Friday, October 24, 2014

போர்ச்சுகல் அதிபராக இந்தியரா....

போர்ச்சுகல் அதிபராக இந்தியரா....
------------------------------------------

உலக வரலாற்றின் பக்கங்களில் போர்ச்சுக்கலுக்கு முக்கியமான இடம் உண்டு. அந்நாட்டின் அதிபராக, இந்தியாவின் கோவா மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட, போர்ச்சுகல் நாட்டு எதிர்கட்சியான, சோஷியலிஸ்ட் கட்சியின் தலைவர் அந்தோணியோ காஸ்டா தேர்ந்தெடுக்கப்பட உள்ளார் என்ற செய்தி வந்துள்ளது. இவருடைய பெற்றோர்கள் கோவாவில் வாழ்ந்தவர்கள்.
ஒரு காலத்தில் போர்ச்சுகல் நாட்டு ஆளுமையின் கீழ் கோவா இருந்தது. தற்போது அந்தோணியோ காஸ்டா லிஸ்பன் நகர மேயராக இருக்கின்றார். போர்ச்சுகல் நாட்டு மக்கள் ‘லிஸ்பன் காந்தி’ என்று இவரை அழைக்கின்றனர். பிராமண சமுதாயத்தைச் சேர்ந்தவரான இவர், பின் கத்தோலிக்க கிருத்துவத்தைத் தழுவியவர். வரும் 2015ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் இவர்தான் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார் என போர்ச்சுகல் மக்கள் தெரிவிக்கின்றனர். ஒரு இந்தியர் இன்னொரு நாட்டின் அதிபராவது நமக்கெல்லாம் மகிழ்ச்சிக்குரிய செய்தி தானே.

No comments:

Post a Comment