Thursday, May 23, 2024

*தொடரும் வாரிசு அரசியல் பரிதாபங்கள்*.

*தொடரும் வாரிசு அரசியல் பரிதாபங்கள்*.

*தேவகவுடாவின்* பேரன் பிரஜ்வல் எச் டி ரேவண்ணா  பெண்ண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளின் பேரில் அவருக்கு தேவகவுடா ஊடகங்களில் பகிரங்கமாக எச்சரிக்கை விடுகிறார்.

குறிப்பிட்ட நாட்களுக்குள் பிரஜ்வல் ரேவண்ணா வந்து சேராவிட்டால் குடும்பப் பாத்தியதை
களில் ஒருபோதும் இனித் தலையிட முடியாது என்றும் குடும்பத்திற்குள் அவருக்கு எதிராகப் பகையை உருவாக்குவேன்
 என்றும் கோபமாகக் குறிப்பிட்டுள்ளார். முதல் அமைச்சராகவும் ஒருமுறை பிரதமராகவும் இருந்த அவருடைய குடும்ப நிலை இதுதான்.

இதே போலத்தான் கலைஞர் ஒரு முறை மு க அழகிரியைத் தனது மகனே இல்லை என்று சொன்னார்! 

அக்காலத்தில் பிரதமராக இருந்த நேரு கூட தனது மருமகனாகிய பெரோஸ் காந்தியை எனக்கு அவர் மருமகனே அல்ல! இந்திரா காந்தி மட்டுமே ஒரே ஒரு மகள் என்று சொல்லி  தனது மருமகன் மீதான வெறுப்பை வெளிப்படுத்தினார். 

சமாஜ்வாதி கட்சியிலிருந்து உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவை 6 ஆண்டுகளுக்கு நீக்கம் செய்து அக்கட்சி தலைவரும், அகிலேஷின் தந்தையுமான முலாயம் சிங் உத்தரவிட்டிருந்த நிலையில், பதிலுக்கு எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடத்தினார் அகிலேஷ் யாதவ் குடும்பம் ஆதிக்க அரசியல் தராது.

காஷ்மீர் முதல்வர் போட்டியில் பரூக் மற்றும் அவரின் மகன் உமரோடு பிரச்சனை…. என பல நிகழ்வுகள் உண்டு.

இப்படியான அரசியல் பிரபலங்களின்  குடும்பங்களில் ஏற்பட்டு வரும் மதிப்பீட்டுச் சரிவு ஒருபுறம் இருக்க
தங்களது வாரிசுகளின் கட்டுப்பாடற்ற செயல்களின் மூலம் அடையும் வேதனை மறுபுறமாக இருக்கிறது. 
அவர்களைத் தொடர்ந்து தங்களது வாரிசுகளாக அரசியலில் ஈடுபடுத்திச் செல்லம் கொடுத்து வந்ததன் வினையை இன்று அனுபவிக்கிறார்கள். 

இவைதான் இன்றைய இந்திய நாட்டின் அரசியல் நிலைமைகள்!
கொள்கை கோட்பாடு மக்கள் நலம் அதற்கான திட்டங்கள் என்பதையெல்லாம் குடும்பம் என்று வருகிற போது  தள்ளி வைத்துவிட்டு 
குடும்பத் தவறுகளை மூடி மறைத்துக் கொண்டு வருவது அரசியலில் மிகுந்த அபத்தமாக இருக்கிறது. 

தொடரும் வாரிசு அரசியல் பரிதாபங்கள்.

#கேஎஸ்ஆர்போஸ்ட் 
#ksrpost
23-5-2024,


No comments:

Post a Comment

*Life is a series of natural and spontaneous changes*.

*Life is a series of natural and spontaneous changes*. Don't resist them that only creates sorrow. Let reality be reality. Let things fl...