Friday, May 24, 2024

#*FAMILY DYNASTICPOLITICS* # *வாரிசு அரசியல்*

#*FAMILY
DYNASTICPOLITICS*
# *வாரிசு அரசியல்* 
••••••
நியுயார்க் டைம்ஸ் ஆங்கில பத்திரிகைச் செய்திகளை இணையத்தில் வாசித்த போது அதில் உலக மற்றும் இந்திய அரசியல் நிலைமைகள் குறித்த அவதானங்களை
வெளியிட்டு இருந்தார்கள்.

பெரும்பாலும் இந்திய அரசியல் தலைவர்கள் தங்களது வாரிசுகளை தங்களின் குடும்பத்தின் 
பொருட்டோ சில நம்பிக்கைகளின் பொருட்டோ தாங்கள் பதவிவில் இருக்கும் போதே அவர்களை முன்னிலைக்கு கொண்டு வந்து நிறுத்துகிறார்கள்.

அது தகுதி அடிப்படையில் இருந்தால் கூட பரவாயில்லை . உண்மையில் அது வாரிசு அடிப்படையிலேயே தான் குடும்பச் சுயநலமாய் நிகழ்கிறது. என்பது ஒருபுறம் இருக்க 

இப்படியான வாரிசு அரசியல் களால் இந்திய அரசியலின் ஸ்திரத்தன்மை பாதிக்கப்படுகிறது என்பதோடு இந்திய அரசியல் கட்டமைப்புக்கு பலவகையான கோளாறுகள் ஏற்பட்டு விடுகின்றன. 
ஏனெனில் இந்த வாரிசு அரசர்கள் ஏதோ 
தாங்களுக்கு வாழ கிடைத்த தன்னுடைய சுயநலத்திற்கு கிடைத்த பதவி என்றும் அதிர்ஷ்டம் என்றும்
 அதைக் கருதுகிறார்கள். அதன் அடியில் மனம் போன போக்கில் சில ஏக போக முடிவுகளை எடுத்து அதற்கான சட்டம் அரசு போன்றவற்றையும் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இது அவர்களை முன்னெடுத்துக்கொண்டு வந்த அவர்களது தந்தைமார்களின் வாழ்க்கையில் பெரும் சிக்கலை உண்டாக்குகிறது.(உ-ம் தேவ கவுடா,  மு.க. அழகிரி என பலர் ……)
இது பொதுவாக வெளியில் தெரிவதில்லை. 

சில நேரம் இந்த வாரிசுகள் தங்கள் தந்தைகளையே வீட்டு சிறையில் வைத்து தான் சொன்னபடி தான் கேட்க வேண்டும் என்கிற அதிகாரச் சிக்கலையும் உண்டாக்குகிறார்கள். .நான் பெயரைச் சொல்ல விரும்பவில்லை உத்தரப்பிரதேசத்தில் 
இப்படித்தான் நடந்தது.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இதுதான் அரசியல் நிலைமை.

இப்படியான குடும்ப சிக்கல்கள் கிடையே இந்தியா முழுக்க 

 இருக்கக்கூடிய மாநிலங்களில்
 உள்ள தலைவர்கள் எப்படி நாட்டை வழி நடத்துவார்கள். இத்தகைய வாரிசு அரசியல் போக்குகள் தான் இந்தியாவின் பெரும் அரசியல் நோயாக சீரழிவாக மாறிக்கொண்டிருக்கிறது.

அத்தனை குடும்ப அரசியலும் மிக அவலமாக இப்போது வெளிவந்து கொண்டிருக்கிறது.  அந்த குடும்பங்களில் மகிழ்ச்சி இல்லை..

 
*FAMILY & DYNASTIC POLITICS*
The patriarchs of most political parties in India routinely anoint their sons and daughters as their successors. While this creates some displeasure and even rebellion among the rank and file even eroding the party's cadre strength in the short term, such acts also upset the unity in their houses. There was even a case of a son locking up his 'party leader' father in a room after becoming his successor so he has not even his father look over his shoulder. Sibling rivalry also puts parents in a fix who wring their hands helplessly.

#FAMILY_DYNASTICPOLITICS*
#வாரிசுஅரசியல்
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
24-5-2024.


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...