Sunday, May 12, 2024

அதிகாரம் நிரந்தரமில்லை. ‘’ Quality is not an act, it is a habit.”

‘’ Quality is not an act, it is a habit.”  

ஞானபீடம் எழுத்தாளர் ஜெயகாந்தன் சொல்லுவார். “வாழ்க்கை என்பது அந்தந்த நேரத்து நியாயம் தான்” மிகச் சரிதான்.ஆனால் வாழ்வின் அடிப்படை ஒன்றுதான். நாம் நிற்கும் புள்ளி அறம் சார்ந்து மாறாதது. நாம் ஒரு மனிதனாக இருப்பதற்கு வகுத்துக் கொண்ட கொள்கைகளும் சமூகங்கள் குறித்த நமது மானுட அரசியல்ப் பாடுகளும்  விடுதலை உணர்ச்சிகளும்  சுயமரியாதையும்  எப்போதும் மாறாதது.

தமிழ்நாட்டின் அரசியலைப் பொறுத்தவரை என்னை பற்றி சிலர் கூறும் ஒரு குற்றச்சாட்டு என்னவெனில் கே எஸ் ராதாகிருஷ்ணன்
 தடம் மாறி வெவ்வேறு கட்சிகளுக்குப் போனார்.
நிலையான  கட்சி தலைமைக்கு தன்மானம் அற்ற அடிமையாக விசுவாசம் இல்லாததால் அவர் புறக்கணிக்கப்பட்டார் 
என்றே மதிப்பிடுகிறார்கள்.

அதற்கு எனது பதில் என்னவென்றால் நான் உறுதியான அரசியல் மற்றும் கட்சிசார்ந்த கொள்கைகளுக்காக அல்லது ஒரு அரசியல் தவத்திற்காக ஒரு தனி மனிதனுடைய சமூகக் கடப்பாடுகளுக்கும் கடமைகளுக்காகவும் சுயமரியாதையை விட்டுக் கொடுக்க வேண்டியிராத தகுதிக்குரிய மரியாதை தரக்கூடிய அதற்கான இடத்தில் அரசியல்ப் பணி செய்யவே விரும்பினேன். 

அப்படி ஒன்று அங்கு இல்லை எனில் அதை விட்டு வெளியேறி மாற்று கட்சிகளில் இணைந்து எனது கடமையை அதாவது நான் எதற்காக இன்னொரு கட்சிக்கு மாறினேனோ அல்லது அந்த கட்சி தன்னை உண்மையாக மக்கள் நலனில்  தம்மை ஈடுபடுத்திக் கொண்டதாக
 எப்போது பிரகடனப்படுத்தியதோ  அந்த கட்சிக்காக அதன் செயல்பாட்டின் மீது நம்பிக்கை வைத்து அதற்கென
 தீவிரமாக உழைத்துக் கொடுத்து இருக்கிறேன். அதற்கு பதிலாக எந்த சுயத்தை இழந்து அரசியல் கட்சி சார்ந்த பதவியை நான் எதிர்பார்க்கவில்லை. அல்லது சுயநலத்திற்கான இழிந்த செயல்கள் ஏதும் செய்யாமல் அங்கு ஒரு தவத்தை போல சரியோ தவறோ நான் சாந்த இடத்திற்கான  அரசியல் வாழ்க்கையை மேற்கொண்டு வருகிறேன். அங்கும் எனக்கு நியாயம் கிடைக்கவில்லை எனில் நான் அதை பற்றிக் கவலைப்படவும் இல்லை. எவ்வளவு நம்பிக்கையானவர்களும் கூட என்னைக் நன்றி மறந்து கைவிட்டு இருக்கிறார்கள்.

வெறும் விசுவாசத்தை மட்டும் காட்டிக் கொண்டு காலடியில் அடிமையாக நக்கிக் கொண்டு எல்லா பதவிகளையும் எப்படித் தந்திரமாக பெறுவது அதை வைத்து வாழ்க்கையை எப்படி வளமாக்கிக் கொள்வது என்பதற்காக எந்த மோசமான செயலையும் நான் சுயமரியாதையைக் கைவிட்டுச்செய்யவில்லை. செய்யப் போவதுமில்லை. 

