Friday, October 24, 2014

நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ஆருக்கு நூற்றாண்டு!

நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ஆருக்கு நூற்றாண்டு!
---------------------------------------------------------------------


நடிப்பிசைப் புலவர் நடிகர் கே.ஆர். ராமசாமி அவர்கள் 1914இல் பிறந்த அவருக்கு, இந்த ஆண்டு நூற்றாண்டாகும். தி.மு.க.வின் தலைமை நிலையமான ‘அறிவகம்’ கட்டடம் வாங்க நாடகங்கள் நடத்தி நிதியை சேர்த்து அண்ணாவிடம் அளித்தவர். இவரைப் போன்று பலரின் உணர்வுபூர்வமான முயற்சியால் திரட்டப்பட்ட நிதியைக் கொண்டு, சென்னை ராயபுரம், சூரிய நாராயண செட்டி தெரு, 24ஆம் எண்ணிட்ட கட்டடம் தான் தி.மு.க.வின் தலைமை நிலையமாக 2.12.1951இல் முதன் முதலாக திறக்கப்பட்டது.
தஞ்சை மாவட்டம் அம்மாசத்திரத்தில் பிறந்து, பல்வேறு நாடகக் குழுக்களில் பணியாற்றி, என்.எஸ்.கிருஷ்ணன், டி.வி. நாராயாணசாமி போன்றோரின் நட்பை பெற்றவர் கே.ஆர்.ராமசாமி. பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் ஆகியோரின் அன்பையும் பெற்றவர். எம்.ஜி.ஆர், எஸ்.எஸ்.ஆர். ஆகியோருக்கு முன்பே கழகத்துக்காக கலை மற்றும் பிரச்சாரப் பணியாற்றியவர் கே.ஆர்.ஆர். 1950களில் அண்ணா பங்கேற்ற ஒரு பொதுக் கூட்டத்தில் ஈழப் பிரச்சினைக் குறித்து ஆவேசமாக பேசும்பொழுது, இலங்கை மீது படையெடுத்தோ அல்லது வேறு வழியிலோ அங்குள்ள தமிழர்களுக்கு எதிரான அநீதியை ஒழிக்க வேண்டும் என குறிப்பிட்டார். இதனை கண்டு அண்ணா அவர்கள் கே.ஆர்.ஆரை ஆசுவாசப்படுத்தினார். இவரைப் பற்றி அண்ணா, ‘கலையுலகில் உள்ள கழகத்தின் கருவூலம் கே.ஆர்.ஆர். காசுக்காக நடிக்காத கடமை வீரர்’ என்று குறிப்பிடுவார். 1960இல் தமிழக சட்ட மேலவைக்கு தி.மு.க. சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நடிகர். லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் என்.எஸ்.கே. சிறை செல்ல நேரிட்டபோது, அவரது நாடகக் குழுவை நடத்த பெரும் உதவியாக இருந்தவர் நடிப்பிசைப் புலவர் கே.ஆர். ராமசாமி.

No comments:

Post a Comment

*நாம் நாமாக வாழ நினைத்தால் மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை*,

*இந்த பாடல் இருத்தலியல் குறித்த கேள்வியை 9ஆம் நூற்றாண்டில் எழுப்பியிருக்கிறது* .. *வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி* *ஊனாகி உயிராகி உண்மையுமாய...