Monday, January 21, 2019

நவீனமயமாகும் மதுரை பெரியார் மத்தியப் பேருந்து நிலையம் . நம்மிடமிருந்து விடைபெறுகிறது.


எனது மங்கலான  நினைவுகளில் 1960 களில் இப்பேருந்து  நிலையம் மங்கா  நினைவுடனும்  குன்றா மகிழ்வுடனும்  மதுரை மத்தியப்  பேருந்து  நிலையம்   நிறைந்திருக்கிறது.கோவை, சென்னை,  திருச்சி,அண்ணாமலைப்  பல்கலைக்கழகம்  என்று  எங்கு  சென்று  திரும்பும்போதும்  மதுரை மத்தியப்  பேருந்து  நிலையம்    வந்தே  கோவில்பட்டிக்கு  மாற்றுப்  பேருந்தில்  செல்வேன்.
         
 சில  சமயம்  நல்லிரவு  இரண்டு  மணிக்கு  இங்கே  இறங்கி  அதிகாலைப்  பேருந்துக்கு   காத்திருக்க  நேரும் வாடிக்கை ஏற்படும்.தேனீர்க்கடையில்  அக்கால திரைபட மெல்லிசை பாடல்கள்  கேட்டபடியும்
சுற்றிலும்  வேடிக்கை  பார்த்தபடியும், ராணிமுத்து  நாவல்கள்   வாசித்தவாறும் காலை வரை  காத்திருந்த  நாட்கள்  இனியவை..

இனி பழக்கடைகளையும் பூக்கடைகளையும் பார்க்க முடியாது.. டீக்கடைகளையும் சூடான வடைகளையும் சுவைக்க முடியாது. பெட்டிக்கடைகாரர் கிட்ட நியுஸ்பேப்பர் வாங்கி விருதுநகர்  பஸ்ஸு எத்தன மணிக்கு கெளம்பும்னு பீடி பத்தவெச்சிட்டே கேக்க முடியாது.. 
திரைப்பட போஸ்டர்களையும், பார்க்க முடியாது..

இந்தப்  பேருந்து நிலையத்தில் தான்  விடுதலைப்புலிகள்  தலைவர்  பிரபாகரன்,  விவசாயச் சங்கத் தலைவர்  நாராயணசாமி  நாயுடு  போன்ற  முக்கியத்தலைவர்களுடன் வலம் வந்துண்டு.அவர்களுடன்  இரவுப்பொழுதைப்  பல்வேறு  விசயங்களைப்  பேசியபடிக்  கழித்தேன். நெஞ்சில்  நீங்கா  இடம்  பெற்ற  சந்திப்புகள்  அவை...

சில நாட்கள்    இரவில்  சற்று  முன்னதாக  வந்துவிடும்  பொழுதுகளில்  மதுரை  மேலமாசி  வீதியில்  இருக்கும்   பழ.நெடுமாறன்  அவர்களின் விவேகானந்தர்  அச்சகத்தில்  தங்கி விடியலில்  பேருந்து  பிடித்து  ஊர்  சென்றதுண்டு.

அரிய நீங்கா  நினைவுகளை  மட்டும்  நம்மிடம்; விட்டு  விடைபெறுகிறது  மதுரை  பெரியார்  பேருந்து  நிலையம்.

No comments:

Post a Comment

மா கவி பாரதி

மா  கவி #பாரதியை கொண்டட வலம்புரி ஜானின் இந்த ‘’பாரதி - ஒரு பார்வை’’ யும் (பதிப்பு-1982)அவசியம் வாசிக்க வேண்டும். #பாரதி #வலம்புரிஜானின்_பாரத...