#புவியரசியலில்இலங்கையில் உள்ள#திரிகோணமலை தமிழர்கள் வாழும் கிழக்கு மாகாணத்தில் உள்ள முக்கிய கேந்திரப் பகுதியாகும். ஆஸ்திரேலியாவின் சிட்னி துறைமுகத்திற்கு அடுத்து இயற்கையான துறைமுகமாக அமைந்துள்ளது. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்திலிருந்து கடந்த ஒரு நூற்றாண்டுகளாக மேற்கு நாடுகள் மட்டுமல்ல, சீனா, ரஷ்யா போன்ற நாடுகளும் தன் வசமாக்க தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இங்குள்ள கடலில் கச்சா எண்ணெய் ஆய்வுக்கு ஜப்பான், சீனா, அமெரிக்கா போன்ற நாடுகள் தங்களுடைய வியாபார வசதியை பெருக்கிக் கொள்ளவும், தங்களுடைய ஆதிக்கத்தை இந்த மகா சமுத்திரத்தில் நிலைநாட்டவும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. இதில் பிரான்ஸ், பிரிட்டன் போன்ற நாடுகளும் அடங்கும். இங்குள்ள ஈஸ்வரத் ஸ்தலத்தினுடைய மகிமையை சிங்களர்கள் அழித்து வருவது என்ற குற்றச்சாட்டு ஈழத் தமிழர்கள் மத்தியில் உள்ளது.
அழகான ரம்மியமான திரிகோணமலையில் அதன் கடற்கரை இயற்கையின் அருட்கொடையாகும். இது தான் இராவணன் ஆண்ட பூமியான திருகோணமலை. கடலோடு சேர்ந்த உயர் மலை. சுந்தரமூர்த்தி நாயனாரால் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னரே திருப்பதிகம் பாடப்பெற்ற சிவத்தலம். இங்கு இராவணனின் அன்னையார் இலிங்கம் அமைத்து வழிபாடு ஆற்றுவதற்காக இராவணன் தன் புட்பக விமானத்தில் தினந்தோறும் கைலாயமலை சென்று மண்ணெடுத்து வருவாராம். இப்படி ஒரு நம்பிக்கை. இதுபோன்ற பல்வேறு வரலாற்றுப் பின்புலங்களைக்கொண்டு தூய தமிழும் பண்பாடும் சிறந்து விளங்கிய திருகோணமலைக்கு இன்னுமோர் சிறப்பம்சம் இருக்கிறது. அதுதான் தமிழீழ நாட்டின் தலைநகரம் என்ற தனிப்பெரும் அந்தஸ்து.
திருஞானசம்பந்தர்
திருகோணமலை கடற்படைத்தளம் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த பழமையான புகைப்படங்கள் சில…
இலங்கையில் உள்ள பெரிய கடற்படைத்தளமான திருகோணமலை கடற்படைத்தளம் பிரித்தானிய ஆட்சியின் கீழ் Royal Naval Dokyard எனும் பெயருடன் இயங்கிய போது 1900ம் ஆண்டு பழமையான புகைப்படங்களாகும்.
#திரிகோணமலை
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
04-07-2019.

\
No comments:
Post a Comment