Wednesday, January 16, 2019

உத்திராயண காலத்தில் ஆதவன் தன் பயணத்தை இனிதே துவங்கியிருக்கிறான்......


Image may contain: outdoor and nature

உத்திராயண காலத்தில் ஆதவன் தன் பயணத்தை இனிதே துவங்கியிருக்கிறான்......
ஞாயிறு போற்றுதும் !
ஆயிரம் கரங்கள் நீட்டி
அணைக்கின்ற தாயே போற்றி
அருள் பொங்கும் முகத்தை காட்டி
இருள் நீக்கம் தந்தாய் போற்றி

தாயினும் பரிந்து சால
சகலரை அணைப்பாய் போற்றி
தழைக்கும் ஓர் உயிர்கட்கெல்லாம்
துணைக்கரம் கொடுப்பாய் போற்றி

தூயவர் இதயம் போல
துலங்கிடும் ஒளியே போற்றி
தூரத்தே நெருப்பை வைத்து
சாரத்தை தருவாய் போற்றி
ஞாயிறே நலமே வாழ்க நாயகன் வடிவே போற்றி
நானிலம் உளநாள் மட்டும்
போற்றுவோம் போற்றி போற்றி.


No comments:

Post a Comment

2023-2024