இந்தியாவில் முடியாட்சி வீழ்த்தப்பட்டு தேர்தல் ஜனநாயகம் வந்தப்பின்னர், ஆணை, உத்தரவு போன்ற மன்னராட்சி கால வார்த்தைகளை கட்சிகள் 1990 வரை தவிர்த்து வந்தன.
கம்யூனிஸ்ட் கட்சிகள், காங்கிரஸ், பாஜக, சுதந்திரா, பிஎஸபி - எஸ எஸ்பி சோஸிலிஸட்கள,திமுக, அதிமுகவில் எம்ஜிஆர் காலம் வரை இதுபோன்ற வார்த்தைகள் இருந்ததில்லை, ஜெயலலிதா காலத்தில் எனது ஆணைக்கிணங்க, உத்தரவுக்கிணங்க என்ற வார்த்தைகள் புதிதாக வந்தன.
தேர்தல் ஜனநாயகத்தில் மக்களாட்சியை, வாக்குகளை நம்பி அரசியல் செய்யும் இவர்கள் கட்சியில் மட்டும் ஆணை, உத்தரவு என அறிக்கைகள் வருகிறதே.
இது என்ன மன்னர் ஆட்சி காலமா? கட்சி நடத்துகிறீர்களா ஆட்சி அரியணை அதிகாரம் செய்கிறீர்களா? இதில் மன்னராட்சி என விமர்சனம் செய்துக்கொண்டே ஆணை, உத்தரவுன்னு அறிக்கை வருகிறது கேலிக்கூத்தாக அல்லவா இருக்கிறது.
சகஜமாகி விட்டது.
No comments:
Post a Comment