இன்றைய ஆட்சியாளர்கள் தங்களை மோசமான முறையில் முன்னர் காலத்தில் விமர்சித்த மிக கேவலமான முறையில் ஈழத்தின் முள்ளிவாய்க்கால் என பல விவகாரத்தில் அவமானப்படுத்திய புழுதி வாரி தூற்றிய பலரையும் தங்கள் மடியில் தூக்கி வைத்துக் கொண்டு இன்று கொஞ்சிக் கொண்டிருக்கிறார்கள். 
இது ஒரு கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். உண்மையைச் சொன்னால் இன்றைய ஆட்சியாளர்கள் என்று சொல்லக்கூடிய திமுகவின் அதிகாரத்திற்கு எதிராக மத்திய மற்றும் மாநில முரண்பாடுகளில் பலசோதனைகள் வந்த  பதட்டமான நேரங்களில் நான் அதன் சட்ட சிக்கல்களை என பலவற்றை தீர்த்து கொடுப்பதில்  எப்பொழுதும்; teso1&2 என பல விடயங்களி்ல் கலைஞர் காலத்திலும் அதன பின்னும், முன்னால் நின்று பக்கபலமாக இருந்திருக்கிறேன். அது ஐநா சபை வரை இன்றைய முதல்வர் ஸ்டாலின் பேசவும் லண்டன்  வரை அழைத்துப் போய் அங்கே பேச வைத்தது வரை என் உதவியினால் நடந்திருக்கிறது. ஒரு வழக்கறிஞர் மற்றும் சர்வதேச பிரச்சனைகளை எவ்வாறு அணுக வேண்டும்   என்பதை வாழ்நாள் முழுக்கப் பல நூல்களை கற்று அறிந்தவன் பல பொதுநல வழக்குகள் ஈடுபட்டவன்  என்கிற முறையில் என்னைப் பயன்படுத்திக் கொண்டு இறுதியில்  ஏதோ ஒரு அர்த்தமற்ற சாக்கு போக்குகளைச் சொல்லி வெளியே நிறுத்தி வைத்து விட்டு இப்போது தங்களைச் சுற்றி முட்டாள்களை மட்டும் சேகரித்துக் கொண்ட இவர்களுக்கு  இப்பொழுது அந்த ஞாபகங்கள் ஞானங்கள் எல்லாம்  தேவையில்லைதான்.

ஆனால் இன்றைக்கு தன்னை எதிர்த்தவர்கள் தன்னை விமர்சித்தவர்கள் எல்லோரரையும் அழைத்து பக்கத்தில் வைத்துக் கொண்டு அவர்கள் தங்களுக்கு விரோதமாக செயல்பட்டவர்கள் என்று தெரிந்தும் கொண்டு மடியில் வைத்து கொஞ்சிக் கொண்டிருப்பது மிக மோசமான நடத்தை என்றே சொல்ல வேண்டி இருக்கிறது.இது ஒரு அரசியல் அதிகாரத்தை அருவருப்பாகச் சுருக்கக் கூடியது. மிக கேவலமான சுயநலவாதிகளின் கும்பல் அரசியல் தான் மேற் சொன்ன வகையில் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.

எத்தனையோ அரசியல் மகான்களையும் வாழ்க்கையை தத்துவமாகவும் அரசியலைப் புனிதமாகவும் நடத்தியவர்கள் இந்த பூமியில் பிறந்திருந்தார்கள். அவர்களின் வரிசையில் அதன் கடைக்கோடியில் இருக்கவே விரும்புகிறேன்.

அரசியலைத் தவமாக மேற்கொண்ட ஒருவன் ஒருவரை இந்திரன் சந்திரன் என்று புகழ்ந்து உண்டு அவருக்கு கீழே அடிமையாக இருக்க விரும்ப மாட்டான். அப்படியான பழக்கம் எனக்கு ஏதுமில்லை! அந்தந்த நேரத்தை நியாயங்கள் என்பது அந்தந்த நேரத்தின் அறங்களை சார்ந்தது. அந்த வகையில் ஒரு மனிதன் ஒரு தவத்தை போன்ற உறுதிப்பாடுகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது என்பதுதான் அரசியல் தத்துவ மெய்யியல். 

