Wednesday, December 2, 2020

 #மரபுரீதியான_பந்தாடை :

வெங்காய_படல்
வெங்காய_பட்டறை
———————————-













விவசாயிகள் தாங்கள் விளைவித்த விளை பொருள்களை உடனே விற்கும்போது உரிய விலை கிடைக்காமல் பெரும் நஷ்டம் அடையக்கூடிய நிலை ஏற்பட்டு விடுகிறது.
இதனை தவிர்க்க நாம் உற்பத்தி செய்த விளைபொருள்களை சேமித்து வைக்க வேண்டியது அவசியம். அந்த வகையில் பாரம்பரிய சேமிப்பு முறைகள் மிக அவசியம். அந்த பாரம்பரிய அறிவு சார்ந்த சேமிப்பு முறை தான் வெங்காய பந்தாடை.
இந்த நாட்டு வெங்காய பந்தாடைகளை நாம் விளை நிலங்களுக்கு மிக அருகில் நல்ல காற்று வரும் திசையில் அமைக்க வேண்டும்.அருகில் மரங்களோ செடி கொடிகளோ இருக்க கூடாது. நாம் தென்னங்கிடுகு கொண்டு சுமார் ஆறு அடி உயரத்துக்கு அமைத்து, அதற்கு மேல தென்னங்கிடுகு மற்றும் பனை ஓலை கொண்டும் கூரை அமைத்து கொள்ளமுடியும். ஆனால் பக்கவாட்டில் நான்கு புறத்திலும் தென்னங்கிடுகு கொண்டு தான் வேய வேண்டும்.
அப்போது, மட்டுமே காற்று உள்புகுந்து வெளியே வர வசதியாக இருக்கும். இந்த பந்தாடை தரையில் இருந்து சுமார் 1 அடி உயரத்தில் பரண் அமைத்து நீள வாக்கில் சவுக்கு கம்புகளை போட்டும் கிடை மட்டமாக நெருக்கமாக அகத்தி கம்புகளை பயன்படுத்தி கொள்ளமுடியும் . தரையில் இருந்து இடைவெளி சுமார் 1/2 அடியில் இருந்து முக்கால் அடி கண்டிப்பாக இடைவெளி இருக்க வேண்டும். அதுக்கு அடை கற்கள் நாம் பயன்படுத்தி கொள்ள முடியும். நாம் பந்தாடை அமைக்கும் தரை பகுதியில் வேஸ்ட் ஆயில் பயன்படுத்தி தரையில் கரையான் பிடிக்காமல் பாதுகாத்து கொள்ள முடியும்.
இந்த பந்தாடை உயரம் 6 அடி அளவுக்கும், அகலம் 2 1/2 அளவுக்கும் இருக்க வேண்டும். இந்த பந்தாடை அமைக்க சுமார் 7500 செலவு பிடிக்கும்.இதன் கிடுகு வாங்கும் செலவு தொகை 5000 உட்பட மேற்படி செலவு வரும். இந்த கிடுகுகளை பந்தாடைகளை பிரித்து எடுத்தவுடன் நாம் வேறு வகைக்கும் அந்த பிரிக்கப்பட்ட கிடுகுகளை நாம் பயன்படுத்தி கொள்ள முடியும்.
பந்தாடைக்கு கொண்டு வரும் வெங்காயத்தை அறுவடை செய்த இடத்தில் சுமார் 3 நாட்கள் அறுவடை செய்த நிலையில் அதன் தாள்களை களையாமல் அப்படியே உலர விட்டுவிட வேண்டும். பிறகு ஒத்த அறுப்பு செய்து, அதன் வேர் பகுதிகளை அறுக்காமல் விட்டுவிட வேண்டும். தாள் பகுதியை மட்டுமே அறுக்க வேண்டும்.
அப்படி சரி செய்யப்பட்ட நாட்டு வெங்காயத்தை இந்த பந்தாடையில் இட்டு நிரப்ப வேண்டும். நிரப்பியவுடன் மேற்க்கூரை அமைத்து விட வேண்டும். மேற்க்கூரைக்கும் இந்த பந்தாடை பரப்புக்கும் சுமார் அரை அடி இருக்க வேண்டும். அப்போது மட்டுமே அங்கு காற்று புக முடியும்.
