Tuesday, October 6, 2015

வைப்பாற்றில் மணற்கொள்ளை



மஸ்கட்டிலிருந்து திரு செல்வராஜ் அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் வைபாற்றில் நடக்கும் மணற்கொள்ளை பற்றி செய்தி அனுப்பியிருந்தார். வைப்பாற்றில் கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக மணலை கபளீகரம் செய்த சில கும்பல்கள் கொழுத்து வருகின்றது . பல போராட்டங்களில் நீதிமன்ற வழக்குகள் என்று பிரச்சனைகளை எடுத்து சென்ற பின்பும் மணற்கொள்ளையை தடுக்க முடியவில்லை என்பதுதான் அனைவரின் வருத்தம்.

திரு .செல்வராஜ் அனுப்பிய செய்தி ,
மணல் அள்ளப்பட்டு விட்டதால் சுடுகாடு போல் காட்சியளிக்கும் வைப்பாறு ஆறு. பல ஆயிரம் ஆண்டுகளாக ஆற்றில் வந்த வெள்ள பெருக்கில் உருண்டோடி வந்த மணல் சிறுக சிறுக பெருகி புதையுண்டன. விலை மதிக்க முடியாத மணல் செல்வமாகும். ஒரு காலத்தில் வற்றாத ஜீவ நதியாக இருந்ததால் வைப்பாற்றின் நடுவே (இருக்கன்குடியில் ) மாரியம்மன் காட்சி கொடுத்தாள். கடந்த 10 ஆண்டுகளாக தன அழகிய முகத்தை இழந்து விட்டது. வருவாய் துறை பொது பணி துறை , காவல் துறையை சேர்ந்த மும்மூர்த்திகள் வைப்பாற்றை கூறு போட்டு விற்று விட்டன. மணல் கொள்ளை கும்பலுக்கு தொழிலதிபர் என பட்டம். என்ன செய்ய? நண்டு தின்னும் கூட்டத்தில் சிக்கி கொண்டால் நடுத்துண்டு எனக்கு என்றால் தான் இங்கு பிழைக்க முடியும். மணல் அள்ளும் கும்பலுக்கு உறுதுணையாக இருக்க ஆற்றுபடுகை கிராமங்களில் வசிக்கும் மக்களின் குடும்ப அட்டைகளுக்கு தலா 5000 வழங்கினர் மாபியாக்கள். அத்தொகையை பெற்று கொண்டு மணல் அள்ள உதவிய கிராம மக்களோ இன்று குடிநீருக்காக பல மைல் தொலைவு, இரவு முழுவதும் விழித்து எங்கிருந்தோ வரும் சீவலபேரி தண்ணீருக்காக காத்திருக்கும் அவலம் இதை யாரவது சிந்தித்தது உண்டா? வருங்கால தலைமுறையினருக்கு நாம் எதை விட்டு செல்ல போகிறோம். வேதனைடயுடன் .



-கே.எஸ்..இராதகிருஷ்ணன்
06-10-2015

No comments:

Post a Comment

2023-2024