#தொடர்_15
#பத்திரிகையாளர்கள்_மீது_தாக்குதல்
#தலைவர்கலைஞர்_அவர்கள்
#நள்ளிரவுகைது_தமிழக_அரசியல் #வரலாற்றில்_ஒருபிழை.....15
————————————————
கலைஞரின் நள்ளிரவு கைதுக் குறித்து 30.07.2001 அன்று நீதிபதி ராமன் தலைமையில் அமைக்கப்பட்ட நீதிவிசாரணை குறித்தான வழக்கும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது. தலைவருடைய கைதுக் குறித்தான தாக்கமும் நீதிமன்ற வழக்குகளும், விவாதங்களும் நடந்த வண்ணம் இருந்தன. தலைவர் கைதின் போது நள்ளிரவில் அதிமுக அரசு நடந்து கொண்ட விதத்தைக் கண்டித்து 12.08.2001 ஞாயிற்றுகிழமை அன்று சைதாப்பேட்டை மறைமலையடிகள் பாலம் அருகே துவங்கிய பேரணி கடற்கரை காந்தி சிலை அருகே வந்த போது காவல்துறையின் அத்துமீறலும் தடியடியும் பத்திரிக்கையாளர்கள், ஊடகவியலாளர்களின் கேமராக்கள் உடைக்கப்பட்டன.
கடந்த செப்டம்பர் 4, 2001 அன்று உச்சநீதிமன்றத்தில் தலைவரைக் கைது செய்தது தவறு, எனவே அவர் முதலமைச்சராக நீடிக்க முடியாது என்று quo warranto என்ற ரிட் மனுவை ஒரு வடநாட்டு வழக்கறிஞர் தானே முன்வந்து தாக்கல் செய்து விசாரணையில் நீதிவிசாரணை அமைக்கப்பட்டது என்று அந்த மனு பைசல் செய்யப்பட்டது.
இதற்கிடையில் திருப்பூரைச் சார்ந்த ரங்கசாமி போலீஸ் அத்துமீறலால் இறந்தார். சென்னை பொதுமருத்துவமனையில் அவர் உடலை வாங்க வேண்டுமென்றால் எங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டுமென்று பொங்கலூர் பழனிச்சாமி அவர்களும் மாவட்ட செயலாளராக இருந்த அவருடைய துணைவியார் விஜயலட்சுமி பழனிச்சாமியும் கோவை மாவட்ட கழகத் தோழர்களோடு சேர்ந்து சென்னை பொதுமருத்துவமனையில் கிட்டத்தட்ட 3-4 மணி நேரம் போராட்டம் நடத்தினோம். இது நடந்தது14.08.2001.
ஆற்காடு வீராசாமி கால் எலும்பு முறிந்து வீட்டில் சிகிச்சை பெற்று வந்தார். அவரிடம் அண்ணாநகர் ரமேஷ் வழக்கு விஷயமாக கையெழுத்துப் பெற்று மனித உரிமை ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்ய கையெழுத்துப் பெற்றேன். திரும்பவும் பேரணியில் பத்திரிக்கையாளர்கள் மீது காவல்துறையினர் எப்படி அத்துமீறி தாக்கினார்கள் என்பதையும் சொல்ல வேண்டும்.
தி.மு.க. தொண்டர்கள் மீது போலீசார் மிருகத்தனமாக தாக்குதல் நடத்துவதை படம் பிடித்த பத்திரிகை போட்டோகிரபர்கள், செய்தி சேகரித்த நிருபர்கள் மற்றும் தனியார் டி.வி. நிறுவன கேமராமேன்கள் மற்றும் நிருபர்கள் மீது போலீஸ்வெறித்தனமாக தாக்கியது . இதற்கு பத்திரிகையாளர் சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சென்னையில் தி.மு.வினர் நடத்திய பேரணியில் கலந்துக் கொண்ட தி.மு.க. தொண்டர்கள் மீது போலீசார் திடீரென தடியடி நடத்தினர். பிறகு கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். தொண்டர்களை வளைத்து போலீசார் மிருகத்தனமாக தாக்குதல் நடத்தினர். அவர்கள் ரத்தம் சொட்ட, சொட்ட ஓடினர். சிலர் 'அய்யோ என்னால் நடக்கக் கூட முடியவில்லை, விட்டுவிடுங்கள்” என்று கெஞ்சினர். ஆனாலும் போலீசார் அவர்களை மிக கடுமையாகத் தாக்கினர். பெண்களையும் விட்டு வைக்கவில்லை. ஒட ஒட விரட்டி அடித்தனர். ஒரு கட்டத்தில் கழகத்தினர் மீது போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இந்த சம்பவங்கள் டி.ஜி.பி. அலுவலகம் அருகே நடந்தது.
போலீசாரின் தாக்குதல் குறித்து கேள்விப்பட்ட பத்திரிகையாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போலீசின் அத்துமீறலை படம்பிடிக்க முயன்ற போது பத்திரிகை போட்டோகிராபர்கள், நிருபர்கள், தனியார் டி.வி. கேமராமேன்கள், நிருபர்களை போலீசார் தடுத்ததோடு அவர்களை மிருகத்தனமாக தடியால் அடித்து விரட்டினர். இதில் சன் டி.வி.கருப்பசாமி, ஆஜ்தக் டி.வி. பெண் நிருபர் ஜெயஸ்ரீ, இந்து பத்திரிகை புகைப்படக்காரர் மூர்த்தி, ஆனந்த விடகன் விவேக், நக்கீரன் பிரகாஷ், எழும்பூர் தினமலர் சுரேஷ், வளையாபதி ஆகியோர் பலமாக தாக்கப்பட்டனர். அவர்கள் உடனடியாக அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கப்பட்டது. இதையடுத்து அவர்களை மற்ற பத்திரிகையாளர்கள் பல்வேறு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
தினமணி போட்டோகிராபர் ராஜூ, செய்தியாளர் முருகன் ஆகியோர் பயங்கரமாகத் தாக்கப்பட்டு அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதில் ராஜூ தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. போட்டோகிராபர் ராஜூவின் பிலிம்ரோலை போலீசார் பிடுங்கிச் சென்றனர்.
மருத்துவமனையில் இருக்கும் இவர்களை தினமணி ஆசிரியர் சம்பந்தம் சந்தித்து ஆறுதல் கூறினார். சில நிருபர்களை போலீசார் டி.ஜி.பி. அலுவலகக். அழைத்து சென்று சிறை வைத்தனா்.
போலீசின் இந்த அராஜக செயலுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்ற தலைவர் தனசேகரன், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத் தலைவர் ரவீந்திரதாஸ், சென்னை நிருபர்கள் சங்க பொதுச் செயலாளர் கே.சுப்பிரமணியம், சென்னை பத்திரிகையாளர் சங்க பொதுச்செயலாளர் எஸ்.எம்.பாலசுப்பிரமணியம் ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர். பத்திரிகையாளர் மீது நடந்த தாக்குதலுக்கு காரணமான போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை. எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர். இந்திய பத்திரிகையாளர் கவுன்சில் பிரதிநிதி ஒருவரிடம் போலிஸ் அத்துமீறல் குறித்து புகார் செய்ய பத்திரிகையாளர்கள் செய்தனர். கடமையாற்ற விடாமல் தடுக்க போலீசார் தடுத்ததாக பத்திரிகையாளர்கள் குற்றம் சாட்டினர்.
(தொடரும்)
கே. எஸ். இராதாகிருஷ்ணன்
12.08.2020
#கலைஞர்_கைது
#ksrposts

No comments:
Post a Comment