Wednesday, January 16, 2019

இதுதான் உண்மை... இன்றைய யதார்த்த நிலை.....

நவீன தமிழ் இலக்கியத்தின் முகமாக விளங்குகிற மூத்த படைப்பாளிகள் எதிரில் வந்தால்கூட அவர்கள் யார் என்று முகம்தெரியாத இளம் படைப்பாளிகளை இப்போதுதான் பார்க்கிறேன். அப்படியே அவர்கள் பெயர் கேள்விப்பட்டிருந்தாலும் அவர்களது ஒரு பக்கத்தையேனும் வாசித்திராத அவலத்தையும் இப்போதுதான் காண்கிறேன். இந்த இளம் எழுத்தாளர்கள் புத்தகங்கள் எழுதுகிறார்கள். தங்களுக்கான வாசகன் எங்கே என்று தேடி அலைகிறார்கள். நவீன எழுத்தின் முன்னோடிகளோடு நேரிலோ எழுத்திலோ எந்தப் பழக்கமும் இல்லாத இவர்கள் தங்கள் எழுத்தின் மூலங்களை எப்படி பெற்றுக்கொள்கிறார்கள்? ' இவனைபோலத்தானே இருக்கும் இவனது கவிதையும்' என்ற வண்ணதாசனின் வரிகள் இவர்களுக்காகவே எழுதப்பட்டதுதானோ?
-மனுஷ்யபுத்திரன்.

#KSRpostings
#KSRadhakrishnanpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
15-01-2019

No comments:

Post a Comment

*You have to ask yourself what for and who for you are living and if don't have answers for it*

*You have to ask yourself what for and who for you are living and if don't have answers for it*, then you are living your life wrong and...