தேமுதிகவிற்கு நாடாளுமன்றத்தில் ராஜ்யா சபா பதவி கொடுக்கப்பட்டால் மட்டுமே அண்ணா திமுகவுடன் கூட்டு என்று விஜயகாந்தின் துணைவியார் திருமதி பிரேமலதா சொல்லி இருப்பது என்னைப் பொறுத்தவரையில் முறையாகப்படவில்லை. அரசியல் சாணக்கியத்தன்மை இல்லாத ஒரு நிலைப்பாடை எடுக்கிறார்! நல்லபடியாகக் கூட்டணியில் நின்று விஜயகாந்தின் அன்பு பெற்ற வாக்காளர்களை ஒருங்கிணைத்து
உரிய இடங்களை வாங்கி ஜெயித்த பின் தாராளமாக ராஜ்ய சபா சீட்டை வாங்கிக் கொள்ளலாம். வரும் 2026 தேர்தலில் அதிமுக வெற்றி பெற அதிகம் வாய்ப்பு இருக்கிறது.
அதையெல்லாம் அனுசரித்து கூட்டணிக்குப் பாடுபட வேண்டும் அதை விட்டுவிட்டு ஒரு சீட் கொடுத்தால் தான் வருவேன் கூட்டணிக்கு என்பது நல்லதா?அதையும் பொது வெளியில் வைத்துப் பேசுவது எப்படி நல்லதாகும்! அதிக எம்எல்ஏக்கள் வந்து ஜெயிக்கும் நிலையில் ஒரு சீட்கேட்டால் அதிமுக கொடுத்து விட்டுப் போகிறார்கள். அதை விட்டுவிட்டு வளைக்கும் முன் கல்லெறிவது சரியானதாக இருக்குமா? அவசியம்,பிரேமலதா அவர்கள் யோசித்துப் பார்க்க வேண்டும்!
மக்கள் நல கூட்டணி போல ஆகி விட கூடாது என் கவலையே….
1-6-2025.
No comments:
Post a Comment