Sunday, August 28, 2016

சிறுவாணி

சிறுவாணி :
-------------

கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களின் வாழ்வாதாரம் ,#சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவது குறித்து, கேரள மாநில அரசின் நீர் வளத்துறை , தமிழக அரசுக்கு மே 4 ஆம்  தேதி கடிதம் எழுதி உள்ளதாகவும், தமிழக அரசின் பதில் கிடைக்காததால் ஆகஸ்டு 11 மற்றும் 12 தேதிகளில் நடந்த நதிநீர் பள்ளத்தாக்கு மற்றும் நீர்மின் உற்பத்தி திட்ட மதிப்பீட்டு நிபுணர் குழு இத்திட்டத்தைத் தொடர ஒப்புதல் அளித்துள்ளது.

கேரள அரசின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகமும் கட்டுமானத்திற்கு இசைவு அளித்தது.

கேரள அரசு கடிதம் எழுதியும் தமிழக அரசு கண்டுகொள்ளாததால்தான், மத்திய அரசு சிறுவாணியின் குறுக்கே அணைகட்ட ஒப்புதல் தந்தது.

2002 ஆம் ஆண்டு பவானி ஆற்றின் குறுக்கே முக்காலி எனுமிடத்தில் அணை கட்டக் கேரளம் முயற்சித்தபோது, தமிழகத்தின் எதிர்ப்பரல் அத்திட்டம் நிறுத்தப்பட்டது. 

காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பில்,பவானி படுகையில் கேரள அரசுக்கு ஒதுக்கீடு செய்துள்ள 6 டி.எம்.சி. நீரில் இத்திட்டத்தை எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று கேரள மாநிலம் கூறுகிறது.  கேரள அரசு உத்தேசித்திருந்த இத்திட்டத்தின் மொத்த நீர் உபயோகம் 4.5 டி.எம்.சி. என்பதற்குப் பதிலாக 2.87 டி.எம்.சி. எனக் குறைத்து கhவிரி நடுவர் மன்றம் இத்திட்டத்திற்கு நீர் ஒதுக்கீடு செய்துள்ளது .
இந்த நிலையில், அட்டப்பாடி பள்ளத்தாக்கு நீர்ப்பாசனத் திட்டம் என்று கேரள அரசு -பாலக்கhடு மாவட்டம், மன்னார்கhடு வட்டம் சித்தூர் எனும் இடத்தில் சிறுவாணியின் குறுக்கே அணை ஒன்றைக் கட்டத் திட்டமிட்டு வருகின்றது. இதன் மூலம் 2.29 டி.எம்.சி. நீரை 4900 ஹெக்டேர் பாசனத்திற்கும் 3 மெகாவாட் நீர்மின் உற்பத்தித் திட்டத்தைச் செயல்படுத்தவும் கேரள அரசு முனைந்துள்ளது.

5.2.2007 இல் வழங்கப்பட்ட கhவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு ஆணையை எதிர்த்து கேரளா மற்றும் கர்நாடக அரசுகள் உச்சநீதிமன்றத்தில் சிவில் மேல் முறையீட்டு வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளன. தொடர்புடைய அனைத்து மாநிலங்களும் காவிரி நடுவர் மன்றத்தின் முன் விளக்கங்கள் கோரும் மனுக்களை 1956 ஆம் ஆண்டு நதிநீர்த் தாவா சட்டப் பிரிவு 5(3)இன் கீழ் தாக்கல் செய்துள்ள வழக்குகள் அஇன்னமும் நிலுவையில் உள்ளன.

காவிரிப் படுகை அல்லது அதன் துணை நதிநீர்ப் படுகைகளில் எந்த ஒரு புதிய திட்டத்தையும் செயல்படுத்துவது காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு ஆணைக்குப் புறம்பானது.
Attappadi Irrigation scheme was originally mooted in 1976 by Kerala. This scheme has been a bone of contention between Kerala and Tamilnadu for about 40 years. Originally, Kerala is not a beneficiary of 1924 Cauvery Agreement. After reorganisation of States only, Kerala has been incorporated as beneficiary under the Cauvery Agreement.

------------------------------------------------
Stanly Rajan
காவேரியினை தமிழகம் கொஞ்சம் கொஞ்சமாக மறந்துகொண்டிருக்கின்றது, இனி தானாக் வந்து நானே காவேரி என ஒரு மழைக்காலத்தில் அது சொல்லாமல் அடுத்த சந்ததிக்கு அது தெரியபோவதில்லை, அதுவரை ஒரு கரண்டி மணலை கூட விடாமல் அள்ளும் தீவிரத்தில் தமிழகம் இருக்கின்றது இருக்கட்டும்

தமிழகத்தின் ஒவ்வொரு மாவடடத்திற்கும் ஒரு சிறப்பும் பெருமையும் உண்டு, கன்னியாகுமரி மாவட்ட மட்டி வாழை, செந்தொழுவன்,வேர்ப்பலா என அதன் சிறப்புகள் அப்படி. நெல்லை மாவட்ட நுங்கு, பனங்கிழங்கு சுவை அலாதியானது பின்னாளில் அது அல்வா ஊர் என அடையாளம் மாற்றிகொண்டது கால கோலம். 

