்துகொண்டு காதல் வயப்பட்டார் பி சுப்பராயன். இவர்கள் இருவருக்கும் காதல் கைகூடி 1912 ஆம் ஆண்டு மே மாதத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டனர். பி.சுப்பராயன், ராதாபாய் இணையரின் கடைசிப் பெண் குழந்தைதான் பார்வதி.

இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதியாக பதவி வகித்த ஜெனரல் பரமசிவம் குமாரமங்கலம்,நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் தலைவராக விளங்கிய கோபால் குமாரமங்கலம், இந்திராகாந்தி அமைச்சரவையில் அமைச்சராக இருந்த மோகன் குமாரமங்கலம் ஆகியோரின் அன்புத் தங்கை தான் பார்வதி.

 1938இல் இங்கிலாந்தில்பார்வதி படித்துக்கொண்டிருந்த  காலம் தொடங்கி பெருமையோ, ஆடம்பரமோ இன்றி தன்னடக்கம் மிக்க ஒரு மாபெரும் கம்யூனிஸ்ட் தலைவராக விளங்கி வந்த அவர் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற போது அங்கே படித்துக் கொண்டிருந்த என் கே கிருஷ்ணன் என்பவரை 1938 முதல் முதலாக சந்தித்தார்.1939 பாரிஸில் நடந்த பாசிச எதிர்ப்பு மாநாட்டின்போது இருவரும் காதலர்கள் ஆகினர். இந்தியா திரும்பிய பிறகு திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர். 1942 டிசம்பர் 7ஆம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அந்தத்  திருமணம் எவ்வித ஆடம்பரமுமின்றி  ஏ.எஸ்.ஆர். சாரி, ஏ.எஸ். வைத்யா, பார்வதியின் அண்ணன் மோகன் குமாரமங்கலம் சாட்சிகளுடன் பதிவு திருமணம் செய்து கொண்டனர்.திருமணப் பதிவுக்கட்டணம் செலுத்த போதுமான பணமின்றி, பற்றாக்குறை பணத்தை மோகன் குமாரமங்கலமிருந்து பெற்றுச் செலுத்தியதாக  என். கே. கிருஷ்ணன் கூறுகிறார் தனது சுயசரிதையான நம்பிக்கை ஒளி என்ற நூலில். திருமண விருந்திற்கு ஐஸ்கிரீம், டீ வழங்கப்பட்டன. 5 பேர்கள் மட்டுமே இந்த விருந்தில் கலந்துகொண்டனர் திருமணத்திற்கு மறுநாள் இருவரும் கட்சி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் புரோகிதராக டாக்டர் கங்காதர் அதிகாரி இருந்தார். ராஜ் பவனில் பொதுஅறையில் கூட்டம் நடந்தபோது மணமக்களின் உறுதியேற்பிற்குப் பிறகு வந்திருந்த அனைவருக்கும் டீயும் பிஸ்கட்டும் வழங்கப்பட்டன. வெகு எளிமையான  திருமணம் அல்லவா இது. பொதுச் செயலாளராக இருந்த பி.சி. ஜோஷியின் முன் முயற்சியால் அமைக்கப்பட்ட மத்திய பாடல் குழு மற்றும் கதைப்பாடல் குழு ஆகியவற்றின் நிர்வாகியாக பார்வதி கிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். இலண்டனில் தன்னோடு  அறிமுகமாகியிருந்த பால்ராஜ் சஹானி, தமயந்தி ஆகியோரோடு நன்கு பழகி  கம்யூனிஸ்ட் இயக்கத்திற்குக் கொண்டு வந்தார்.

1952 ஜூனில்  நீலகிரி நாடாளுமன்றத் தேர்தலில் கட்சி வேட்பாளராக நின்று வெற்றியை நழுவ விட்டார்.1954 ஏப்ரலில் நாடாளுமன்ற மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். கோவை நாடாளுமன்றத் தொகுதியில் கட்சி வேட்பாளராக நின்று வெற்றி பெற்றார். 1974 இல் நடந்த கோவை நாடாளுமன்ற இடைத்தேர்தலில் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார் இந்திய ரயில்வே தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவராக இருந்தார். 1977ல்  கோவை நாடளுமன்ற உறுப்பினராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.அதன்பிறகு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் கோவை மாவட்டக் குழுவிலும், தமிழ்மாநிலக் குழுவிலும் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு சிறப்பாக செயல் புரிந்தார். கட்சிப்பணி ஆற்றுவதில் இறுதிவரை சளைக்காமல் வாழ்ந்த மாதர் குலத்திலகம் தோழர் பார்வதி கிருஷ்ணனின் நினைவு நாள் இன்று.(20.02.2014 - 20.02.202l) 1970களில் நான் இஸ்கஸ்  அமைப்பில் பொறுப்பில் இருந்த  போது சிபிஐ தலைவர்கள் கோவில்பட்டி சோ. அழகர்சாமி எம்எல்ஏ, மூத்த வழக்கறிஞர் என். டி. வானமாமலை மூலம்  அறிமுகம், பழக்கம் எனக்கு ஏற்பட்டது.

#பார்வதிகிருஷ்ணன் 
#ParvathiKrishnan

#ksrpost
20-2-2024.


No comments:

Post a Comment