Wednesday, December 2, 2020

 #கிரா_98

——————



கன்னிமை நாயகியான நாச்சியாரைப் பற்றிய துள்ளலான விவரிப்பும் புதிதாகவே தெரிகின்றன. கதை இரண்டு ஆண்களின் வழியாகச் சொல்லப் படுகிறது. முதலில் நாச்சியாரின் சகோதரன், பின்பு அவள் கணவன் . அவளது கன்னிமைக்கேயுரிய அழகு, கருணை, தயாள குணம், துறு துறுப்பு ,விவேகம் கொண்ட பெண்ணாகச் சித்தரிக்கப் படுகிறார் நாச்சியார். அவளது அழகு மட்டுமல்ல, ஆளுமையும் அற்புத குணங்களுமே கணவனாக வரப் போகிறவனை வசீகரிக்கின்றன.ஆனால், திருமணத்துக்குப் பின் அவளது மற்ற குணங்கள் தேய்ந்து போய் பணமே பிரதானம் என்றெண்ணும் லௌகீக குணம் கொண்ட பெண்ணாக மாறிப் போகிறாள். அவளது கன்னிமைப் பருவத்தில் அவளுள் திரண்டிருந்த உன்னதம் திருமண வாழ்க்கையில் குன்றிப் போனதை ஏக்கத்துடன் நினவு கூர்வதாக கதை முடிகிறது.
அதிகமான சம்பவங்களோ ,திடுக்கிடும் திருப்பங்களோ,இல்லாமல் தெள்ளிய நீரோடை போல் ஓடும் கதை நெடுக வியாபித்து நிற்பது கிராமத்து பழக்க வழக்கங்களும், கி ரா ஐயாவின் சொல்லாடல்களுமே. திருமணம் என்னும் சடங்கில் பிறந்த வீட்டை மட்டுமல்ல, அந்த வீட்டுக்கெனவே பிரத்தியேகமாக அவள் பாலித்து வரும் சில குணங்களையும் விட்டுச் சென்று விடுகிறாள் பெண். அது ஏன் என்பது யாராலும் அவிழ்க்க முடியாத நுண்ணிய முடிச்சு .சமூக நிர்ப்பந்தங்களும், சூழலும் பெண்ணின் குணத்தில் அழைத்து வரும் மாற்றத்தை வாசிப்பில் உணரலாம். குழந்தமை, பெண்மை, தாய்மை என்ற தேய் வழக்குச் சொல்லாடல்களே பெரும்பாலும் காணக் கிடைக்கையில் கன்னிமை என்னும் சொல்லே மனதை நீவி விடுகிறது.. தொடர்ந்து எழும் ஞாபக வெளிச்சம் நிகழ்காலத்தை சற்று நேரம் ஒளிரச் செய்கிறது.
கரிசல் பூமியில் அன்றைய கால கட்டத்தில் ,பெண் என்பவள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்னும் பிம்பத்தைக் கட்டுடைத்த அம்மா ஒரு கொலை செய்தாள், சூடாமணியின் நான்காம் ஆசிரமம் போன்ற சிறுகதைகளுள் ஒன்றாக உள்ளது.

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்