Tuesday, June 17, 2025

#*தமிழக அகழ்வாய்வு* #*Keezhadi* #*Tamilnadu Archeology*

#*தமிழக அகழ்வாய்வு*
#*Keezhadi* #*Tamilnadu Archeology*
——————————————


*திருநெல்வேலி ஆதிச்சநல்லூர் அகழாய்வு தான் தமிழ்நாட்டிலேயே முதன்மையான ஆய்வு*. சத்தியமூர்த்தி குழுவினர் தீவிரமாகச் செயல்பட்டு ஆதிச்சநல்லூரில் கிடைத்த முதுமக்கள் தாழி மற்றும் ஆபரணங்கள் நாணயங்கள் யாவற்றையும் முழுமையாக பல்வேறு இடங்களில் சேகரித்துத் தொகுத்து மத்திய அரசுக்கு மன்மோகன் சிங் பிரதமராய் இருந்த காலத்தில் அனுப்பி வைத்தார்கள்..

மத்திய அரசு காங்கிரஸ் காலத்தில் 10 15 ஆண்டுகள் அதை வெளியிடாமலே தாமதித்து வைத்திருந்தது!.

கீழடி ஆய்வும் மிக முக்கியமானது தான். தமிழரின் தொன்மையைச் சொல்லுகிற அந்த ஆய்வு இன்னும் விரிவாக எடுத்தாளப் பட வேண்டும்.. சங்கம் வளர்த்த   மாமதுரை தமிழ்க் கலாச்சாரங்களின் நகரம் என்பதும் உண்மைதான்.     தமிழ்நாட்டில் எங்கெங்கெல்லாம் அகழாய்வு நடக்கிறதோ அவை அனைத்தும் மிக முக்கியமானதும் வரலாற்று பூர்வமானதும் மனித நாகரிகங்கள் பற்றிய கூடுதல் அறிவுப் பெருக்கம் காண ஏதுவானது தான்! அவை அனைத்தும் தமிழ் மண்ணுக்கான பெருமை தான் மறுக்கவில்லை! 

வரலாற்று அறிஞர்கள் சத்திய நாத ஐயர் ரங்கசாமி ஐயங்கார் கே ஏ நீலகண்ட சாஸ்திரி அவர்கள் மட்டுமல்லாமல் வையாபுரி பிள்ளை சேதுப்பிள்ளை தெ பொ மீனாட்சி சுந்தரனார் போன்றவர்கள் ஆதிச்சநல்லூர் ஆய்வுதான் மிக முக்கியமானது அது சீரிய முறையில் தமிழர் பண்பாட்டையும் அவர்கள் தொன்மத்தையும் விளக்கும் வகையில் இருக்கிறது என்று சொன்ன பிறகும் இன்று அந்த ஆதிச்சநல்லூர் ஆய்வு மிக மந்தமாக அல்லது கவனிப்பாரற்று  நடந்து கொண்டிருக்கிறது. இது நெல்லையில் வாழ்பவர்களுக்கு சற்று வேதனை தரக்கூடியதுதான் என்னிடம் பலரும் இது பற்றி எடுத்துரைத்தார்கள்!

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை தனியாகவும் மற்றும் இந்தியத் தொல்லியல் துறையுடன் இணைந்தும், தமிழ்நாட்டில் முப்பது இடங்களில் தொல்லியல் களங்களை அகழ்வாய்வு செய்துள்ளது.

 ஆதிச்சநல்லூர் தொல்லியல் களம் - ஆண்டு 1876
ஆனைமலை,கோயமுத்தூர் மாவட்டம், ஆண்டு, 1969
கோவலன் பொட்டல்,மதுரை மாவட்டம், 1980
திருத்தங்கல், விருதுநகர் மாவட்டம், 1994 – 1995
தேரிருவேலி,இராமநாதபுரம் மாவட்டம், 1999 – 2000
கொடுமணல் தொல்லியற் களம்,, ஈரோடு மாவட்டம், 1992-1993, 1996–1997 & 1997-1998
மாங்குடி,திருநெல்வேல மாவட்டம், 2001 – 2002 
வசவசமுத்திரம் தொல்லியல் களம், காஞ்சிபுரம் மாவட்டம், 1969 – 1970
கரூர்,கரூர் மாவட்டம், 1973 – 1979 & 1994 – 1995
அழகன்குளம் தொல்லியல் களம், இராமநாதபுரம் மாவட்டம், 1986-1987, 1990–1991, 1992-1993, 1994-1995, 1996–1997 & 1997- 1998
கொற்கை அகழாய்வுகள் , தூத்துக்குடி மாவட்டம், 1968 – 1969
தொண்டி , இராமநாதபுரம் மாவட்டம், 1980
பல்லவமேடு தொல்லியல் களம் , காஞ்சிபுரம் மாவட்டம், 1970 – 1971
போளுவம்பட்டி தொல்லியல் களம், கோயம்புத்தூர் மாவட்டம், 1979 – 1980 & 1980 – 1981
பனையகுளம், தருமபுரி மாவட்டம், 1979 – 1980
பூம்புகார், நாகப்பட்டினம், 1994 – 1995 & 1997 – 1998
திருக்கோவிலூர் , விழுப்புரம், விழுப்புரம் மாவட்டம், 1992 – 1993
மாளிகைமேடு, கடலூர் மாவட்டம், 1999 – 2000
பேரூர், கோயம்புத்தூர் மாவட்டம், 2001 –2002

