Tuesday, August 16, 2016

இந்தியாவின் முதல் தியேட்டர்

இந்தியர் ஒருவர் கட்டிய தென் இந்தியாவின் முதல் தியேட்டர்

1909ஆம் ஆண்டு இங்கிலாந்து இளவரசர் ஐந்தாம் ஜார்ஜ் மெட்ராஸ் வந்தபோது, அவரது வருகையை கொண்டாடும் விதமாக ஒரு பிரம்மாண்ட கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ஒலியுடன் கூடிய குறும்படங்கள் திரையிடப்பட்டன. இதற்காக பிரிட்டன் கம்பெனி ஒன்று 'க்ரோன்-மெகாபோன்' என்ற கருவியை கொண்டு வந்திருந்தது. இது கிராமபோன் பொருத்தப்பட்ட படப் புரொஜக்டர். திரையில் படம் ஓடும்போது, அதற்கேற்ப ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட ஒலி கிராமபோனில் இருந்து ஒலிக்கும். எனவே நடிகர்களின் உதட்டசைவும், திரையில் வரும் ஒலியும் ஒத்திசைவுடன் இருக்காது. இருப்பினும் திரையில் மனிதர்கள் பேசுவதும், வண்டிகள் சத்தத்துடன் ஓடுவதும் பார்ப்பதற்கு ஆச்சர்யமாகத்தான் இருந்தது.

இந்த கருவியைப் பார்த்த ரகுபதி வெங்கைய்யா என்ற புகழ்பெற்ற ஸ்டில் போட்டோகிராபருக்கு ஒரு யோசனை தோன்றியது. கண்காட்சி முடிந்ததும் பிரிட்டன் நிறுவனத்திடம் ரூ.30,000 கொடுத்து அந்த கருவியை வாங்கிவிட்டார். அந்த கருவி வெங்கைய்யாவின் வாழ்க்கையில் வசந்தத்தை தாறுமாறாக வாரி இறைத்துவிட்டது. வெங்கைய்யா முதலில் மெட்ராஸ் உயர்நீதிமன்றத்திற்கு அருகில் ஒரு கொட்டகை போட்டு அந்த கருவியை வைத்து படம் காட்டினார். மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து ஆர்வமுடன் பார்த்துச் சென்றனர். பின்னர் அதனை எடுத்துக் கொண்டு இந்தியா முழுவதும் சுற்றி, படம் காட்டினார். அப்படியே கோபால் பல்பொடி போல, இலங்கை, பர்மா போன்ற பல நாடுகளுக்கும் தனது கருவியுடன் படை எடுக்க ஆரம்பித்துவிட்டார். வெங்கைய்யாவிற்கு சென்ற இடமெல்லாம் சிறப்பாகிவிட்டதால் சீக்கிரமே பணக்காரர்கள் பட்டியலில் சேர்ந்துவிட்டார்.

No comments:

Post a Comment

Lost on Me by Veronica Raimo and translated by Leah Janeczko Longlisted for the International Booker Prize 2024

Lost on Me by Veronica Raimo and translated by Leah Janeczko Longlisted for the International Booker Prize 2024 Deliciously enjoyable' K...