Wednesday, December 2, 2020

 


————————————————-










பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்ட எங்கள் கரிசல வட்டாரத்து இராஜபாளையம், சிப்பிப்பாறை வகை நாய்களை கடந்த 80-90களில் சென்னை, பெங்களூர் மற்றும் ஹைதராபாத், டில்லி இருக்கும் நண்பர்கள் கேட்டால் அடிக்கடி வாங்கிக் அனுப்பவது என்னுடைய வழக்கம். இப்போது இராஜபாளையம் வகை நாய்கள் மட்டுமே கிடைக்கின்றன. சிப்பிப்பாறை வகை நாய்கள் இல்லை. கடந்த ஆறு மாதங்களுக்கு இந்து செய்தியாளர் நன்பர் கோலப்பன் கேட்டும் சிப்பிப்பாறை கிராமத்தில் இருந்து கொண்டு வாருங்கள் என்றதற்கு வேறு இனத்தை தான் கொண்டு வந்தார்கள். சிப்பிப்பாறை இனம் அரிதாகி விட்டது. கடந்த பத்தாண்டுகளாக அசல் சிப்பிப்பாறை வகை நாய்கள் கிடைப்பதில்லை. இது தான் நிலைமை.
படங்கள்- 1) சிப்பிப்பாறை இனம்.
2) இராஜபாளையம் இனம்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்