குரும்பன்மேடு,, தஞ்சாவூர் மாவட்டம்1984
கங்கைகொண்ட சோழபுரம், அரியலூர் மாவட்டம், 1980 – 1981 & 1986 – 1987
கண்ணனுர் , துறையூர் ஊராட்சி ஒன்றியம், திருச்சிராப்பள்ளி மாவட்டம், 1982 – 1983
பழையாறை , தஞ்சாவூர் மாவட்டம், 1984
பாஞ்சாலங்குறிச்சி, தூத்துக்குடி மாவட்டம், 1968 - 1969
சேந்தமங்கலம், கள்ளக்குறிச்சி மாவட்டம் 1992 – 1993 & 1994 – 1995
படவேடு, திருவண்ணாமலை மாவட்டம், 1992 – 1993

ஆண்டிப்பட்டி,திருவண்ணாமலை மாவட்டம், 2004-2005
மோதூர், தருமபுரி மாவட்டம்,
மரக்காணம், விழுப்புரம் மாவட்டம், 2005-2006
பரிகுளம்,திருவள்ளூர் மாவட்டம், 2005-2006
நெடுங்கூர் கரூர் மாவட்டம், 2006-2007
மாங்குளம், மதுரை மாவட்டம், 2006-2007
செம்பிகண்டியூர், நாகப்பட்டினம் மாவட்டம், 2007-2008.
தரங்கம்பாடி, - நாகப்பட்டினம் மாவட்டம்
கீழடி அகழாய்வு மையம் -சிவகங்கை மாவட்டம் 2015 - 2019
மயிலாடும்பாறை தொல்லியல் களம் - கிருஷ்ணகிரி மாவட்டம் 2022 -
துலுக்கர்பட்டி தொல்லியல் களம் - திருநெல்வேலி மாவட்டம் 2022 -
வெம்பக்கோட்டை தொல்லியல் களம் - விருதுநகர் மாவட்டம் - அகழாய்வுப் பணிகள்
பெரும்பாலை தொல்லியல் களம் - தருமபுரி மாவட்டம் -

ஆகிய பல்வேறு இடங்களிலும் கீழடியைப் போலவே அகழாய்வுகள் இன்றைய திமுக ஆட்சியில் முதல்வர் ஸ்டாலின் காலத்தில் தொடர்ந்து ஏன் நடைபெறவில்லை அல்லது ஏன் மந்தமாக இருக்கிறது. கொடுமணல் பழைய காலத்தில் கிரேக்கர்கள் கடாரத்தார் சாவகர்கள் எனப் பலரும் வந்து போன வணிக இடம்.

ஆதிச்சநல்லூர் அகழாய்வு மீண்டும் சிறப்பான முறையில் நடக்க வேண்டும் என்பது நெல்லை மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது! இதையேதான் ஈழத் தமிழர்களும் நான் இலங்கை சென்ற போது  என்னிடம் கூறினார்கள்! கீழடி ஆய்வு எவ்வளவு முக்கியமோ அதை விடவும் முக்கியமானது ஆதிச்சநல்லூர் ஆய்வுகள்!. சமீபத்தில்  மத்திய அரசும் ஆதிச்சநல்லூர் ஆய்விற்கு 55 கோடிகள் ஒதுக்கியது பலருக்கு ஞாபகம் இருக்கும்.

அந்த வகையில் எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் ஆதிச்சநல்லூர் ஆய்வை தொடர்ந்து நடத்திக் கொண்டுதான் இருந்தது என்பது முக்கியமான விஷயம் !ஏனெனில் இது உண்மையான வரலாற்று பூர்வமான தகவல்களையும் மிக சிறந்த ஆய்வு உண்மைகளையும் கொண்டு இருக்கிறது!.

