என் வாழ்வின் பலநிலைகளில் வழிகாட்டிய பல ஆசான்களுக்கு என் வணக்கம்...
" நான் வாழ்வதற்காக என் பெற்றோருக்குக் கடமைப் பட்டிருக்கிறேன்.. நன்றாக வாழ்வதற்க்காக என் ஆசிரியருக்குக்
கடமைப் பட்டுள்ளேன் "
-மாவீரன் அலெக்சாண்டர்
ஏணிப்படிகள்
ஏற்றி விடுமே தவிர
அது ஏறி வருவது இல்லை . . .
உருவாய் இருக்கும் குருவே வாழ்க
அறிவாய் எங்கள் மனதை என்றும்.
அருளும் ஆற்றல் உடையவா வாழ்க
அறிந்தோம் அன்றே பிறப்பின் பயனை
வரும்பொருள் உரைத்தவா வாழ்க எங்கள்
தன்னிலை உணர்த்திய ஆசானே வாழ்க
இருப்பதைக் கொண்டு வாழ்வதே ஆனந்தம்
இழந்ததை எண்ணி ஏங்குதல் மடமை
வருவதை எண்ணிக் கற்பனை செய்வதும்
கடந்ததை எண்ணி உழல்வதும் தவறு
இருக்கும் கணமே இன்பம் தருமென
இயம்பினர் ஞானிகள் அன்றே என்று
கருத்தாய் மொழிந்த குருவே வாழ்க
வாழ்ந்து காட்டிய குருவே வாழ்க
கல்வியின் பயனே பணிவு என்றும்
கடமையே முதன்மை என்று உரைத்தீர்
கல்வியும் அறநெறியும் இணைந்தே வருமென
கவனமாய் உரைத்து வாழ்ந்தும் காட்டினீர்
கல்வியைப் பெற்றோம் கடமையை உணர்ந்தோம்
எல்லாம் உன்றன் அன்பால் அன்றோ
கல்லாய் இருந்த எங்களை நல்ல
மனிதர் களாக்கிய குருவே போற்றி
அரும்பொருள் உரைப்போன் அறவழி நடப்போன்
வரும்பொருள் பாரான் வறுமையில் துயருரான்
தருவார் நன்னெறி ஞானத்தை தெளிவுடன்
உருவாக் கினார்என் னையொரு பொருளாக
தருணத்தில் கைகொடுத்த தகவுடைச் செம்மல்
கருணையின் உறைவிடம் கடிந்து சொல்லான்
கருப்பொருள் காட்டி கடலளவு உரைத்தார்
கருமத் தின்நெறி நின்றகர் மயோகி
பாளையங்கோட்டை சவேரியர் கல்லூரி பள்ளிக்கு செல்ல மறுத்து திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள எனது சொந்த கிராமமான குருஞ்சாகுளத்திலேயே எனக்கு அட்சரம் சொல்லிக்கொடுத்த கலாசாலை இதுவே. இந்த பாடசாலையில் படித்த பலர் இந்தியாவிலும், வெளிநாட்டிலும் சகல துறைகளிலும் ஜொலிக்கின்றனர்.
உண்மையான கிராமத் தின்ணை பள்ளிக் கூடம் எங்களை மனிதர்களாக்கியது. பல ஆசான்களிடம் தமிழ், ஆங்கிலம் போன்ற மொழிப்பாடங்களோடு கணிதம், அறிவியல், வரலாறு, புவியியல், விஞ்ஞானம், MT என்று அந்த காலத்தில் சொல்லப்பட்ட மாரல் டீச்சிங் என அனைத்தையும் தமிழிலே மகிழ்ச்சியாக கற்ற தருணங்கள் இன்றைக்கும் நினைவுகளாக இருக்கின்றது. இந்த ஆரம்ப பள்ளியை ஆலயமாகவும்; எங்களுக்கு கல்வி தந்த ஆசான்களை அருட்கொடைகளாகவும் நினைத்து வணங்குகிறோம்.
#ஆசிரியர்_தினம்
#Teachers_day
#நெல்லை_மாவட்டம்_குருஞ்சாகுளம்_கிராமம்
#KSRadhakrishnanpostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
05-09-2020.

No comments:
Post a Comment