Thursday, January 31, 2019

கடந்த 26.1.2019 (குடியரசு நாள்) அன்றிலிருந்து திருப்பூர் வட்டாரங்களில் கிட்டதட்ட 70 கிராமப்பகுதிகளுக்குச் சென்று #கிராமசபைக்கூட்டங்களில் கலந்து கொண்டேன்.

கடந்த 26.1.2019 (குடியரசு நாள்) அன்றிலிருந்து திருப்பூர், உடுமலை பேட்டை, குண்டடம், காங்கேயம், சென்னிமலை போன்ற வட்டாரங்களில் கிட்டதட்ட 70 கிராமப்பகுதிகளுக்குச் சென்று அங்கே நடந்த கழகத்தலைவர் அவர்களின் அறிவிப்பின் படி நடத்திய #கிராமசபைக்கூட்டங்களில் கலந்து கொண்டேன்.
பொதுவாக கிராமப்புறங்களில் குடிநீர், சாலைவசதி, தெருவிளக்கு வசதி, சாலைவசதி ,கழிவு நீரகற்றம், மருத்துவ வசதியே பிரதானப் பிரச்சனைகளாக உள்ளது.
விவசாயிகளின் கடன் பிரச்சனை, பி.ஏ.பி, பாசனவாய்க்கால் பிரச்சனை, அமராவதி பாசனவாய்க்கால் , உப்பாறு போன்ற பிரச்சனைகளை எடுத்துக் கூறினார்கள்.விவசாய விளைபொருட்களுக்கு விலையில்லாததால் அவர்களுக்கு ஏற்படும் சிரமங்களை பகிர்ந்து கொண்டார்கள்.
rஒரு லிட்டர் மினரல் வாட்டர் இருபது ரூபாய், ஒரு லிட்டர் சுத்தமான மாட்டுப்பால் விலை 18 ரூபாய் என்ற வேதனையை எடுத்துச் சொன்னார்கள்.வாய்க்கால் தண்ணீர் இருபது ரூபாய் பல்வேறு சிரமங்களுடன் வளர்த்து கறந்தளிக்கும் பாலின் விலை 18 எங்கே போய் முட்டிக் கொள்வது...? 
கிராமத்து வெள்ளந்தி மக்களை சந்தித்தது மனதுக்கு நிறைவளித்தது.

#கிராமசபைக்கூட்டங்களில்
K S Radhakrishnan
கே. எஸ். இராதாகிருஷ்ணன்.
31-1-2019.






No comments:

Post a Comment

மா கவி பாரதி

மா  கவி #பாரதியை கொண்டட வலம்புரி ஜானின் இந்த ‘’பாரதி - ஒரு பார்வை’’ யும் (பதிப்பு-1982)அவசியம் வாசிக்க வேண்டும். #பாரதி #வலம்புரிஜானின்_பாரத...