Tuesday, August 9, 2016

அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்

இரவு நேரத்தில் அமைதியில் அலைபோல மனதை தாலாட்டும் இனிமையான இசையில் அருமையான குரலில் அற்புதமான பாடல்"அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்"
காதலன் மனக்குழப்பத்தில் ஆழ்ந்திருக்கும் தனது காதலிக்கு ஆறுதல் கூறுவது போல் அமைந்த பாடல். படம் - ஆண்டவன் கட்டளை, பாடியவர்கள் - TMS, P சுசீலா, இசை - விஸ்வநாதன், ராமமூர்த்தி, இயற்றிவர் - கவியரசு கண்ணதாசன் 

பாட்டின் முகப்பிசை, புகைவண்டி  பாலத்தை கடக்கும் ஓசை, அது கடக்கும் வரை ஒலிக்கும்,அதற்குப்  பிறகு நீரூற்று போன்ற சிதார் இசை, தொடரும் புல்லாங்குழல், வயலின்கள், இசை நம்மை  வேற்றுலகிற்கு  அழைத்து செல்ல, மறுபடியும் சிதாரின் இசை நம்மை இவ்வுலகிற்கு அழைத்து வரும்.

அமைதியாக டி எம் எஸ் குரலில் "அமைதியான நதியினிலே ஓடும்" என பல்லவி துவங்குகிறது.

அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
காற்றினிலும் மழையினிலும் கலங்க வைக்கும் இடையினிலும்
காற்றினிலும் மழையினிலும் கலங்க வைக்கும் இடையினிலும்
கரையினிலே ஒதுங்கி நின்றால் வாழும் ஹோய் ஹோய்
அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்

ஒவ்வொரு சரணம் துவங்குமுன் முன்னிசையாக பான்ஜோசும் புல்லாங்குழல் இசையும் மிகவும் இனிமையாக இசைக்கப் பட்டிருக்கும் 

தென்னை இளங்கீற்றினிலே ஏ... ஏ..,,ஏ... ஏ..,,ஏ... ஏ..,,எ ... ஏ..,,
எனும்போது குழலின் எதிரொலிக்கும் இசை தென்னமசோலையில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது.
தென்னை இளங்கீற்றினிலே தாலாட்டும் தென்றலது
தென்னை இளங்கீற்றினிலே தாலாட்டும் தென்றலது
தென்னை தனை சாய்த்து விடும் புயலாக வரும்பொழுது
தென்னை தனை சாய்த்து விடும் புயலாக வரும்பொழுது

அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்

ஆற்றங்கரை மேட்டினிலே ஆடி நிற்கும் நாணலது
ஆற்றங்கரை மேட்டினிலே ஆடி நிற்கும் நாணலது
காற்றடித்தால் சாய்வதில்லை கனிந்த மனம் வீழ்வதில்லை
காற்றடித்தால் சாய்வதில்லை கனிந்த மனம் வீழ்வதில்லை

அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் 
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்

ஓ....ஓ....ஓ....ஓ....ஓ....ஒ ....ஓ....ஓ....(பி சுசீலாவின் ஹம்மிங்)

நாணலிலே காலெடுத்து நடந்து வந்த பெண்மை இது
நாணலிலே காலெடுத்து நடந்து வந்த பெண்மை இது
நாணம் எனும் தென்றலிலே தொட்டில் கட்டும் மென்மையிது
நாணம் எனும் தென்றலிலே தொட்டில் கட்டும் மென்மையிது

அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்

அந்தியில் மயங்கி விழும் காலையில் தெளிந்து விடும்
அந்தியில் மயங்கி விழும் காலையில் தெளிந்து விடும்
அன்பு மொழி கேட்டுவிட்டால் துன்பநிலை மாறிவிடும்
அன்பு மொழி கேட்டுவிட்டால் துன்பநிலை மாறிவிடும்

அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
காற்றினிலும் மழையினிலும் கலங்க வைக்கும் இடையினிலும்
கரையினிலே ஒதுங்கி நின்றால் வாழும் ஓ..ஓ..

அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் (ஓ..)
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
ஓ....ஓ....ஓ....ஓ....ஓ....ஒ ....ஓ....ஓ...
சுசீலாவின் ஹம்மிங்குடன் பாடல் நிறைவுறும் 

சரணங்களின் ஊடே துடுப்போசையை மிகவும் துல்லியமாகவும் இயல்பாகவும் கையாண்டிருப்பர் இரட்டையர். சரணங்களுக்கு முன் வரும்   சிதார், புல்லாங்குழல் , வயலின்கள் இவற்றின் நதிக்கரையில் வீசும் தென்றலாக சுகமளிக்கின்றது.
நடிகர் திலகம் துடுப்பு போடும் வசீகரமே காணக் கண் கொள்ளா காட்சி . TMS சுசீலா இருவரது குரலும் பாடலுக்கு தனிப் பொலிவை ஊட்டும். கவிஞரது பாடல் வரிகள் பொருள் பொதிந்ததாகவும் இயல்பாகவும் இருக்கும். இசை பாடலோடு இணைந்து செல்லும். மனதுக்கு நிறைவான ஒரு பாடல்.

No comments:

Post a Comment

#*இ.ந்.தி.யா தேர்தல்க்கூட்டணி* ⁉️

#*இ.ந்.தி.யா தேர்தல்க்கூட்டணி* ⁉️ ••••• இந்த இ.ந்.தி.யா தேர்தல்க் கூட்டணிகளின் விசித்திரங்களை  எவ்வாறு அணுகுவது என்று மிகச் சிறந்த பத்திரிகை...