Thursday, June 12, 2025
#கோ_வெங்கடாசலபதி
இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு 1931 மற்றும் 1942 ஆம் ஆண்டுகளில் கைதானவர் தனது ஊரில் கிராம ஊழியர் சங்கத்தை ஏற்படுத்தியவர்.
அதை அவரது நண்பரும், சுதந்திரப் போராட்ட வீரரருமான கர்மவீரர் காமராஜர் துவக்கி வைத்தார். 1937 ஆம் ஆண்டில் மதுரை ஜில்லா போர்டு துணைத் தலைவரானார் தியாகி கோ வெங்கடாசலபதி.
தே.கல்லுப்பட்டியில் 1940 ல் காந்தி நிகேதன் ஆசிரமத்தைத் துவக்கினார்.
காந்தியின் அறிவுரைப்படி 1946 ல் ஆரம்பப்பள்ளி துவக்கப்பட்டது. பின் 1953ல் உயர் ஆதாரக் கல்வி பள்ளியாக உயர்ந்தது.
தமிழக முதல்வராக இருந்த ஓ.பி.ராமசாமி ரெட்டியார், அரசின் ஊரக வளர்ச்சித்துறை கமிஷனராக கோ வெங்கடாசலபதியை நியமித்தார். கிராமங்களின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்காக "பிர்கா வளர்ச்சி' எனும் திட்டத்தை செயல்படுத்தினார்.
சென்னை கிராமப் பஞ்சாயத்து சட்டத்தை (1950) நடைமுறைப்படுத்துதல், பஞ்சாயத்துக்களுக்கு அதிக அதிகாரங்கள் வழங்கிய சென்னை மாநில பஞ்சாயத்துச் சட்டம் உருவாவதிலும் (1958) முக்கியப் பங்கு வகித்தார்.
இந்தியாவின் முதல் ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத், பூமிதான இயக்க நிறுவனர் வினோபா பாவே, ஜெயபிரகாஷ் நாராயணன், கிருபளாணி, பக்தவச்சலம் மற்றும் பல்வேறு தலைவர்கள், கவர்னர்கள் இவர் தொடக்கிய காந்திநிகேதன் ஆசிரமத்திற்கு வந்துள்ளனர்.
இந்த ஆசிரமத்தின் மூலம் கிராமங்களில் கிடைக்கும் மூலப்பொருட்களை கொண்டு கதர், தேனீ வளர்ப்பு, மட்பாண்டம், பனை வெல்லம், கைக்குத்தல் அரிசி, கைக்காகிதம், தோல் உற்பத்தி உட்பட பல தொழில்கள் உருவாக்கப்பட்டு பலருக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது.
#know_about_freedom_fighters
Subscribe to:
Post Comments (Atom)
அகழவாராய்ச்சியைப் பொறுத்தவரை #கீழடி மட்டும் முக்கியமானது அல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடந்திருக்கிறது!
அகழவாராய்ச்சியைப் பொறுத்தவரை #கீழடி மட்டும் முக்கியமானது அல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடந்திருக்கிறது! குறிப்பாக வையா...

-
நேற்று விடுதலைச் சிறுத்தைக் கட்சியினர் மதுவிலக்கு மாநாட்டை நடத்தியுள்ளனர். அதில் திமுகவும் கலந்து கொண்டது வேடிக்கை⁉️ திமுகவை அழைத்து மதுவிலக...
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
#திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களே ———————————————————- காங்கிரஸ் தலைவர் மல்லிகா அர்ஜுன் கார்கே இன்னொரு மன்மோகன் சிங் என்று நான் twitter பதிவு ...
No comments:
Post a Comment