Monday, October 5, 2015

திருவள்ளூர் மாவட்டத்திலும் விவசாயத்தை பாழ்படுத்தும் கேஸ் பைப்லைனா ???



கொங்கு மண்டலத்தில் கேஸ்  பைப்லைன் பதிப்பு பிரச்சனையை போன்று தற்பொழுது திருவள்ளுவர் மாவட்டம் பொன்னேரி,சென்னை ,எண்ணூர் பகுதியுலுள்ள ஐநூறு கிராமங்களை சுற்றி கேஸ் பைப்லைன்  திட்டம் மதுரை வரை பதிக்க திட்டங்கள் உள்ளன.திருவள்ளுர் மாவட்டத்தில் நெல், கரும்பு ,வாழை,கேழ்வரகு சக்கரவள்ளி கிழங்கு , சவுக்கு போன்றவை பயிரிடபடுகின்றன, அதை பாழ்படுத்தக்கூடிய வகையில் ஐஒசி கேஸ் பைப் லைன்களை பதிக்க விளைநிலங்களை கையகபடுத்தும் நடவடிக்கைகளை வருவாய் துறை அதிகாரிகள் முடுக்கிவிட்டுள்ளனர் . ஏற்கனவே விவசாயம் பாழ்பட்டுகொண்டு வருகிறது , இப்பொழுது தமிழகம் முழுவதும் விவசாயத்தை பாதிக்க கூடிய வகையில் இப்படி திட்டங்களை கொண்டுவருவதில் மத்திய மாநில அரசுகள் தீர்மானமாக உள்ளன.



தஞ்சை டெல்டா பகுதியில் மீத்தேன் வாயு திட்டத்தை மக்களின் எதிர்ப்பின் மத்தியில் அங்கே நிறைவேற்ற அரசு கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் இந்த கேஸ் லைன் பதிப்பு திட்டத்தால் இரண்டு போகம் விளையும் வாயலூர், ஏறணம்பேடு, செங்கழனிர்மேடு போன்ற வளமான பகுதிகளெல்லாம் பாழ்பட்டு போய்விடுமென விவசாயிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.வன்னிபாக்கம்,மேட்டுப்பாளையம், சிறுபாக்கம் கிராமங்களில் உள்ள விவசாயிகளும் , விவசாய கூலிகளும் கொதித்தெழுந்துந்துள்ளனர்.

தமிழகத்திலுள்ள ஒவ்வொரு வட்டாரத்திலும் விவசாயத்தை முடக்க கூடிய வகையில் அரசுகள் சுற்றுச்சூழலை பாதிக்ககூடிய திட்டங்களை கொண்டுவந்தால் மக்கள் சக்தி நிச்சயமாக ஆலவந்தார்களுக்கு எதிராக திரும்பி பெரும் விளைவுகளை சந்திக்க வேண்டிவரும்.

- கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
 05-10-2015

‪#KsRadhakrishnan‬ ‪#‎KSR_Posts‬ #Gaspipeline #tiruvallurdistrict #Agriculture‬

No comments:

Post a Comment

காலம் காலமாக நம்மை யாரேனும்

 காலம் காலமாக   நம்மை யாரேனும்  நினைவில் வைத்திருத்தல்  அத்தனை இலகுவான விடயமா என்ன அதற்கு  ஏதெனுமொரு காரியத்தை  பெரிதாய் செய்திருக்க வேண்டும...