இதை நான் குற்றச்சாட்டாக சொல்லவில்லை ஒரு உண்மையான பணியில் இருக்கும் ஆட்சியாளர்களும் அதிகாரங்களும்  இவற்றின் மீது கவனம் கொள்ள வேண்டும் எனும் அக்கறையில் தான் சொல்கிறேன்!

கீழடி ஆய்வில் வழக்கறிஞர் சகோதரி கனிமொழி மதி அவர்கள் கொடுத்த வழக்கு மீதுதான் இன்று வரைக்கும் முன்னெடுக்கப்பட்டுப் பேசப்படுகிறது! அதை யாரும் வெளியேசொல்வதில்லை! பிறகு அதைப் பயன்படுத்திக் கொண்டு மேடைகளில் பல்வேறு அலங்கார பூச்சுகளைப் பூசி வேடிக்கை காட்டிக் கொண்டு அதைத் தாங்களே கண்டுபிடித்ததாக பலவாறு வகையில் பிரச்சாரம் செய்கிறார்கள்.

அதை ஒட்டி கம்யூனிஸ்ட் கட்சி எம்பி சு வெங்கடேசன் தான்  கீழடி ஆய்வின் மொத்த குத்தகைதாரர் போலப் பேசப்பட்டு வருகிறார்!
கீழடி ஆய்வில் உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் அதற்கான அனுமதியையும் அதைத் தொடர்ந்து அகழாய வேண்டியது   முக்கியம் என்பதைத் தீர்ப்பாக சொல்லிய பிறகுதான் கீழடி ஆய்வு வேகம் பெற்றது!

இவை ஒருபுறம் இருக்கட்டும்! மீண்டும் உலகின் கவனத்தைக் கவர்ந்த ஆதிச்சநல்லூர் ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதுதான் இந்தப் பதிவின் நோக்கம். எந்த அறிவும் இல்லாததாக சில பத்திரிகை ஊடகங்கள் செயலாற்றுகின்றன.

மற்றொரு விடையம் அமர்நாத் ராமகிருஷ்ணன் கீழடியில் பணி புரிந்தது 2014 முதல் 2016 வரை மட்டுமே. 

அதற்குப் பிறகு அவர், அதில் இருந்து பணி மாறுதல் செய்யப்பட்டு ,கீழடி தொடர்பாக எந்தப் பொறுப்பிலும் அவர் இல்லை.

கோவில் கணக்கெடுப்புப் பணி அதற்குப் பிறகு தேசிய நினைவுச் சின்னங்கள் பிரிவு இயக்குநராக அமர்த்தப்பட்டார் அவரிடம் பழம் பொருட்கள் துறை கூடுதலாக அளிக்கப்பட்டது.

இப்போது புதிய மற்றொருவரும் இயக்குநராக ஆகிய நிலையில், அமர்நாத் ராமகிருஷ்ணன் கவனித்து வந்த அந்தக் கூடுதல் பழம் பொருட்கள் துறையை புதிய இயக்குநருக்கு அளித்துள்ளார்கள்.அமர்நாத் ஊடக வெளிச்ச சுகம் பழகிவிட்டார். இதற்கும் அவரது அறிக்கைக் குளறுபடிக்கும் தொடர்பு படுத்தி சு.வெங்டேசனும் ஒரு விளம்பரம் தேடுவார். இதை வைத்து எம்பியும் ஆனார் .

இவர்களின் விளம்பர வெறிக்குப் பலி ஆகலாமா பத்திரிகை ஊடகங்கள் ?!

ஒருவேளை, பத்திரிகை ஊடகத்தில் பணி புரிபவர்கள சிலரை கட்டுப்படுத்தி பேனா நிறுவனம்..

#தமிழ்ஊடகம் #தமிழகஅகழ்வாய்வு
#Keezhadi #TamilnaduArcheology

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
17-6-2025.




No comments:

Post a Comment

ராஜாஜியின சுதாந்திரா கட்சியின் அரசியல் செயல்பாடுகள் & ராஜாஜி, காமராஜர் மோதல்கள்...

  #ராஜாஜியினசுதாந்திரா #காங்கிரஸ் ராஜாஜியின சுதாந்திரா கட்சியின் அரசியல் செயல்பாடுகள் & ராஜாஜி, காமராஜர் மோதல்கள்... சந்தைப் பொருளாத...