இதே ஜூன் 6.,,, 1920
வா. கோபாலசாமி இரகுநாத
இராசாளியார் நினைவு நாள்.
அரித்துவாரமங்களம், இவ்வூரின் புகழுக்கு புகழ் சேர்த்தவர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில்(1870) பிறந்து இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில்(1920) இயற்கையெய்திய கோபாலசாமி இரகுநாதஇராசாளியார்.
இளம் வயதில் தந்தையை இழந்த நிலையில் கல்லூரி படிப்பை முடிக்க இயலாமல் குடும்ப சுமையை ஏற்றுக்கொண்டார். தமிழ் மொழியின்பாலும் இலக்கியங்களின்பாலும் மிகவும் ஈடுபாடு கொண்ட இராசாளியார் பண்டைய இலக்கியநூல்கள் பலவற்றை தேடிப்பெற்று தம் ஊரிலேயே ஒரு நூலகம் அமைத்தார். தமிழார்வம் காரணமாக தன் செல்வச்செழுமையை பயன்படுத்தி கிடைப்பதற்கரிய பல சுவடிகளைப் பெற்று தம் நூலகத்தை மிகச் சிறந்த நூலகமாக அமைத்தார்.
இங்கு வருகை தந்த திருவாடுதுறை ஆதினகர்தர் நூலகத்திலுள்ள அரிய நூல்களையும் சுவடிகளையும் பார்த்து இந் நூலகத்திற்கு சரஸ்வதி மகால் எனவும் பெயர் இட்டார்.
தமிழ்த் தாத்தா என்று அழைக்கபடும் உ.வே.சாமிநாத ஐயர் புறநானூறு ஒலைச்சுவடிகளை இராசாளியார் அவர்களிடம் தான் பெற்று அச்சிட்டார் என்பது வரலாறு.
இராசளியார் அவர்களின் தமிழார்வமும் மொழிப்பற்றும், அறிவுப்பசியும் அதைத்தீர்துக்கொள்ள தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் எங்கு கூட்டங்கள் நடந்தாலும் சென்று பங்கேற்கும் பாங்கும் தனிச்சிறப்பாகும். நான்காம் தமிழ் சங்கம் எனப்போற்றப்படும் இன்றைய மதுரைத் தமிழ்ச் சங்கத்தை பாண்டித்துரை தேவருடன் இனைந்து உருவாக்கியதில் இராசளியார் பங்கும் ஒரு வரலாறு.
இராசளியார் தஞ்சையில் இருந்த போது தஞ்சைத் தமிழ் சங்கம் செயல்பாடற்று போனது குறித்து கவலையுற்ற புலவர் பலர் இராசளியார் அவர்களிடம் தூண்டியதன் விளைவாக கரந்தையில் புதிய தமிழ் சங்கம் தோற்றுவிக்கப்பட்டதும் வரலாறு.
கரந்தை தமிழ்ச்சங்க நூலகத்திற்க்குத் தம் நூலகத்தில் இருந்து நூற்றுக்கணக்கான நூல்களையும் வழங்கி, குன்னூரில் ஒரு நூலகத்தையும் அமைத்து அங்கு தொல்காப்பியருக்குச் சிலையும் நிருவி தமிழ் வளர்த்தார் பண்டிதர் இராசளியார். இவ்வாறு இலக்கியம், சமயம், அரசியல், ஆகிய துறைகளில் ஈடுபட்டு புகழ் பெற்ற இராசளியார் குற்றபரம்பரை சட்டத்திற்கு எதிராகக் குரல் கொடுத்துத் தம் சமூக மக்களின் மேன்மைக்கு வழி செய்தார்.
இவர் சென்னை மாநிலக் கல்லூரியில் முதன்முறையாக தமிழ்த்துறை தோன்றுவதற்கு முன்னின்று உழைத்தார்.
No comments:
Post a Comment