Sunday, May 10, 2015

நாடு எங்கே போகிறது..? இயற்கையின் நீதி எங்கே?

இன்றைக்கு (10-05-2015)  “Whatsapp" செயலியில் வந்திருந்த இந்தக் குறுஞ்செய்தியில் உள்ள உண்மைகள் யாவும் மறுக்க முடியாதது. புரையோடிய இந்த நாட்டை எப்படித் திருத்தப் போகிறோம். அன்பர்களே, நண்பர்களே, தோழர்களே இதை சற்று வாசித்துப் பாருங்கள்....
இந்த  நாடு எங்கே போகிறது..?



இன்றைக்கு “Whatsapp" செயலியில் வந்திருந்த இந்தக் குறுஞ்செய்தியில் உள்ள உண்மைகள் யாவும் மறுக்க முடியாதது. புரையோடிய இந்த நாட்டை எப்படித் திருத்தப் போகிறோம். அன்பர்களே, நண்பர்களே, தோழர்களே இதை சற்று வாசித்துப் பாருங்கள்....
இந்த  நாடு எங்கே போகிறது..?

ஜெயலலிதா வழக்கு நாளை தீர்ப்பு வர இருக்கின்றது. இந்த வழக்கை ஒட்டியே இங்குள்ள மாநில அரசு செயல்படாமல், மக்கள் திட்டங்களை எவையும்  நிறைவேற்றவிடாமல் வாய்மூடி மௌனியாக கடந்த ஆறுமாதங்களுக்கு மேலாக   அரசும் , அமைச்சர்களும் அக்கறையில்லாமல் இருப்பதை நாடே அறியும்.

சல்மான்கானுக்கு சாதகமான, உடனடியான  உத்தரவுகள். ஆனால் சாதாரண இந்திய பிரஜைக்கு இப்படி ஒரு விரைவான நீதி கிடைக்குமா?

 வேலூர் சிறையில் வாடும் பேரறிவாளனுக்கும், சாந்தனுக்கும் முருகனுக்கும் நளினிக்கும் எந்த அக்கறையும் ஆர்வமும் நமது அரசியல்பூர்வமான  அமைப்புகளுக்கு இல்லையே ?  இயற்கையின் நீதி எங்கே?



************************

*
சினிமாவும்_காவிரியும்

சினிமா வெளியாவதில் தடை என்றால் உடனே நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. விஸ்வரூபத்திற்கு தடையா? எதிர்கட்சி தலைவர் குரல்கொடுக்கிறார். முதல்வர் கருத்து சொல்கிறார்.
கொம்பனுக்குதடையா? இல்லையென உடனே நீதிமன்றம் அறிவிக்கிறது.

உத்தமவில்லனுக்கு தடையா? உடனே நீதிமன்றம் தீர்ப்புவழங்குகிறது.
அவசர வழக்காக எடுத்துக்கொண்டு விசாரிக்கிறது. அதற்கு வழக்கறிஞர்கள்,நீதிமன்றம் சொல்லும் காரணம்,  "10கோடி அல்லது 100கோடி முதல்போட்டு படம் எடுத்திருங்காங்க படம் வெளியாகலைன்னா பயங்கர நட்டம் வரும்"என்கிறார்கள்.

யாராருக்கு நட்டம்? தயாரிப்பாளர்-1to 4பேர், இயக்குனர் -1 ஆள்.
திரைப்பட கலைஞர்கள், தொழிலாளிகள் 500பேர்.
படத்தைவாங்கிய பிறகு விநியோகஸ்தர்கள் 100பேர்
மொத்தத்தில் ஒரு படம் வெளியாக வில்லையென்றால் 1000லிருந்து 5000பேர்வரை பாதிக்கப்படலாம்.

