Saturday, May 2, 2015

வரலாற்றில் பிரிட்டனின் காலடி படாத நாடுகள் - Britain never invaded Countries.




உலகில் பிரிட்டனின் பாதம் படாமல் தப்பித்த நாடுகள் என்று கணக்கெடுத்தால் மொத்தம் 22 நாடுகள் உள்ளன.
பிரிட்டன் 18 மற்றும் 19ம் நூற்றாண்டில் தன்னுடைய    ஏகாதிபத்தியத்தின் கீழ் உலகின் பல நாடுகளை தங்களுடைய காலனி நாடுகளாக மாற்றித் தங்கள் வணிகம் கொழிக்கும் வகையில்  ஆட்சி செய்தது.

இந்த நாடுகளின் செல்வங்களையும் வளங்களையும் கபளீகரம் செய்து எடுத்துச் சென்றது. பலவிதமான தியாகம் நிறைந்த போராட்டங்களின் வாயிலாக பல நாடுகள் பிரிட்டனிடமிருந்து தங்கள் இறையாண்மையையும், தங்கள் தேசிய இனத்தின் சுதந்திரத்தையும் மீட்டெடுத்தன.

பல நாடுகள் தங்கள் சுதந்திரத்திற்காக கொடுத்த தியாகமும், விலையும் அளப்பரியவை. படிப்படியாக 19ம் நூற்றாண்டில் சுதந்திரம் பெற்ற நாடுகள் பிரிட்டன் காமென்வெல்த் அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளன.

மேலை நாடுகளும் அமெரிக்காவும் இன்றைக்கும் ஆப்பிரிக்காவிலும், தென் அமெரிக்காவிலும், உள்ள செல்வங்களையும், தாது வளங்களையும் போட்டிபோட்டுக்கொண்டு கொள்ளையடிப்பது நடந்தவண்ணம் தான் இருக்கின்றது.

பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தில் தப்பிய நாடுகள் இந்த வரைபடத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
02-05-2015.

According to an analysis by historian Stuart Laycock, that statement was once eerily accurate. All the Countries We’ve Ever Invaded: And the Few We Never Got Round To found that there are only 22 countries Britain never invaded, as shown in this Statista map.

“Other countries could write similar books – but they would be much shorter. I don’t think anyone could match this, although the Americans had a later start and have been working hard on it in the twentieth century,” Laycock said of his research.


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...