Sunday, May 5, 2024

#*இ.ந்.தி.யா தேர்தல்க்கூட்டணி* ⁉️

#*இ.ந்.தி.யா தேர்தல்க்கூட்டணி* ⁉️
•••••
இந்த இ.ந்.தி.யா தேர்தல்க் கூட்டணிகளின் விசித்திரங்களை  எவ்வாறு அணுகுவது என்று மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள் உட்பட இந்திய அரசியலை அறிந்த மிகநுட்பமானவர்கள் உட்பட ஏன் தங்களின் அன்றாட வாழ்க்கையின் ஊடாக  தெருக்களில் நின்று அரசியலைப் பேசி வரும் பொதுமக்கள் வரை குழம்பிப் போய்த்தான் இருக்கிறார்கள்.

இதை எதற்குச் சொல்கிறேன் என்றால் வயநாடு தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பிற்காக நிற்கும் ராகுல் காந்தி
ஏன் இடதுசாரிகள் ஆட்சியில் இருக்கும் கேரளாவில் மீண்டும் மீண்டும் நிற்க விரும்புகிறார்.

அவரை எதிர்த்து அங்கே டி ராஜா அவர்களின் மனைவி கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக போட்டியிடுகிறார். அந்த வகையில் அவர் அங்கே ராகுல் காந்தியைக் கடுமையாக எதிர்த்து விமர்சிக்கிறார். அவரைத் தோற்கடித்து தான் வெற்றி பெற விரும்புகிறார். இதெல்லாம் புரிந்து கொள்ளக் கூடியது தான். 

பிரனாய்ராயும் வயநாட்டில் எப்படியேனும் ராகுல் காந்தியைத் தோற்கடிக்க வேண்டும் என்று தான் உள்ளார விருப்பப்படுகிறார்.

ஆக ஏற்கனவே காங்கிரசிற்கும்  கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் உள்ள முரண்பாடுகள் வய நாட்டில் வெளிப்படுகிறது. சரிதான் காங்கிரசுக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும்  ஆகாது என்று நாம் வரலாற்றுப் பூர்வமாக உணர்ந்துள்ளோம். உண்மையில் கடந்த 60 வருடங்களாக காங்கிரஸை மாற்றி மாற்றி தோளில் தூக்கிச்சுமந்தவர்கள்தான் இந்தியக் கம்யூனிஸ்ட்கள்.

இப்போது நமக்குள் ஒரு கேள்வி எழுகிறது. உத்திரபிரதேசத்தில் எப்பொழுதும் காங்கிரஸின் செல்லத் தொகுதியான ரேபரேலியில் நேரு இந்திரா முதற்கொண்டு அவர்கள் குடும்பமே நாடாளுமன்றத் தேர்தலில் எப்போதும் போட்டியிட்டு ஜெயித்து வந்துள்ளார்கள். 

ஆனால் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அதே ரேபரேலியில் ராகுல் காந்தி காங்கிரஸின் செல்லத் தொகுதியில் போட்டியிட்டு ஸ்மிர்தராணியிடம் தோற்றுப் போகிறார்.

அந்த அச்சத்தின் காரணமாக அவர் கேரளாவில் உள்ள வயநாட்டில் வந்து போட்டியிடுகிறார்… என்று தானே நாம் நினைக்கிறோம். அப்புறம் மீண்டும் நம்மிடம் ஒரு கேள்வி மிஞ்சுகிறது. தமிழ்நாட்டில் திராவிட இயக்கமும் காங்கிரஸ் கட்சியும் ஒன்றுக்கொன்று தழுவிக் கொண்டு கூட்டணி ஏற்படுத்திக் கொண்டதோடு இந்தியா முழுமைக்குமான கூட்டணிலும் பங்கு வகிக்கிறார்கள்.

அப்படியான நெருக்கத்தின் அல்லது நேரு இந்திரா குடும்பத்தின் மீதான அன்பின் பெயரால் தமிழக மக்களின் ஆதரவை பெற்ற ராகுல் காந்தி  தமிழ்நாட்டில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் இ‌‌.ந்.தி.யா கூட்டணியில் இடம் பெற்றுள்ள திராவிட முன்னேற்றக்கழகத்தின் நலலாதரவைப்பெற்று  இணைந்து    போட்டியிட்டு வெற்றி வாய்ப்பைப் பெறலாமே.

அதைவிட்டு விட்டு ஏன் வயநாட்டில் போட்டியிடுகிறார்.

இங்கேதான் நாம் ஒரு உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். பிராந்திய மாநிலக் கட்சிகளின் ஆதரவும் வேண்டும் ஆனால் மத்தியில் காங்கிரஸ் தனி மெஜாரிட்டி பெறவேண்டும். இதுதான் காங்கிரசின் பாசிச மனம்.

