Wednesday, October 14, 2015

உப்பளம் - Saltern

உப்பளம் - Saltern
_______________________________
உப்பிட்டவரை உள்ளளவும் நினை ' என்பது வாக்குமொழி.
மனித வாழ்கையில் உப்பு சிறிதளவு தேவைபட்டாலும் அதை பெரியளவாக கருதுகிறோம்.
உப்பு தொழில் வரலாற்றில் முக்கியமான தொழிலாக கருதப்பட்டது. அண்ணல் காந்தி அவர்கள் ஆங்கிலேயே ஆட்சியை எதிர்த்து போராடியபோது தண்டியை நோக்கி சென்றதெல்லாம் வரலாற்று செய்திகள். இந்த உப்பு போராட்டம் அப்போது இந்தியா முழுவதும் அப்போது நடைபெற்றது . தமிழகத்தில் மூதறிஞர் ராஜாஜி , வேதாரண்யம் நோக்கி நடைபயணமாக சென்றார்.
இந்த போராட்டங்கள் அப்போது ஆங்கிலேயர்களை திகைக்க வைத்தது. உப்பு எங்கள் கடல் நீரில் உள்ளது, அதை எடுப்பது எங்கள் உரிமை, அதைதடுக்க நீங்கள் யார் என்று ஆங்கிலேயரை வினவி நடத்திய போராட்டம். இப்படிப்பட்ட உப்பை பற்றி கோ.செங்குட்டுவன் அவர்களின் பதிவு வரலாற்று பூர்வமாக உள்ளது. அது
>>
கி.பி.81-96இல் அலெக்சாண்டிரியாவைச் சேர்ந்த வணிகர் ஒருவரால் எழுதப்பட்ட பெரிப்ளு ஆப் எரித்ரியன் சீ (செங்கடற் பயணக் கையேடு)” எனும் நூலில், தமிழகத் துறைமுகப்பட்டினங்கள் குறித்து எழுதப்பட்டுள்ளது.
இதில், திண்டிஸ் (தொண்டி), முசிரிஸ் (முசிரி), கொல்சாய் (கொற்கை), நிகாமா (நாகப்பட்டினம்), கமரா (காவிரிப்பூம்பட்டினம்), பொதுகே (புதுச்சேரி), மசோலியா (மசூலிப்பட்டினம்), சோபட்மா ஆகியவை துறைமுக நகரங்களாக இடம்பெற்றுள்ளன.
இறுதியாகச் சொல்லப்பட்டுள்ள “சோபட்மா” இன்றைய மரக்காணம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஊர், சங்க இலக்கியங்களில் எயிற்பட்டினம் என்பதாகக் குறிக்கப்பட்டுள்ளது.
இங்குள்ள பூமிசுரவர்க் கோயில் முதலாம் இராஜராஜன் காலத்தியதாகும்.
இப்போது நாம் பார்க்கப்போது இந்தக் கோயிலைப்பற்றி அல்ல, மண்ணைப் பற்றி. இங்குப் பரந்து விரிந்துள்ள உப்பளங்களைப் பற்றி...
சோழராட்சியில் உப்பு உற்பத்தியில் தலைமையிடங்களாக விளங்கிய மூன்று இடங்களைக் குறிப்பிடுகிறார், ஆய்வறிஞர் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி.
அவை மரக்காணம், கன்னியாகுமரி, வரியூர் ஆய்துறை என்பதாகும்.
கிழக்குக் கடற்கரைச் சாலையில் பயணித்தவர்கள்–பயணிப்பவர்கள் பார்த்திருக்கலாம், இயற்கை அன்னையின் முகத்தில் துளிர்த்த, வியர்வைத் துளிகளாய் பூத்து நிற்கும் உப்புகளை.
மரக்காணம் பகுதியில் 2ஆயிரத்து 600 ஏக்கரில் உப்பு உற்பத்தி நடக்கிறது. ஆண்டொன்றுக்கு 40 ஆயிரம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.
இத்தொழிலில் 5ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் உப்பு உற்பத்தியில் மரக்காணம் மூன்றாவது இடத்தை வகிக்கிறதாம்.
முதலிரண்டு இடங்களை தூத்துக்குடியும் வேதாரணியமும் பிடித்துள்ளன.
விழுப்புரம் மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், மாண்புக்கும் நிலைக்களனாக விளங்குகிறது மரக்காணம்.
இப்பகுதி மக்களுக்கு விவசாயமும் உப்பளத் தொழிலும் இரண்டு கண்களாகும்.
இதில் ஈடுபட்டுள்ளவர்களை அபாயம் ஒன்று சூழ்ந்துள்ளது.
அது, இப்பகுதியில் அரசு விதிகளை மீறி இயங்கி வரும் இறால் பண்ணைகளிடமிருந்துதான்.
இவற்றில் இருந்து வெளியேற்றப்படும் நச்சுக் கலந்த கழிவுநீரால் மரக்காணத்தின் நிலத்தடி நீரானது வெகுவாக மாசுபட்டுள்ளது.
இதனால், “உப்பு உற்பத்திக் குறைந்து உற்பத்தியாகும் உப்பும் நச்சுத் தன்மை காரணமாக தரமிழந்து தலைகுனிந்து நிற்கிறது” என்பது, விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் (மா.கம்யூ) ஆர்.ராமமூர்த்தி போன்றவர்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது.
இதையெல்லாம் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய,
உப்பளம் மற்றும் விவசாயத் தொழில்களைக் காப்பாற்ற வேண்டியப்
பொறுப்பும் கடமையும் மத்திய மாநில அரசுகளுக்கு இருக்கிறது...!
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
14-10-2015
‪#‎KSR_Posts‬ ‪#‎KSRadhakrishnan‬ ‪#‎Saltern‬

No comments:

Post a Comment

ஷோ கம்யூன் வாழ்வு…. என்றார். #polyamoryயும் #molecule எனும் சொல்லை சேர்த்து #polycule அழைக்கப்படுகிறது,இதற்கும் open relationship

ஓஷோ  கம்யூன்  வாழ்வு….  என்றார். #polyamoryயும் #molecule எனும்  சொல்லை சேர்த்து #polycule அழைக்கப்படுகிறது,இதற்கும் open relationship-என மே...