Monday, May 20, 2024

#வாழ்க்கையை வியப்பாக பார்ப்பவருக்குத்தான் அது உற்சாகமாக இருக்கும்.

#வாழ்க்கையை வியப்பாக பார்ப்பவருக்குத்தான் அது உற்சாகமாக இருக்கும்.  யாரால் வாழ்க்கையை வியப்பாக பார்க்க முடியும் தெரியுமா?  இடைவிடாமல் கற்றுக் கொள்பவருக்குத் தான் வாழ்க்கை வியப்பாக இருக்கும்.  யாரால் இடைவிடாமல் கற்றுக் கொள்ள முடியும்? உலகத்தில் ஏற்படும் எல்லா நிகழ்வுகளை பற்றி தனக்குத் தெரிய வேண்டும் என்று ஆசைப்படுகிறவர்களால்தான் கற்றுக்கொள்ள முடியும்.  கற்றுக்கொள்ள கற்றுக்கொள்ள, அனுபவிக்க அனுபவிக்க, உள்ளே ஒரு நிறைவு வரும்.  போதும் என்கிற மனம் வரும்.  அந்த நிறைவு வரும் வறை கற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். 
                                    
 -#பாலகுமாரன்

"பிறப்பும் சாவும் மட்டுமே உண்மையில் இரண்டு முகங்கள்.நடுவில் வெறும் எண்ணங்கள்.பிறப்பது எதற்கு? வாழ்வது எதற்கு?சாவுக்கு பின் உயிர் எங்கே போகிறது?பிறப்பு என்பதே பொருளற்றுப் போகும்போது பிறப்புக்கு காரணமானவருக்கு என்ன பொருள் இருக்கப் போகிறது. அவருக்கு அடைக்கப்பட வேண்டிய கடனாக எதுதான் மிஞ்ச போகிறது?"
- #பருவம்

“Hell is empty and all the devils are here.” 
― #Shakespeare
(The Tempest)

போலியாக இருக்க தான் நிறைய மெனக்கெட்டு நடிக்கணும். உண்மையா இருக்க நாம நாமாக இருந்தாலே போதும்...

பாராட்டு, விமர்சனங்கள், பழி இவற்றை காதில் வாங்காமல்  நகருங்கள். காதில் வாங்கினால் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை தவற விடுவீர்கள்.

தழும்புகள் காயத்தை நினைத்து வருத்தப்படுதவற்காக அல்ல. அந்த காயத்தை கடந்து வந்ததற்கு பெருமைப்படுவதற்காக.

மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று, தேவையில்லாமல் நாமே நமக்குள் நினைத்துக் கொள்ளும் ஒரு கண்ணோட்டம் மிகவும் தவறானது.
நம்மைப் பற்றிய நம் கண்ணோட்டத்தை விட, மற்றவர்கள் கண்ணோட்டத்திற்கு, நாம் பெரிதாக மதிப்பளிக்க ஆரம்பிக்கும் போதே,

நாம் மனதளவில் நம்மைத் தாழ்த்திக் கொள்ளத் துவங்கி விடுகின்றோம்.. நாம் செய்யும் செயல்களையும்,அதன் விளைவுகளையும் மறந்து, அடுத்தவர்களின் எண்ணத்திற்கு அதிக மதிப்புக் கொடுப்பதால்,நம் செயல்கள் முழுதாக நடைபெறாமல், அதனால் மனம் புழுங்குவது வழக்கமாகி விட்டது.

முன்னேற நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியை இந்த எண்ணம் சாகடித்து விடும்.முளையிலேயே முயற்சி சாகடிக்கப்படுவதால், முன்னேற்றம் எங்கிருந்து வரும்?இந்தப் பயத்திலேயே பலர் மற்ற தகுதிகளை, திறமைகளை கைவிட்டு விடுகின்றனர்.இந்த அச்சம் இருந்தால், படைப்புத் திறனோ, முன்னேற வேண்டும் என்கிற உந்துதலோ இருக்காது.

மற்ற தடைகளை வரிசையாகக் களைய வேண்டும்...மனதில் ஆழப் பதிந்துள்ள எதிர்மறை எண்ணம், தாழ்வு மனப்பான்மை, பயம், தயக்கம், ஒப்பீடு என்று அனைத்தில் இருந்தும் வெளிவர முயற்சி செய்ய வேண்டும்.

வெற்றியை நோக்கி செல்லும் பயணத்தில், பிறர் கருத்துகளையும், அதிருப்தியையும் சமாளிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.பிறர் உங்களைக் குறை கூறும் போது, சோர்ந்து போகாதீர்கள்;
பிறர் இப்படி இருக்கின்றனரே என்று, உள்ளுக்குள் பொறுமாதீர்கள். இருக்கும் நிலையை ஏற்றுக் கொள்ளுங்கள்; தீர்வு காணுங்கள்.இந்த உலகம் உங்களைப் பார்க்கிற விதம் ஒவ்வொரு நாளும் மாறிக் கொண்டே இருக்கும்.
சிலருக்கு இன்று உங்களைப் பிடிக்கும். நாளையே அவர்களுக்கு பிடிக்காமலும் போகலாம்.மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று யோசித்துக் கொண்டிருந்தால் நம்முடைய வாழ்க்கையை நாம் வாழ முடியாது".

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
20-5-2024


No comments:

Post a Comment

*Life is a series of natural and spontaneous changes*.

*Life is a series of natural and spontaneous changes*. Don't resist them that only creates sorrow. Let reality be reality. Let things fl...