Sunday, August 14, 2016

விவசாய நிலப்பரப்பு வீழ்ச்சி

நாடாளுமன்றத்தில் விவசாயத்துறை அமைச்சர் ராதா மோகன் விவசாய நிலங்களின் நிலப்பரப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகின்றது என்றும் விவசாய நிலங்கள் வேறு நோக்கங்களுக்கு பயன்படுத்தப்படுவது அதிகரித்து வருகின்றது என்று பேசியுள்ளார்.  விவசாய உற்பத்திக்கான பரப்பில் 2013-2014ல் 181.713 மில்லியன் ஹெக்டேர் விவசாய நிலங்கள் வேறு பயன்பாட்டுக்காக மாற்றப்பட்டது என்று கூறியுள்ளார்.  விவசாயத்துறை சார்ந்த அதிகாரப்பூர்வ புள்ளி விவரத்தின்படி கடந்த 2000-2001 முதல் 2010-2011 வரை சராசரியாக 1.15 மில்லியன் ஹெக்டேர் முதல் 1.33 மில்லியன் ஹெக்டேர் வரை ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இதையெல்லாம் நாடாளுமன்றத்தில் பேசுவதோடு அமைச்சர்கள் நிறுத்திவிடுகின்றனர். இதைத் தடுக்கக் கூடிய வகையில் மேல் நடவடிக்கைகள் இல்லை. திட்டமிட்டவாறு 100 ஆண்டுகள் கழிந்தபின் விவசாயம் என்பது தொல்பொருள் ஆராய்ச்சி மட்டுமே பேசப்படும் வார்த்தையாகிவிடுமோ என்கின்ற அச்சம் ஏற்படுகிறது.

No comments:

Post a Comment

there was no one left To speak out for me

First they came for the Communists And I did not speak out Because I was not a Communist Then they came for the Socialists And I did not spe...