Wednesday, May 6, 2015

பிரிட்டன் பொதுத்தேர்தல் - UK: ELECTIONS





பிரிட்டனில் நாளை (07-05-2015) பொதுத் தேர்தல் நடக்க இருக்கின்றது. கன்சர்வேடிவ் கட்சியும், லேபர் கட்சியும் பிரதானப் போட்டியாளராக உள்ளனர். ஏற்கனவே டேவிட் கேமரூன் தலைமையில் கன்சர்வேடிவ்ஸ் கட்சியின் கூட்டணி ஆட்சி அங்கு நடக்கின்றது.

தேர்தல் களத்தில் லேபர்கட்சி என்ற எதிர்கட்சியான தொழிலாளர் கட்சித் தலைவர் மிலிபண்ட், ஆளும் கூட்டணிக்கு எதிராக பிரச்சாரத்தை நடத்தி வருகின்றார்.

கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் டேவிட் கேமரூன் முதல் 100நாட்கள் திட்டத்தில் வீட்டுவசதி, குழந்தைகள் நலம், ஊதிய நலங்கள் கவனிக்கப்படுமென்று உறுதி அளிக்கின்றார்.   

தொழிற்கட்சி தலைவர் மிலிபண்ட், வாடகை உயர்வைத் தடுத்து கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வருவோம் என்று உறுதியை அளித்து வருகின்றார்.


மற்றொரு புறத்தில் ஐக்கிய ராஜ்ஜிய சுதந்திரக் கட்சி(Ukip), லிபரல் டெமாக்ரட் கட்சி (Liberal Democrats) மற்றும்கிரீன் கட்சி(Green Party) என்ற மூன்று அரசியல் கட்சிகளும் தேர்தல் களத்தில் தங்கள் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றது.

கன்சர்வேட்டிவ் மற்றும் தொழிலாளர் கட்சி என்ற இரண்டு கட்சிகளை கொண்டடங்கிய அரசியல் களமாக  பிரிட்டன் முன்பு இருந்தது. தற்போது பல கட்சிகளின் களமாக பிரிட்டன் காட்சியளிக்கின்றது.

தேர்தல் கருத்து கணிப்பிலும் இரண்டு கட்சிகளுக்குமே கடுமையான போட்டி இருக்கின்றது என்றும், கருத்துகணிப்பில் 33% கன்சர்வேட்டிவ் கட்சிக்கும், தொழிலாளர் கட்சிக்கும் சரிசமமாக ஆதரவு இருப்பதாகவும், ஐக்கிய ராஜ்ஜிய சுதந்திரக் கட்சிக்கு 12% சதவிகிதமும்  லிபரல் டெமாக்ரட் கட்சிக்கு 10% சதவிகிதமும், கிரீன் கட்சிக்கு 5%சதவிகிதமும் ஆதரவு இருப்பதாக தெரியவந்துள்ளது.

நாளை காலை ஏழு மணியிலிருந்து இரவு 10மணிவரை 650 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடக்கின்றது. 3500 ஊழியர்கள் தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இரவு 10 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குகளை எண்ணத் தொடங்கிவிடுவார்கள். இந்தப் பணிக்கு மட்டும் தனியாக 1500 ஊழியர்கள் வரை பணியாற்றுகின்றார்கள். பன்னாட்டு தேர்தல் பார்வையாளர்களும் பிரிட்டனில் முகாமிட்டுள்ளனர். வாக்குப் பதிவின் முடிவு மறுநாள் மே 8ம் தேதி அறிவிக்கப்படும்.  

பிரிட்டனின் மொத்த மக்கள் தொகை : 63,843,856
அவற்றில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை.  45,329,691
தேர்தல் களத்தில் நிற்கும் வேட்பாளர்கள் எண்ணிக்கை.  3,971
இதில் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த மக்கள்  : 1.4 மில்லியன்.
மொத்தம் தொகுதிகள் எண்ணிக்கை : 650.  
இதில் இந்தியர்களின் வாக்குகளைப் பெறுவதற்கு இரண்டு கட்சிகளுமே முனைப்பாக செயல்படுகின்றது. குறிப்பாக பஞ்சாபிகள், தமிழர்களின் வாக்குகளைப் பெற டேவிட் கேமரூன் மக்களுக்கு மத்தியில்  சப்பாத்தி சுடுவது போன்ற புகைப்படங்களும், தமிழர்களின் உரிமைகளுக்காக குரல்கொடுப்போம் என்ற உறுதிமொழிகளும் கவனிக்க முடிகின்றது.


இங்கிலாந்தின் பல்வேறு தேசிய இனங்கள் என்று சொல்லிக்கொள்ளும் வகையில் ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்து, வேல்ஸ் என்ற பிரிவுகளும் உள்ளன. ஒவ்வொரு வட்டாரத்திலும் தங்களுடைய ஆளுமைகளை நிலைநாட்டிக் கொள்ள இந்த தேர்தல் களத்தைப் பயன்படுத்த உள்ளனர்.


