Thursday, May 14, 2015

சீனாவைப் பார்த்து இந்தியா கற்றுக்கொள்ளவேண்டும் - What India Should Learn From China.

















பிரதமர் மோடி இன்றைக்கு சீனா சென்றுள்ளார். ஒரு காலத்தில் இரும்புத்திரைக்குள் என்ன நடக்கின்றது என்பதே தெரியாமல் சீனா இருந்தது. மாவோ காலத்திலிருந்து கட்டுப்பாடுகள் மிகுந்திருந்த தேசத்தில் இன்றைக்கு தாராளமயமாக்கலின் விளைவாக  சீனா அமெரிக்காவோடு போட்டி போடக்கூடிய அளவில் வளர்ந்துவிட்டது.
சோவியத் ரஷ்யா வீழ்ச்சிக்குப் பின் சீனாவின் வளர்ச்சி அளப்பரியது.

1979லிருந்து திட்டமிட்ட பொருளாதார நோக்கோடு சீனா செயல்பட்டதால், வளர்ச்சியில் உலகத்திலேயே சிறந்த நாடாக இன்றைக்கு விளங்குகிறது. மக்கள்த் தொகையை கட்டுப்படுத்தி அங்குள்ள மக்களுக்கான தேவைகளைப் பூர்த்தி செய்தும், அவர்களின் வளமான வாழ்க்கைக்குப் பலதிட்டங்களை கடந்த 35 ஆண்டுகளாக செயல்படுத்தி வந்த காரணத்தினால் சீனா வெற்றிகண்டுள்ளது.

இந்தியா இன்றைக்கு மக்கள்தொகையில் உலகில் முதல் இடத்திற்கு வந்துவிடும் என்ற நிலையில் உள்ளது. இந்தியாவின் மக்கள் தொகை வளர்ச்சியை கட்டுப்படுத்தவேண்டியது அடிப்படையான விடயமாகும். இதனைக் கட்டுப்படுத்தாவிட்டால் எவ்வளவு வளர்ச்சி பெற்றாலும் தேவைகளையும் அவசியங்களையும் பூர்த்தி செய்ய முடியாது.

பொருளாதாரத்தில் மால்தஸ் கோட்பாட்டின்படி, இந்தியாவின் மக்கள் தொகை எண்ணிக்கை விகிதத்தில் பெறுகாமல், geometric ratio என்னும் பெருக்குத் தொடர் முறையில் கோடிகளில் பெருகிக்கொண்டே செல்வதால், என்ன வளர்ச்சித் திட்டங்கள் கொண்டு வந்தாலும்  வளர்ச்சிக்கான இலக்கை எட்டமுடியாது.

பிரதமர் மோடி பதவியேற்றதிலிருந்து உலகநாடுகளைச் சுற்றி வருகின்றார். மற்றநாடுகள் சென்றதுபோல் இல்லாமல், 1975வரை  சீனாவில் ஏற்பட்ட பொருளாதார சிக்கல்களை சமாளித்து, நிலைமையைச் சமன்செய்து இன்றைக்கு வளர்ச்சிப்பாதையில் முன்னேறியதை பாடங்கற்று வந்தால் இந்தியாவுக்கும் நல்லது. அவரின் சீனப்பயணம் வெற்றி என்றும் நாம் சொல்லலாம்.


"China's rise since 1979 has been the result of immense planning and foresight ." 


-கே.எஸ்.இராதாகிருஷ்ணன். 
14-05-2015.





No comments:

Post a Comment

#கொடுக்காய்புளி - #அழகர்கோவில்

#கொடுக்காய்புளி காலம்(சீசன்) மதுரை- #அழகர்கோவில் சிலம்பாறுபாயும் தென் திருமாலிருச் சோலையே... -#பெரியாழ்வார் # அழகர்கோவில் #கேஎஸ்ஆர்போஸட் #ks...