அற்ப அல்வாவினை விட ஆயிரம் அற்புதமான சுவைகள் நெல்லைக்கு உண்டு, அம் மண்ணில் வளரும் அருகம்புல் சாறுக்கே சுவை அதிகம்.

அம்மண்ணில் விளைந்த அரிசியின் நீராகாரம் முன் கூட அந்த அல்வா நிற்க முடியாது.

தஞ்சாவூர் குறுவை அரிசியும், மதுரை மல்லியும், வைகை அயிரை மீனும் காலத்தில் தன் பெயரினை பதித்துகொண்டவை, சேலத்து மாம்பழம் தனிருசி என்பார்கள்

அப்படி கோவை எனும் கோயமுத்தூரின் தனிபெரும் அடையாளம் சிறுவாணி அற்றின் மிக சுவையான நீர் என்பதும் இடம்பெற்றுகொண்டது. அதன் வரலாறு வித்தியசமானது

உலகின் மிக சுவையான குடிநீர்ல் அதற்கு இரண்டாமிடம், முதலிடத்தை வழக்கம் போல ஐரோப்பியன் வைத்திருப்பதாக சொல்லிகொள்வான், இல்லாவிட்டால் அவமானத்தில் தண்ணீர் குடிக்காமல் செத்துவிடுவான், அவன் அப்படித்தான் பெருமை அப்படி.

ஆனால் சிறுவாணி தண்ணீரின் சுவையே முதல்தரமான சுவை என அடித்து சொல்கிறது உலகம்.

காரணம் அது உதித்து வரும் பகுதியில் இருக்கும் மரங்களின் கனிகளும், குறிப்பாக மலைநெல்லி போல சுவையான கனிகளும் அந்நீரில் விழுந்து ஊறியே அந்நீருக்கு அச்சுவை வருவதாக ஆராய்சி முடிவெனினும், இன்றுவரை முழு தீர்வு கிட்டவில்லை. அது ஒரு வரம், இயற்கை கொடை என்றே முடிவாகிவிட்டது.

சிறுவாணி கோவைக்கு மேற்கே 30 கிமீட்டருக்கு அப்பால் ஓடும் நதி, அந்நீரின் சுவை தெரியுமே தவிர கொண்டுவருவது சிரமம், அதுவும் அது பவானியின் துணையாறு, ஆனாலும் பவானியில் கலந்தபின் அதன் சுவை காணாமல் போய்விடும்.

அன்று கோவையில் ஒரு பெரிய மனிதர் இருந்தார் அவர் பெயர் நரசிம்மலு நாயுடு, அவர்தான் சிறுவாணியில் அணைகட்டி மலையினை குடைந்து கோவைக்கு கொண்டுவரலாம் எனும் திட்டத்தினை முன்மொழிந்தார், முல்லை பெரியாறு அணையின் நுட்பம் அவருக்கு உந்துதல் என்பார்கள். எப்படியோ கோவை மக்களுக்கு நல்ல குடிநீர் கிடைக்க முதலில் திட்டமிட்டவர் அந்த நாயுடுதான்.

ஆனாலும் அவர் சொல்லி 30 ஆண்டு கழித்துதான் வெள்ளையன் 1930ல் அந்த நீரை கோவைக்கு குடிநீராக கொடுத்தான் அதுவரை 25 மைல் தேடிசென்று குடித்தவர்கள், அதன் பின் வீட்டிலே அமர்ந்து காலாட்டிகொண்டு குடித்தனர், பின்னாளில் சூலூர் ராணுவமுகாமிற்கும் அதுவே குடிநீராயிற்று. வடக்கத்திய ராணுவ வீரர்கள் அந்த தண்ணீருக்காகவே அங்கு விரும்பிவந்த காலங்களும் உண்டு.

அந்ந் சிறுவாணி ஆற்றின் நீர்வீழ்ச்சிதான் கோவை குற்றாலம் என்பது.

1960களில் அணை விரிவாக்கம் செய்யும்பொழுது கூட தமிழகத்தோடு ஒத்துழையினை நல்கியது கேரளம், ஆனால் வஞ்சகமாக முல்லை பெரியாறு கொள்ளவளவினை குறைக்க தமிழகத்தை வற்புறுத்தி வெற்றி கண்டது, அதன் பின் எல்லாம் நன்றாகத்தான் சென்றுகொண்டிருந்தது.

ஆனால் மக்களாட்சி அல்லவா, ஏதும் செய்து கொண்டிருப்பதாக மக்களிடம் காட்டாவிட்டால் என்ன ஆட்சி?, அதுவும் மாநில நலன் என மொத்த மக்களையும் ஒரே புள்ளியில் ஏமாற்ற ஒரு வாய்ப்பு கிடைத்தால் விடுவார்களா? மறுபடியும் முல்லை பெரியாரில் தொடங்கி ஆடிபார்த்தார்கள்.

