Wednesday, February 1, 2017

தமிழக கேரள நதிநீர் பிரச்னைகள் :

தமிழக கேரள நதிநீர் பிரச்னைகள் :
-------------------------------------
இன்று பேச்சுவார்த்தை

இன்று ,28 /01/2017 தமிழகம் மற்றும் கேரள அரசுகளுக்கிடையே  நதிநீர் பங்கீடு  குறித்தான பேச்சுவார்த்தை திருவனந்தபுரத்தில் நடக்கிறது .  தமிழகத்தில் பருவமழையும்  பொய்த்து விட்டது . இந்நிலையில் கேரளாவில் இருந்து நதிநீர் ஆதாரங்கள் , தமிழகத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் .கன்னியாகுமரி மாவட்டத்தில் நெய்யாறு கால்வாய் கேரள அரசால் மூடப்பட்டு 9 ஆண்டுகள் ஆகின்றன . நெல்லை மாவட்டத்தில் அடவி நயினாறு , உள்ளாறு , சென்பக தோப்பு அணை உடைப்பு பிரச்சினை ஶ்ரீவில்லிப்புத்தூர் அருகே அழகர் அணைத்திட்டம்;ஏற்கனவே அனைவரும் அறிந்த முல்லை பெரியாறு பிரச்சினை, கொங்குமண்டலத்தில் சிறுவாணி , பம்பாறு ,பவானி ,சோழையாறு,ஆழியாறு-பரம்பிக்குளம்,அமராவதி பிரச்சினை, பாண்டியாறு -புன்னம்புழா ஆகிய நதிகளை பற்றி உச்சநீதிமன்றத்தில் 34 ஆண்டுகளுக்கு முன்பு நான் தொடர்ந்த வழக்கில் இந்த பிரச்சினைகளை எல்லாம் குறிப்பிட்டு இருந்தேன் . அத்தோடு கேரளாவில் உள்ள நீர் படிக்கைகளான அச்சன்கோவில்-பம்பை , தமிழகத்தில் உள்ள  சாத்தூர் அருகே உள்ள வைப்பாறு உடன் இணைக்கவேண்டும் என்ற பிரச்சனையும் பிரதானமானது .

தமிழகத்தில் இருந்து கேரளாவில் உள்ள சித்திர புழா திட்டத்திற்கு . பாலக்காடு , திருச்சூர் மாவட்ட குடிநீர் மற்றும் பாசனங்களுக்காக வழங்கப்படுகிறது .  சோழையாறு அணை மூலம் மணக்கடவு தடுப்பணை மூலம் 7.25   கன அடி தண்ணீரை கேரளாவுக்கு  தமிழகம் எந்த தொய்வில்லாமல் வழங்குகிறது  .  தமிழகத்தில் இருந்து  அரிசி , பருப்பு , காய்கறிகள் , பால் என அனைத்து தேவைகளையும் கேரள மக்களுக்கு அனுப்பி  வருகின்றோம் . ஆனால் தமிழக நதிகளின் நீர் ஆதிபத்தியங்களுக்கு மட்டும் கேரளா சண்டிதனம் செய்கின்றது . எல்லாவற்றிலும் நம்முடைய பெருந்தன்மையை கேரளா புரிந்து கொண்டு செய்கின்றதா ? புரியாமல் செய்கின்றதா என்று தெரியவில்லை .நதிநீர் பிரச்சினைகள் குறித்து கேரள அரசிடம் பல சுற்று பேச்சுவார்த்தையை தமிழக அரசு நடத்தி விட்டது .ஆனால் எந்த முடிவும் எந்த பயனும் இதுவரை  எட்டாமல் போய்விட்டது . 

கேரளத்தின் நீர் வளம் சுமார் 2500 லிருந்து 2800வரை  ஆகும் 
கேரள மாநிலத்திற்கு தேவையான நீர் அளவு சுமார் 850 டி.எம்.சி தான் . மீதமுள்ள நீரை தமிழகத்திற்கு கொடுத்தால் சுமார் 8 .20 இலட்சம் ஏக்கர்  பாசன வசதி பெரும் . இதனால் கேரளத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது . கேரளாவில் 85 க்கும் மேற்பட்ட நதிகள் மேற்கு நோக்கி பாய்கிறது . இந்த நதிகள் மூலம் 1.98 மில்லியன் கியூபிப் மீட்டர் தண்ணீர் செல்கிறது. இதில் 1 லட்சத்து 25 ஆயிரம் மில்லியன் கீயூபிக் மீட்டர் செல்கிறது என்று திட்டக்குழுவின் 1978 ஆம் ஆண்டு அறிக்கை கூறுகிறது . மேற்கு நோக்கி பாயும் நதிகளை தமிழகத்திற்கு திருப்புவது பற்றி மத்திய அரசு 1976 ஆம் ஆண்டு குழு அமைத்து இத்திட்டத்தை பற ஆராய்ந்தது இந்த நதிகளை தமிழகத்திற்கு திரும்புவதற்கு  சாத்தியக்கூறுகள் உள்ளன என அக்குழு கூறியது அதன்பின்பு மத்திய , தமிழக , கேரள அரசுகள் பல முறை இது பற்றி பேசியும் எவ்வித தீர்வும் ஏற்படவில்லை .நாடாளுமன்றம் , சட்டமன்றத்தில் இப்பிரச்சினை பலமுறை  எழுப்பபட்டுள்ளது . கேரளத்தில் ஓடுகின்ற சாலியாறு , பாரதபுழா , சாலக்குடி , பெரியாறு , ஆழியாறு , நீர்பிடிப்பு பகுதிகள் தமிழகத்தில் உள்ளன . இந்த நதிகள் கேரள மாநிலத்தில் பாலக்காடு , மல்லாபுரம் , ஆகிய இடங்களில் பாய்கிறது , அந்த பகுதிகளை வளம் சேர்க்கின்றன .  

ஆனால் கடந்த 50 ஆண்டுகளாக இந்த பிரச்சனைகள் தீர்வு காணமல்  தொடர்கின்றன . இன்று நடக்கும் பேச்சுவார்த்தையிலாவது தெளிவான அனுகு முறையோடு நல்ல முடிவுகள் எட்ட வேண்டும்  என்று தமிழகம் விரும்புகின்றது . ஆதலால் கேரள அரசோடு பேசும் போது தமிழக அரசு குறிப்பிட்ட பிரச்சினை மட்டும் பேசாமல் . குமரி மாவட்டம் நெய்யாறிலிருந்து நீலகிரி மாவட்டம் தொட்டபெட்டா வரை உள்ள நதிநீர் பிரச்னைகளை அவசரமாகவும் அவசியமாகவும் பேசி தீர்க்க  வேண்டிய கடமைமையை தமிழக அரசு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் . ஒவ்வொரு பிரச்சினை குறித்தும் என்னுடையை வலைதளத்தில் விரிவாக எழுதியுள்ளேன் . 

#தமிழ்நாடு #கேரளா  #நதிநீர்பிரச்சினைகள்  #பவானி #சிறுவாணி #நெய்யாறு #முல்லைபெறியாறு #சாலியாறு #ஆழியாறு #பாண்டியாறு #புன்னம்புழா
#KSRadhakirushnanpost #Ksrposting 

வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன் 
28/01/17

No comments:

Post a Comment

*ஈழவேந்தன் Eelaventhan

#*ஈழவேந்தன் மறைவு*.. ———————————— என்னுடன் 1985 - 86 பிப் வரை தங்கி இருந்தார். சொந்த ஊர்  ஈழம் பருத்திதுறை. இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்...