Saturday, January 5, 2019

திருப்பாவை. மார்கழி 21.

திருப்பாவை. மார்கழி 21.
*******************************
ஏற்றகலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்!
ஊற்றம் உடையாய்! பெரியாய்! உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்!
மாற்றார் உனக்கு வலிதொலைந்து உன் வாசற்கண்
ஆற்றாது வந்து உன்னடி பணியுமா போலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோரெம்பாவாய்.

விளக்கம்:
"சுரந்த பாலை ஏந்திய குடங்கள் பொங்கி வழிய, இடைவிடாது வள்ளலைப் போன்று பால் சுரக்கும் பசுக்களை அதிக அளவில் படைத்த நந்த கோபனின் மகனே! நீ எழுந்திருப்பாயாக! பக்தர்களை காத்து அருள்பவனே! அனைவராலும் அறியப்பட்டிருக்கும் பெருமை வாய்ந்தவனே! பூமியில் அவதாரம் செய்த ஒளி உருவானவனே! படுக்கையிலிருந்து எழுந்திரு! உன் வலிமையினைக் கண்டு தங்கள் வலிமையை இழந்து, உன் மாளிகை வாசலில் கதியற்று வந்து உன் திருவடிகளில் விழும் பகைவர்களைப்போல உன்னை புகழ்ந்து கொண்டு, துதித்து, உன் திருமாளிகைக்கு வந்துள்ளோம்!

No comments:

Post a Comment

*You have to ask yourself what for and who for you are living and if don't have answers for it*

*You have to ask yourself what for and who for you are living and if don't have answers for it*, then you are living your life wrong and...