Thursday, December 3, 2020

 

———————————————



சேர்ந்திருத்தலைப் போலவே தனித்திருத்தலும் இனிமையானதுதான் என்பதைக் கண்டுகொண்ட பிறகு சேர்ந்திருத்தலின் தேவைஅற்றுப்போகிறது. அல்லது வயதுக்கான தனிச்சுவைகள் என ஏதோவொன்று தனிமையை வேண்டி நிற்கிறது. ஆதலால், தனித்திருந்தாலும் ஒரு சுகம்தான்.
——
வாழ்க்கை செழுமைப்படுதல் என்பது வாழ்தலில் பாதி வாசிப்பாக இருப்பது. வாசிப்பற்ற சமயங்களில் இசை, திரைப்பட கிளாஸிக்குகள். வாசிப்பு ஒரு தளத்திலானது அல்ல. கவிதை, அறிவியல் கட்டுரைகள், கிளாஸிக் நாவல்கள், சிறுகதைகள், கவிஞர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் இப்படி. ஒரு மனிதன் எங்கு வசித்தாலும் அவனது உறவு மாபேராற்றல்களான ஐம்பெரும் பூதங்களுடன் மனதளவிலும் உடலளவிலும் இடைவிடா உரையாடலில் இருக்கிறது. சிகரமுடிகளின் மேல் தவழ்ந்தாலும் உடல் இரையும் கடலில் மிதந்தவண்ணமே இருக்கிறது. எத்தனையோ விதமான கடல்களுக்குக் கைப்பிடித்து அழைத்துச் சென்றவர்கள் வாய்த்திருக்கிறார்கள். நான் அவர்களை மறவேன். நாவலாசிரியர்கள், இசைக் கலைஞர்கள், தோரோ போன்ற அராஜகவாதிகள் என்று பட்டியல் விரிந்துகொண்டே போகும்.

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்