Wednesday, January 16, 2019

நெல்லை சீமையில் தைப் பொங்கல் காலத்தில் கிடைக்கும் சிறுகிழங்கு.

*நெல்லை சீமையில் தைப் பொங்கல் காலத்தில் கிடைக்கும் சிறுகிழங்கு.*
-------------------------------------
மதுரைக்கு தெற்கே குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டத்தில் தை மாதங்களில் சிறுகிழங்கு என்று விற்பனைக்கு வரும். இந்த மாவட்ட பொங்கல் சமையலில் சிறுகிழங்கு இல்லாமல் இருக்காது. அதை அவித்து அதன் தொலியை கோணி சாக்கால் அழுத்தப்பட்டு நீக்கப்படும். தோல் நீக்கப்பட்ட பின் உருண்டையாக, வெள்ளையாக தெரியும். அதை மசாலா சேர்க்காமல் கடலை எண்ணெயில் தாளித்து சாப்பிட்டால் அவ்வளவு ருசியாக இருக்கும். அது ஜனவரி முதல் மார்ச் வரை தான் இந்த சிறுகிழங்குகள் கிடைக்கும்.

Image may contain: foodமண்ணுக்குள் விளையும் இந்த கிழங்கு எவ்வளவு சமைத்தாலும் ஓரளவு மண் வாசனை அதில் இருக்கும். கிழங்கு சிறிதாக இருந்தாலும் ருசி அபாரமாக இருக்கும். இதில் மாவுச் சத்து, புரதச் சத்து போன்ற ஊட்டச் சத்துகள் அதிகம் உண்டு. ரத்த அழுத்தத்தினை கட்டுப்பாட்டில் வைக்கும். கண் பார்வைக்கும் நல்லது. மூல நோய்களுக்கும் இந்த கிழங்கு உகந்ததாகும். இந்த சிறு கிழங்கில் அஸ்கார்சிக் அமிலம் இருப்பதால் வைட்டமின் சி சத்தும் உள்ளது. திருநெல்வேலி அல்வாவை போன்று பொங்கல் சொதி குழம்பு போன்று நெல்லை மாவட்டத்தில் ஒரு பிரத்யேக உணவுப் பொருளாக சிறுகிழங்கு இன்றைக்கும் விளங்குகிறது. கருணைக்கிழங்கை விட சற்று சிறிதாக இருக்கும். பொங்கல் சமயத்தில் கிராமத்திற்கு வந்த நண்பர்கள் அதை உண்டுவிட்டு எங்கே கிடைக்கும் என்று கேட்பதுண்டு. சென்னையில் இந்த கிழங்கு அதிகமாக கிடைப்பதுமில்லை. பலர் அறிந்ததுமில்லை.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
15-01-2019
Image may contain: foodImage may contain: plant

No comments:

Post a Comment

அகழவாராய்ச்சியைப் பொறுத்தவரை #கீழடி மட்டும் முக்கியமானது அல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடந்திருக்கிறது!

  அகழவாராய்ச்சியைப் பொறுத்தவரை #கீழடி மட்டும் முக்கியமானது அல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடந்திருக்கிறது! குறிப்பாக வையா...