அந்தக் கட்சியில் இருந்தாலும் பதவி இந்த கட்சியில் இருந்தாலும் பதவி என்று கட்சி மாறி  ஜால்ரா அடித்து பயணிப்பவர்களைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. அவர்களுக்கு கட்சியிலோ அரசியலிலோ கொடுக்கும் முக்கியத்துவததை மதிக்கவும் மாட்டேன்.

அரசியலைக் கண்ணே போல பாவிக்கிற என்னிடம் நீங்கள் கட்சிகளுக்குள் மாறி மாறி பயணித்தீர்கள் என்று சொல்லுகிறவர்கள் எனக்கு ஏதேனும் பதவியை கொடுத்து அதை பயன்படுத்திக் கொண்டு இப்போது இருப்பவர்களைப் போல சுயநலமாக வெவ்வேறு கட்சிகளுக்கு மாறி இருந்தால் மட்டுமே என்னை பழி சொல்ல வேண்டும். 

மற்றபடி என்மீது எந்தக் குற்றச்சாட்டையும் யாரும் வைக்க முடியாது அப்படி வைத்தார்கள் என்றால் என் செருப்பு தான் பாரதிதாசன் சொன்ன மாதிரி வந்து அடிக்கும். என் அரசியல் அனுபவத்திற்கும் நடத்தைகளுக்கும் செயலுக்கும் மரியாதை தெரியாதவர்கள் தராதவர்கள் ஒன்றும் புரியாத நேற்று பிறந்தவர்கள் எல்லாம் என்னிடம் வந்து மோதிப் பார்க்க வேண்டாம்.

ஒன்றும் தெரியாதவர்கள் எல்லாம்  அதிகாரத்தை வைத்துக் கொண்டு என்னிடம் வந்து உரசி பார்த்தால் போய்யா என்று தூக்கி போட்டுவிட்டு வந்து விடுவேன்.  மட்டுமல்லாமல் என்னை சீண்ட முயன்றால் அதற்கு பதிலாக என் செருப்பு தான் பேசும். சுயமரியாதை யாருக்கும் முக்கியம். 

நம்மை கவனித்து அன்பு காட்டுவர்களை மட்டும் கவனியுங்கள். அவர்களிடம் பேசுங்கள்… மற்றவர்களை பற்றி சிந்திக்க கூட வேண்டாம். ‘பிறவற்றை’ஒதுக்கி தள்ளுங்கள்’  என்பது என் நெறி.

அதிகாரம் நிரந்தரமில்லை.. ஆணவத்துல ஆடுறவன் எல்லாம் ஓடி ஒளிந்து கூப்பில் உக்காரும் காலம் வரும் ..! 

எது நடந்ததோ அது நன்றாக நடக்கவில்லை என்றாலும் என் பணி தொடர்கிறது….
••••••••••••
"என்றேனும் நான் செத்துப்போனதாய் கேள்விப்பட்டால்,
ஓடிவந்து திகைத்து நிற்காதே..
செத்து போனதை உறுதி செய்ய
இசிஜி எடுத்து பார்க்காதே..
நாடி பிடித்தும் பார்க்காதே..
மாறாக,
அழுது கொண்டிருக்கும் 
குடும்பத்தினருக்கு கேட்காதவாறு 
என் காதருகே வந்து
ஒரு பயணம் போவோமா
என கேள்..
பதில் இல்லையென்றால் 
அது மரணம்தான்.."
-இலியாஸ் தருவண..
(மலையாள கவிஞர்)..

#ksrpost
#கே௭ஸ்ஆர்போஸட்
12-5-2024.


No comments:

Post a Comment

*Life is a series of natural and spontaneous changes*.

*Life is a series of natural and spontaneous changes*. Don't resist them that only creates sorrow. Let reality be reality. Let things fl...