அப்படி அமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட வெங்காயம் 5 மாத காலம் பாதுகாப்பு செய்ய முடியும். எவ்வளவு மழை, வெயில், காற்று ஆகிய அனைத்து சூழ்நிலைகளையும் தாங்கும் வல்லமை இந்த பந்தாடைகளுக்கு உண்டு. இந்த பந்தாடையில் சுமார் 50 மூடை பாதுகாக்கப்பட்டால் சுமார் 7 மூடை வரை அளவு குறையும்.
——
வெங்காய படல் அந்த காலத்துல கொங்கு வட்டார பகுதிகளில் நடைமுறையில் இருந்த வெங்காய படல் இப்போ அறிதாகிடுச்சு.
கோவை மேற்கு தொடர்ச்சி மலை பக்கம் இருக்குற ஊர்களில் இன்றளவும் நடைமுறையில் உள்ளது கோவை நரசிபுரம்,ஆலாந்துறை, உடுமலைப்பேட்டை, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் மாவட்டம், திருச்சி துறையூர்,ராசிபுரம்,வையப்பமலை,
திருப்பூர்,கொடுவாய் பகுதியில் இன்றளவும் படல் போடுறது வழக்கம்.
படல் போடுறதுக்கு முதலில் செம்மண்ணை அடியில் போட்டு மேடு பன்னுவாங்க அதுக்கு பிறகு இரண்டு அடிக்கு ஒரு கல்லு வைப்பாங்க கருங்கல், குண்டுக்கல், ஹலோபிளாக் கல் வைப்பாங்க.அந்த கல்லுக்கு மேல அந்த இரண்டு அடியில் மூங்கில் செஞ்ச தப்பை அப்படி இல்லைனா பாக்கு மரத்துல செஞ்ச தப்பை அடி படலுக்கு போடுவாங்க.
அடி படலுக்கு ஒட்டி இரண்டு பக்கமும் #மூங்கில்_சீம்பு னு சொல்லுவாங்க (மூங்கில் பக்க மாரு கொழுந்து மாருல பன்றது). அதை இரண்டு பக்கமும் வச்சு படலை மறைப்பாங்க அந்த மூங்கில் சீம்பு பக்கம் வாட்டுல மூங்கில் கட்டை வூனுவாங்க படலை தாங்கி புடிக்கிறதுக்கு. மூங்கில் சீம்பு இப்போ உடுமலை பேட்டை பகுதிகளில் செஞ்சு விற்பனையும் பன்றாங்க. இப்படி தான் படல் போடுவாங்க.
அதுக்கு பிறகு வெங்காய காட்டுல எடுத்து தாள் கில்லி களத்துல போட்டு அதுக்கு பிறகு படல் போடுவாங்க.
மழை காலத்துல வெங்காயம் எடுத்தாங்கனா படல் பக்கத்துல இருக்குற களத்துல போட்டு இரண்டுறொரு நாள் காயவச்சு மேல் மண் விழுந்ததும் படல்ல போட்டு வைப்பாங்க.
நல்ல விலை வந்தா தான் படல பிரிப்பாங்க அது இரண்டு மாசம் நாலும் சரி இல்லை ஆறு மாசம் ஆனாலும் சரி.
இந்த படல் இருக்குற வெங்காயத்தை விற்பனை செஞ்சது போக மீதி இருக்குற வெங்காயத்தை படல்ல வைச்சு அடுத்து வெங்காய நட்புக்கும் பயன்படுத்துவாங்க படல விதை சேகரிக்கும் முறையாவும் பயன்படுத்துறாங்க.
வெங்காயத்தை படல் போட்டு விளைச்சலும் தென்னந்தடுக்கு ஐஞ்சு ஏழு தடுக்கு வச்சு படல வேஞ்சுடுவாங்க அதுக்கு மேல தார்பாய் போட்டு கட்டி வைப்பாங்க.
ஒட்டன்சத்திரம் பக்கம் தென்னந்தடுக்கு வைக்காம ஓட்டை வச்சு மறைச்சுடுவாங்க.
மூங்கில் சிம்பு வச்சு இரண்டு பக்கமும் படல் அமைச்சா வெங்காயத்துக்கு காத்து சீரா போகும் வெங்காயமும் நல்லா இருக்கும்.
தகவல் வழக்கறிஞர் ரெங்கநாயகலு
எம் காம் பி எல்
கி மனோகரன் வெம்பக்கோட்டை வட்டம் கன்னி தேவன் பட்டி விருதுநகர் மாவட்டம்
8-9-2020.

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்