Thursday, May 28, 2015

திரும்பவும் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தைப் பற்றி - UK Parliament.












உலக அரசியலமைப்புச் சட்டங்கள்,  நாடாளுமன்றங்கள் மற்றும் அரசியலமைப்புகள்  ஒப்புமைநோக்கு ஆய்வு பற்றி ,
நான் எப்போதும் ஆர்வமாக படிப்பதும், அதுகுறித்து எழுதுவதும் உண்டு.

பிரிட்டிஷ் பாராளுமன்றம் முறை முக்கிய அரசியல் செயல்முறையாகும். எனவே, அதைக்குறித்து தொடர்ந்து
பதிவு செய்து வருகின்றேன்.

அரசியலமைப்புச் சட்டம் எழுதப்படாத நிலையில் பிரிட்டனும், இஸ்ரேலும் தங்களுடைய மரபுகள், செயல்பாடுகள் கொண்டே அரசியலமைப்பு முறைகளை கையாண்டு வருகின்றன.
இது ஒரு வித்யாசமான அணுகுமுறை.

பிரிட்டன் பாராளுமன்ற முறை உலகத்தில் முதன்மையானது. பிரதானமானது. ஆனால் அங்கு அரசியலமைப்புச் சட்டம் எழுதப்படாமல் அரசுகள் அங்கே ஆட்சிகள் செய்கின்றன.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் தான் உலகிலேயே நீண்ட அரசியலமைப்புச் சட்டம். அதிகமான பிரிவுகள். எழுபதாண்டுகளுக்குள்ளே நூற்றுக்கும் மேற்பட்ட திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

இந்திய மண்வாசனை, இந்திய சூழல்களுக்கு ஏற்றவாறு இந்திய அரசியலமைப்புச் சட்டம் அமையவேண்டுமென்று என்போன்றவர்களுக்கு கருத்துகள் உண்டு. தேவைக்கேற்ற வகையில் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் அரசியலமைப்புச் சட்டம் வரவேண்டுமென்பது விவாதப் பொருளாகவும் உள்ளது.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
28-05-2015.



#KSR_Posts
#KSRadhakrishnan.




No comments:

Post a Comment

30 August

  எந்த இடியட்க்கும் பதில் சொல்ல மாட்டேன் | ஸ்டாலின் உருட்டு.. அவிழ்த்து விட்ட #KSR KSR | BJP | AMITSHAH | MODI | L MURUGAN | NAINAR NAGEND...