ஆனால், காவிரி,முல்லைப் பெரியாறில்
தண்ணீர் வரவில்லையென்றால்
காவிரியில் 14லட்சம்ஏக்கர்
பெரியாறில் 3லட்சம் ஏக்கர்.
குடும்பத்துக்கு 4பேர் என்றாலும்
17×4=68லட்சம் பேர்,
மறைமுக வேலைவாய்ப்பில் 1கோடிபேர்.
ஏறத்தாழ 2கோடிபேருக்கு பாதிப்பு
அதுவும் வாழ்வாதாரம்.

சினிமா வழக்கென்றால் உடனடியாக விசாரிக்கிறது
சல்மான்கானுக்கு 1மணிக்கு தண்டனை, 5மணிக்கு ஜாமின்
மின்சார வேகத்தில் தீர்ப்பு வருகிறது.  ஜெயலலிதாவைக்கண்டு நீதி பீதியாகிறது. நீதிபதியே ஓடும் நிலையாகிறது.  சுப்ரமணியசாமிக்காக நீதிபதியே காத்திருக்கிறார்.

அம்பானிக்கும்,டாட்டாவுக்கும் விடுமுறையில்கூட நீதிமன்றம் இயங்குகிறது. அவசர அவசரமாக அவர்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப் படுகிறது.  அதுவே காவிரிபிரச்சனை என்றால்,
50ஆண்டுகளுக்கு வழக்கு நடக்கிறது முல்லைப்பெரியாறுக்கு 40ஆண்டுகள் வழக்கு நடக்கிறது.

சினிமாவே இல்லையென்றாலும் யாரும் சாகப்போவதில்லை.
விவசாயம் இல்லையென்றால் உலகே அழிந்துவிடும்
விவசாயம் செய்யமுடியவில்லை என்பதால் 3லட்சம் விவசாயிகள் செத்து ரத்த சாட்சியாக மாறிவிட்டார்கள். இதை அவசர வழக்காக விசாரிக்காதது ஏன்?

1ம் தேதி வெளியாகும்படம் 10ந்தேதி வெளியானால் குடிமுழுகிப் போகாது. பயிருக்கு தண்ணீர் குறிப்பிட்ட நேரத்தில் வரவில்லையென்றால் குடிமுழுகித்தான் போகும். விதைப்பு தள்ளிப்போனால் பருவம் மாறி மழைக்காலத்தில் பயிரும்
முழுகித்தான் போகும்.

மழைக்காலத்தில் சினிமாவுக்கு குடையோடு போகலாம்.
மழைக்காலத்தில் அறுவடைக்கு குடையோடு போக முடியுமா?

சல்மான்கான் சிறைக்குப் போனால்  ஐயகோ! 500கோடி முதல் போட்ட தயாரிப்பாளர் என்ன ஆவது? என ஆதங்கப்படுகின்றன
ஊடகங்கள். அவரை விடுதலை செய்ய வேண்டுமென பாம்பேயில் போராட்டம் நடத்துகின்றனர். அதே மகாராஷ்டிராவில்தான் விவசாயிகளின் தற்கொலை மண்டலமான விதர்பாவும் இருக்கிறது.

விவசாயம்  இது உயிர்வாழும் பிரச்சனை. வாழ்வாதாரப் பிரச்சனை.
இது தேசத்தின் பிரச்சனை.  நதிநீர் பிரச்சனையை மட்டும் இழுத்தடிப்பது ஏன்? அதற்கான சட்டமில்லையா? அதை நடைமுறைப்படுத்த திட்டமில்லையா?

ஒரே காரணம்தான், இந்தியச் சந்தை தகர்ந்துவிடும் அதற்கு இளிச்சவாய் தமிழகம் பலியாக வேண்டும்.
*

#KSRadhakrishnan
#KSR_Posts

No comments:

Post a Comment

#கொடுக்காய்புளி - #அழகர்கோவில்

#கொடுக்காய்புளி காலம்(சீசன்) மதுரை- #அழகர்கோவில் சிலம்பாறுபாயும் தென் திருமாலிருச் சோலையே... -#பெரியாழ்வார் # அழகர்கோவில் #கேஎஸ்ஆர்போஸட் #ks...