Friday, February 10, 2017

கூத்தாடிகள் வேடத்தை கலைக்கின்ற நேரம்.

கூத்தாடிகள் வேடத்தை கலைக்கின்ற நேரம்.

-------------------------------------
மன்னராட்சியில் கொலைகளும் பச்சைத் துரோகங்களுக்கு பின் அரியாசனத்தில் ஏறும் போட்டிகள் நடக்கும். இப்போது அந்த காட்சியை ஜனநாயக நாட்டிலும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். சசிகலா ஒரு பக்கத்தில் நடிக்கின்றார், மறுபக்கத்தில் பன்னீர் அரிதாரம் பூசி நாடக மேடையில் உலா வருகின்றார். முந்தா நாள் வரை சின்னம்மா காலில் விழுவது இன்றைக்கு சசிகலா என்று உத்தம புருஷராக காட்சி தருகிறார்.பன்னீர்செல்வத்தின் சுயரூபம் அறியாமலேபோய்சேர்ந்தார்
ஜெயலலிதா.

2001 வரை அரசியல் அடையாளம் தெரியாத பன்னீர் செல்வத்துக்கு அந்தக் கட்சியில் இருந்த பொன்னையன், பி.ஹெச். பாண்டியன், மதுசூதனன் போன்ற பல மூத்த தலைவர்களை புறக்கணித்து விட்டு ஜெயலலிதா தன் விருப்பத்துக்கு பன்னீர் என்ற ஒரு அடிமையை முதலமைச்சர் ஆக்கினார். ஜெயலலிதா வீட்டில் உதவியாக இருந்த சசிகலாவும் முதலமைச்சர் கனவில் இருக்கின்றார்.

நேர்மையில் இலக்கணம் ஒமந்துரார், காமராஜர், பேரறிஞர் அண்ணா, கலைஞர் போன்றவர்களெல்லாம் தியாகங்களுக்கு பின் முதலமைச்சர் ஆசனத்தில் அமர்ந்தனர். இன்றைக்கு தகுதியற்றவர்களெல்லாம் அடிமைகளின் ஆதரவோடு அரசியல் அரிச்சுவடியே தெரியாமல் முதலமைச்சர் ஆக வேண்டுமென்று அரசியல் சதுரங்கத்தில் போட்டியில் இருப்பதை பார்த்தால் வேதனையாக இருக்கின்றது,

இதன் காரணம் என்ன?

நூற்றுக்கும் இரு நூற்றுக்கும் நம் பிரஜா உரிமையான வாக்குரிமையை விற்றோம். அரசியலை வியாபாரமாக்கினோம். அரசியல் தலைமை பொறுப்புக்கு வருபவர்கள் இதனை ஒரு தொழிலாக நினைத்தார்கள். வானத்திலிருந்த குதித்தவர்கள் போல  அவர்களுக்கு மரியாதை, தனிநபர் துதி எனவும் அவர்களை சர்வாதிகாரத்திற்கு தள்ளி அவர்கள் காலில் மண்டியிட்டு விழ வேண்டிய நிலை. பிறகு எப்படி இருக்கும் மக்களாட்சி? மக்கள் நல அரசு என்ற வகையில் மக்களுக்கு என்ன திட்டங்கள் வரும். தியாகத்தில் வளர்ந்த அரசியல் தலைவர்கள் யாரையும் ஆதரிக்காமல் வாக்குகளை வணிக மயமாக்கினால் நாடு நாசமாகத் தான் போகும்.

எம்.ஜி.ஆர் காலத்திற்கு பின் ஜெயலலிதாவினுடைய
அணுகுமுறையால் அரசியல் பாழ்பட்ட்து.

பெரும்ஊழல்,வனங்கள்அழிக்கப்பட்டன.  மணல்கள் அள்ளப்பட்டன. மனித உரிமைகளுக்கு விரோதமாக கஞ்சா வழக்குகள், திராவக வீச்சு, பள்ளிக் குழந்தைகளை வெயிலில் நிற்க வைத்து வரவேற்பு செய்வது மட்டுமல்லாமல் சாலையில் மலர்களை பரப்பி அதன் மேல் தங்கள் வாகன சவாரி.குடந்தை மகாமகா குள சாவுகள், வளர்ப்பு மகன் திருமணம் ,இப்படி தமிழக மக்கள் பட்ட பல கொடுமைகள்.தன்னை மேரி மாதா போன்று கடவுள் ஆக சித்தரித்தது, கட்டவுட் கலாச்சாரம் உருவக்கியது.

வயதான எழுந்து நிற்க முடியாத ஆளுநர் சென்னா ரெட்டி தவறாக நடந்துக் கொண்டார் என்று குற்றஞ்சாட்டியது மட்டுமல்லாமல் அவர் மீது தாக்குதல். இந்திய பிரதமராக இருந்த நரசிம்ம ராவ் மீது தலைமுறை இடைவெளியான மனிதன் என்றும் உள்துறை அமைச்சராக இருந்த எல்.கே.அத்வானியை ஞாபகமற்ற மனிதன் என்றும் கூறியவர் தான் ஜெயலலிதா.
 விவசாயக் கல்லூரி மானவிகள் எரித்து கொலை.வழக்கறிஞர்கள் விஜயன், சண்முகசுந்தரம் மீது தாக்குதல் .

கடைசியாக கோவில்பட்டியில் விவசாயிகளின் மீது துப்பாக்கி சூடு நடந்து இரண்டு விவசாயிகள் சாகடிக்கப்பட்டனர். தன்னுடைய ஆடிட்டர், தன்னுடைய கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் பட்ட பாட்டை தமிழகமே அறியும். சட்டமன்ற மான்பை சீரழித்தவர்.இப்படிப்பட்ட ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்டவர்கள் தான் பன்னீர் மற்றும் சசிகலா. இவர்கள் தான் தமிழ்நாட்டின் முதல்வராக ஆசைப்படுகிறார்கள்.

சரி,சசிகலா உடன் தினகரன் ஆளுனரை சந்தித்தார். எதற்காக. ?

ஜெ. தன்னுடைய ஊழல்களால் எம்ஜிஆரை புனிதமாக்கினார்... 

சசிகலா,பன்னீர்செல்வம் தங்களுடைய ஊழல்களால் ஜெ.வை புனிதமாக்குகிறார்கள்...

தமிழக மக்களே இது சரிதானா…..

#தமிழக_அரசியல்

#KSRPOSTING

#KSRADHAKRISHNAN_POSTING

கே. எஸ். இராதாகிருஷ்ணன்

10.02.2017

No comments:

Post a Comment

*ஈழவேந்தன் Eelaventhan

#*ஈழவேந்தன் மறைவு*.. ———————————— என்னுடன் 1985 - 86 பிப் வரை தங்கி இருந்தார். சொந்த ஊர்  ஈழம் பருத்திதுறை. இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்...