*#சிற்றிதழ்கள்*
————————
பலசிறுபத்திரிகைகள்நின்றுபோய்விட்டன.பேரிதழ்களேஇழுத்துமூடிக்கொள்கையில் சிற்றிதழ்கள் எம்மாத்திரம் என்ற போதும் சிற்றிதழ்கள் உண்டுபண்ணிய ஆத்மதிருப்தியை எந்த பேரிதழ்களும் செய்யவில்லை என்பதே நிதர்சனம். அடைமழையாய் அடித்துப் பெய்த சிறு பத்திரிகைளில் அப்போதெல்லாம் நனைந்து கிடப்பதே ஒரு சுகம்தான்.
அஃக், கல்வெட்டு பேசுகிறது, நவீன விருட்சம், நிழல், முகம், உயிர்மை, புதுவிசை, கவிதாசரண்,கூட்டாஞ்சோறு, பன்முகம், நடவு, உன்னதம், உங்கள் நூலகம், புதிய புத்தகம் பேசுது, கலை, காலம், தாய்மண், புதுகைத் தென்றல், சமரசம், நம் உரத்த சிந்தனை,திரை, கதைசொல்லி,புதியபார்வை,தீராநதி,காலச்சுவடு,படப்பெட்டி,ஆயுதஎழுத்து,விழிப்புணர்வு, வடக்கு வாசல், இனிய ஹைக்கூ,உழைப்பவர் ஆயுதம், தை, மண்மொழி, தச்சன், அதிர்வு,குழலோசை, தமிழ்நேயம்,யாதும்ஊரே,மதுமலர்,மீண்டும்கவிக்கொண்டல்,அநிச்ச,தமிழ்பணி,வல்லினம்,நறுமுகை,சோலைக்குயில், கணையாழி, அணி, கிழக்குவாசல், அணங்கு, தாமரை, கனவு, மேலும்,கலைக்கதிர்(கோவை),மெய்யறிவு,இனியநந்தவனம்,அம்ருதா,பெண்ணியம்,சௌந்தரசுகன்,அந்திமழை, சங்கு, பாவையர் மலர், ஏழைதாசன், புது எழுத்து, நந்தன், தாமரை, வாசகன், திசைகள், எழுத்து, இலக்கிய வட்டம், கசடதபற, நடை , சில,உயிர் எழுத்து, இனி,கொல்லிப்பாவைசெம்மலர்,தீம்தரிகிட,நாளைவிடியும்,கவிக்காவிரி, இனியநந்தவனம், உயிர்மை மணிமுத்தாறு, நடுகல், தாராமதி, முங்காரி, பயணம், பயணம் புதிது, கருக்கல், பாதை, தமிழர் கண்ணோட்டம், இலக்கியச் சிறகு, சிறகு, கனவு, சிந்தனையாளன், புதிய தென்றல், தென்றல், மகாகவி, கவிதை உறவு, தூறல், இறக்கை, மணல்வீடு, கோவில்பட்டியிலிருந்து வெளி வந்த நீலக்குயில், விவேக சித்தன், கொல்லிப்பாவை, வானம்பாடி, ழ, பிரக்ஞை, நவீன விருடசம், நிறப்பிரிகை, மணற்கேணி, என்று எண்ணற்ற பல இதழ்களைசொல்லிக்கொண்டேபோகலாம். இவையெல்லாம் தமிழ்ச்சூழலில் தவிர்க்கவே முடியாதபடிக்கு கலை இலக்கியம்சார்ந்ததொடர்அறிவியக்கங்களை கட்டமைத்த இதழியல் உன்னதங்கள்.
காலம் இன்று வேறொன்றாய் திருகி நிற்கிறது. வாட்ஸப்பில் வந்துவிழும் மின்னிதழ்கள் சிந்தை கவர்வதில்லை. கனவுகள் வெம்பி உதிர்கின்றன. முகநூல் கவியரங்கங்களில் அலைமோதுகிறது கவிஞர்கள் கூட்டம்... மின்திரையில் தட்டச்சு செய்யும் எந்த படைப்பிலும் உயிர்ப்பிருப்பதாய் தோன்றவில்லை. போஸ்ட் கார்டில் எழுதிய படைப்புகள் இன்றும் சாகாவரம் பெற்றவையாக உலவுவதின் விந்தை புரியவில்லை.
கே. எஸ். இராதாகிருஷ்ணன்
27.08.2020.
#ksrposts

No comments:
Post a Comment