Sunday, August 14, 2016

தமிழகத்தில் விவசாயத்துக்கு மின் இணைப்பு வழங்காமல் இழுத்தடிப்பு

கடந்த 31.3.2016 வரை விவசாயத்துக்கு மின் இணைப்பு கோரி காத்திருப்போர் 4,28,267 பேர். இதற்கு முன்பு விண்ணப்பித்து காத்திருப்போர் மட்டும் 2,03,357 பேர் ஆகும். எப்போது இவர்களுக்கு மின் இணைப்பு வழங்கப்படும் என்று தெரியாத நிலை. விவசாயிகள் வாரம் ஒரு முறை மின் இணைப்பு அலுவலகத்திற்கு சென்று இது குறித்து விசாரித்துக்கொண்டிருப்பது எத்தனைப் பேருக்கு தெரியும்?  லட்சக்கணக்கான பேர் இதற்கென போராடிக் கொண்டே இருக்கின்றனர். இந்த விவசாயிகள் வாழ்வில் என்றைக்கு மின்சாரம் வந்து பயிர் செய்யப் போகிறார்களோ? பாவம் விவசாயிகள்! வியர்வைவை விதைத்து வேதனையை அறுவடை செய்கிறார்கள்.

No comments:

Post a Comment

அகழவாராய்ச்சியைப் பொறுத்தவரை #கீழடி மட்டும் முக்கியமானது அல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடந்திருக்கிறது!

  அகழவாராய்ச்சியைப் பொறுத்தவரை #கீழடி மட்டும் முக்கியமானது அல்ல. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த ஆய்வு நடந்திருக்கிறது! குறிப்பாக வையா...