அதில் தமிழகம் பக்கமே பலம் அதிகரிக்க கொஞ்சநாளாக அவர்கள் தூக்கம் தொலைந்தது, பரம்பிகுளம் ஆழியாற்றில் சர்ச்சை துவக்கினார்கள், அதிலும் வெற்றி இல்லை, 

என்ன செய்ய? ஏய் தமிழகமே அன்று சிறுவாணி தண்ணீருக்காக முல்லை பெரியாற்றின் நீர் அளவினை குறைத்த நீ மறுபடியும் வென்றுவிட்டயா, வா அதிலே கை வைக்கின்றேன் என கிளம்பிவிட்டார்கள்.

அடப்பாடி வழியாக சிறுவாணி வரும் இடத்தில் அணைகட்டி விவசாயம் செய்யபோவதாக அறிவித்திருக்கின்றார்கள், கேரளா பற்றி எல்லோருக்கும் தெரியும்? எத்தனை நதிகள் அங்கு வீணாக கடலில் கலக்கின்றன, அவற்றில் எல்லாம் படகு வீடு கட்டி நீந்துவார்கள், அல்லது படகுபோட்டி நடத்துவார்கள். நீரிலே அமைந்த மாநிலம் அது

அவர்கள் சிறுவாணி நீரை எடுத்துத்தான் விவசாயம் செய்கிறோம் என்றால் மொத்த இந்தியாவே வாய்விட்டு சிரிக்கும்.

தமிழக தேர்தலில் தோற்று ஆங்காங்கு முக்காடு போட்டு துண்டுபீடி குடித்துகொண்டிருந்த  கட்சிகள் எல்லாம், வேலை வந்திருச்சி என களம் இறங்கிவிட்டன.

தமிழக அரசு எம்மாதிரியான நடவடிக்கைகளை எடுக்க போகின்றது என்பது இனி தெரியும், பார்க்கலாம். சுலபத்தில் கேரளம் வெற்றிகொள்ளமுடியாது, அது காய்கறி முதல் அரிசி வரை தமிழகத்தை நம்பியே பெரும்பாலும் இருக்கின்றது. வடகொரியா போல அதிரடி காட்டிவிட்டு , தேவையானதை வாங்கிவிட்டு அமைதியாகும் வாய்ப்பும் உண்டு, அரசியல் அப்படித்தான்.

கோவையிலும் சலசலப்பு கூடுகின்றது, காரணம் அவர்கள் அச்சுவையான நீரிலே வளர்ந்தவர்கள், எங்கு பயணம் சென்றாலும் அதனை கையில் கொண்டுசென்றே பழகியவர்கள். சிறுவாணி இல்லாத வாழ்வினை அவர்களால் கற்பனை செய்து கூட பார்க்கமுடியாது.

மலையாளிகளுக்கு நாம் சொல்லவிரும்புவதெல்லாம அதுதான், உங்களுக்கு இல்லா நதிகளா? நீரா? செழுமையா?. அடிக்கொரு ஓடையும் எட்டுக்கொரு ஆறும் பாயும் வளம் உங்களது.

சிறுவாணியின்றி அமையாது கோவை ,  

அதன் வளர்ச்சிக்கு அதுதான் காரணகர்த்தா, நல்ல குடிநீர் கிடைக்கும் மக்கள் அமைதியான வாழ்வு வாழ்வார்கள் என்பதொரு தியரி. அப்படி கோவை மக்களின் அமைதியான மனதிற்கும் அதுவும் ஒரு காரணம்.

ஓ மலையாளிகளே அதனை அவர்களிடமே
விட்டுவிடுங்கள், முன்னோர்கள் குடித்து சுவைத்த நீரை அவர்கள் சந்ததியும் குடித்து மகிழ விட்டுவிடுங்கள், அது அவர்கள் கலாச்சாரம், பெருமைக்குரிய  பாரம்பரியம்.

அவர்கள் உணர்வில் கலந்துவிட்ட நதி அது, அதன் பெயரினை கேட்டாலே அவர்கள் முகத்தில் ஒரு பரவசமும், நன்றி உணர்வும் வரும். அப்படி அவர்கள் உதிரத்தில் கலந்துவிட்ட பெயர் அது.

எகிப்தின் நைல் போல, தாய்லாந்தின் ஐராவதி போல காசியின் கங்கை போல, பாபிலோனின் டைக்ரீஸ் போல அது கோவையின் நிரந்தர அடையாள சின்னம்.

இரக்கமில்லா மலையாளிகளே,  அந்த சுவையான நீரிலே அவர்களை காத்து வரும் தேவதை அது.  

அவள் இருக்கும் வரையே அது சொர்க்கம், அவளை பறித்து அம்மக்களை  நரகத்தில் தள்ளிவிடாதீர்கள்.

இந்த கோவைக்காரர்களின் உரிமையும், அவர்களின் பெருமையுமான அருமைக்குரிய சிறுவாணியினை அவர்களிடம் கொடுத்துவிடுங்கள், அது நதி அல்ல, அவர்களை அங்கே வாழ வைக்கும் தாய்.

No comments:

Post a Comment

there was no one left To speak out for me

First they came for the Communists And I did not speak out Because I was not a Communist Then they came for the Socialists And I did not spe...