இங்கிலாந்தில் உள்ள தொகுதிகள் : 533
ஸ்காட்லாந்தில் உள்ள தொகுதிகள் : 59
வேல்ஸில் உள்ள தொகுதிகள் : 40.
வடக்கு அயர்லாந்தில் உள்ள தொகுதிகள் : 18


பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பிரபுக்கள் அவை என்று சொல்கின்ற மேலவைக்கு தற்போது 783 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.  இந்த உறுப்பினர்களுடைய எண்ணிக்கை நிலையானதல்ல. சிலசமயம் குறையலாம் கூடலாம்.

ஆனால் ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் என்ற மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப் படுகின்ற 650 நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்பது முடிவான எண்ணிக்கையாகும்.
இந்தியாவில் இருப்பது போலவே இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் இரு அவைகள் உண்டு. இந்திய மாநிலங்கள் அவையில் ஒவ்வொறு மாநிலத்திற்கும் இத்தனை நாடாளுமன்ற உறுப்பினர் தான் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் பிரிட்டனில் நமது மக்களவை போன்று அங்குள்ள பிரபுக்கள் அவைக்கு உறுப்பினர்கள் இத்தனைபேர்தான் என்று உறுதியான எண்ணிக்கை கிடையாது.

பிரிட்டன் இந்தியாவை விட சிறிய நிலப்பரப்புகொண்ட தீவு ஆகும். தேர்தல்கள் அங்கே நியாயமாக நடப்பது உறுதிப்படுத்தப்பட்டதாகும். இந்தியாவைப் போன்று வாக்குக்கு பணம் கொடுப்பது போன்ற தேதல் தில்லுமுல்லுகள் அங்கு பெரிதாக இல்லை.
போட்டிக்களத்தில் உள்ள கட்சிகள் தங்களுடைய உறுதிமொழிகளை ஒரே இடத்தில் கூடி ஆரோக்கியமாக விவாதம் செய்யக்கூடிய அரசியல் நிலைப்பாடு பிரிட்டனில் உள்ளது.
இந்த வாரம் ஈ.பி.டபிள்யூ ஏட்டில் பிரிட்டன் தேர்தலைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது, அங்கே வலதுசாரி இடதுசாரி பிரச்சனைகள் இருந்தாலும், சோஷியலிசம், கம்யூனிசம் கொள்கைகளுக்கு லேபர் கட்சி செய்யும் பிரச்சாரங்களுக்கு பிரிட்டன் மக்களிடையே ஒரு மவுசு இருக்கின்றது என்றகருத்தை சுட்டிக் காட்டியுள்ளது. ஐக்கிய ராஜ்ஜிய சுதந்திரக் கட்சி இந்த தேர்தல் களத்தில் பெரிய கட்சிகளுக்கே சவாலாகவும் உள்ளது.
வரும் மே 87ம் தேதி பிரிட்டனில் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்று எதிர்பார்ப்போம். கூட்டணி ஆட்சியா? தனிக்கட்சி ஆட்சியா? கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சியைப் பிடிக்குமா லேபர் கட்சி ஆட்சியைப் பிடிக்குமா என்ற முடிவுகள் தெரியவரும்.


   
 -கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
06-05-2015




The United Kingdom At A Glance
The parties, the system, the numbers for government
David Cameron, ConservativeEd Miliband, Labour

Nick Clegg, Liberal DemocratsNatalie Bannett, Green Party
  • Elections May 7
  • Results May 8
  • UK population 63,843,856
  • Total voters 45,329,691
  • Candidates 3,971
Current Position
  • Conservatives 306 Lib-Dem 56 Labour 258
  • Total people of Indian origin 1.4 million
  • Migrant Indian voters 6,15,000
650 Parliamentary Constituencies
  • Scotland 59 seats
  • England 533 seats
  • Northern Ireland 18 seats
  • Wales 40 seats
The parties
The Conservatives (aka the ‘Tories’) and Labour are the two main parties and have formed the majority of the governments since the 1920s. United Kingdom Independent Party (UKIP), Scottish National Party (SNP) and the Greens are the other parties with a pan-UK presence.

Coalition
A party needs 326 seats in the House of Commons to form the government on its own. Since 1945, the UK had no coalition government till 2010, when the Conservatives and Liberal-Democrats came together.

The Country
The United Kingdom is a unitary democracy within the framework of a constitutional monarchy. The monarch is head of state while the prime minister is head of government. Executive power is exercised on behalf and with the consent of the monarch. The monarch still has powers including appointment/dismissal of the PM and his/her government.

The System
A first-past-the-post electoral system, much like India’s. Two-tier parliament like India’s, but with a far greater number of representatives given the smaller size of the population: House of Lords, the upper chamber, with no fixed numbers, has 783 members at present, while House of Commons, the lower chamber, has a fixed number: 650.

No comments:

Post a Comment

#கொடுக்காய்புளி - #அழகர்கோவில்

#கொடுக்காய்புளி காலம்(சீசன்) மதுரை- #அழகர்கோவில் சிலம்பாறுபாயும் தென் திருமாலிருச் சோலையே... -#பெரியாழ்வார் # அழகர்கோவில் #கேஎஸ்ஆர்போஸட் #ks...