அந்தவகையில் அவர் இடதுசாரி அரசியலை ஒழித்துக்கட்டி விட்டு 
இன்றைய வலதுசாரி அரசியலில் கொழுத்து வளர்ந்திருக்கும் திமுகவை தென் மாநிலங்களின் புத்திசாலித்தனமான அதாவது ஒரு ஊழல் அமைப்பை சட்டசபை அதிகாரமாக வளர்த்து வந்திருப்பதை மக்கள் அறியாத அதன் நவீன மோசடிகளை ராகுல் புரிந்து கொள்கிறார். ஏற்கனவே தாங்கள் ஆட்சியில் இருந்தபோது பலவகையிலும் ஊழல் செய்து மாட்டிக்கொண்ட காங்கிரஸின் முட்டாள்தனத்திற்கு பதிலாக எப்படி இவர்கள் விஞ்ஞானப் பூர்வமாக மாட்டிக் கொள்ளாமல்  மாட்டிக் கொள்ளாமல் ஊழல் செய்கிறார்கள் என்றவகையில் மகிழ்ச்சியுடன் திமுகவுடன் இனம் காண்கிறார். அவருக்குத் தமிழ்நாட்டில் திமுக வழியே ஆன ஆதரவு உறுதி செய்யப்பட்டு விட்டது.தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கும் மத்தியில் காங்கிரஸ் வந்தால் நமக்கு அமைச்சரவையில் வாய்ப்பு உண்டு என்பதை மனதில் வைத்திருக்கிறார்.ஆகவே அங்கு போட்டியிடாமல் ராகுல்காந்தி கம்யூனிஸ்ட் மாநிலத்தில் ஒரு பிரதம வேட்பாளர் அந்தஸ்த்தில் புத்திசாலித்தனமாகப்போட்டி இடுகிறார். அது ஒரு புறம் இருக்கட்டும் .

இப்போது நாம் இன்றைய நாடாளுமன்றத்தேர்தல்ப் பார்வைக்கு வந்துவிடுவோம்.

வயநாட்டில் ராகுல் காந்திக்கு எதிராக போட்டியிடும் டி.ராஜா அவர்களின் மனைவியான ஆனி என்ன சொல்ல வருகிறார் என்பதை கேட்டால் உங்களுக்கு நகைப்பு வந்து விடும். 

ஒருவேளை வயநாட்டில் தான் தோற்றுப் போவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று அஞ்சும் ராகுல்காந்தி உபி ரேபரேலித் தொகுயிலும் தனது தாயான இந்திரா காந்தி எப்போதும் இரண்டு தொகுதியில் நின்றது போல   தனது வேட்பு மனுவையும் தாக்கல் செய்துள்ளார்.

அதை ஒட்டி சிபிஎம் சார்பாக வயநாட்டில் நிறுத்தப்பட்டிருக்கும் ஆனி சொல்கிறார்.நான் ராகுல் காந்திக்கு சார்பாக ரேபரேலித் தொகுதியில் அவரது வெற்றி வாய்ப்பிற்கென  அங்கு சென்று பிரச்சாரம் செய்வேன் என்கிறார்.

எனக்குத்தான் புரியவில்லை உங்களுக்கு ஏதேனும் புரிகிறதா? 
கேரள வயநாட்டில் ராகுல்காந்தியைத் தோற்கடிப்பார்களாம்.
உபி ரேபரேலியில் அவரைச்ஜெயிக்கவைப்பார்களாம்.

ஆக மொத்தத்தில் கொள்கைகளோ கோட்பாடுகளோ மக்கள் நலனோ இந்த பாராளுமன்றத தேர்தலில் அதனதன் கூட்டணிகளோடு முன்னிறுத்தப்படவில்லை.

எல்லோருக்கும் பதவி ஆசை மட்டுமே இருக்கிறது அதை வைத்து அரசியல் வியாபாரம்   செய்து தங்களை வளப் படுத்திக் கொள்ளலாம் என்பதே தேர்தல் வெற்றியாகப் பார்க்கப்படுகின்றது என்பதே உண்மை.

குறிப்பாக இ.ந்.தி.யா கூட்டணி தங்களுக்கான மாநில உரிமைகளைக் கேட்கவில்லை.மாறாகப்
 பதவியைப்பெற்று தங்கள் குடும்பத்திற்கான அரச முதலாளித்துவத்தையே தேர்தல் மூலம் சுலபமாகச் பெற்றுக்கொள்கிறார்கள் என்பதையே இங்கு நான் மீண்டும் மீண்டும் முன்வைக்கிறேன்.

#இந்தியாதேர்தல்க்கூட்டணி
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
5-5-2024.


No comments:

Post a Comment