Tuesday, February 28, 2017

Srilanka

When #Srilanka has out-rightly rejected foreign judges and lawyers, Sumanthiran offering 18 more months is an exercise in futility, inexcusable, a criminal waste of time and a body blow to #Tamils seeking justice!
 #hrc34
ஈழத்தமிழரும், ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டமும்
---------------------------------------
தற்போது ஜெனிவாயில் கூடியுள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில், ஈழத்தமிழருக்கு நீதிக் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு தமிழர்களிடையே இருக்கிறது.
ஒவ்வொரு மார்ச் மாத துவக்கத்திலும், இந்த எதிர்பார்ப்புகள் கடந்த 2010லிருந்து இருக்கின்றது. இதைக் குறித்து பெரிய விவாதமும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
வரும் கூட்டத்தில் அமெரிக்கா என்ன முடிவெடுக்க போகின்றதோ அதன் அனுகுமுறை எப்படி இருக்குமோ என்று அறிய முடியவில்லை.
கடந்த ஆண்டு, தென்கிழக்கு ஆசியாவில், இலங்கை பிலிப்பைன்ஸ், சீனா அருகில் உள்ள பசிபிக்கடல் குறித்தான பல புவி அரசியல் பிரச்னைகளை மனதில் கொண்டே அமெரிக்கா காய்களை நகர்த்துகின்றது.
பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் கடந்த 20.10.2016-ல் அமெரிக்க படைகள் பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து திரும்ப பெற வேண்டுமென்றும், ஸ்பார்ட்லி தீவில் அமெரிக்காவின் இராணுவக் கப்பலும், ஆறு இராணுவ தலங்களையும், விரைவாக திரும்ப பெற வேண்டுமென்று எச்சரித்தார் இந்த நிலையில் அமெரிக்கா தன்னுடைய இராணுவத் தளங்களை சிங்கப்பூர் மலேசியாவிற்கு மாற்றலாம் என்று நினைக்கின்றது.
தாய்லாந்தையும் இதற்காக அமெரிக்கா பரிசீலிக்கின்றது. ஆனால், இந்த மூன்று நாடுகளும் சீனாவினுடைய நெருக்கடியினால் தயங்குகின்றது. இதற்காகவே அமெரிக்க தளபதி அட்மிரல் ஹாரி பி ஹாரிஸ் கடந்த நவம்பர் இறுதி வாரத்தில் இலங்கையோடு பேசி இராணுவக் கப்பல்கள் இலங்கையில் அருகில் வந்து செல்ல தோதுவான முடிவுகளை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தியாவும் திரிகோண மலையில் எண்ணை கிடங்குகள் அமைக்கவும், வேறு காரணத்திற்காக குத்தகை ஒப்பந்தத்தை செய்ததாக தகவல்கள்.
திரிகோணமலை தொடர்ந்து இந்தியாவை அச்சுறுத்தும் துறைமுகப் பகுதிகளாகும்.
ஏற்கெனவே 1970களில் வாய்ஸ் ஆப் அமெரிக்கா எண்ணெய் கிடங்குகள் அமைக்கவும், அமெரிக்கா திட்டமிட்டபோது அன்றைய பிரதமர் இந்திரா காந்தியை எதிர்த்ததன் விளைவாக அமெரிக்காவின் நோக்கம் நடைமுறைக்கு வரவில்லை.
இந்து மகா சமூத்திரத்தில் இருந்த டீகோகரசியா தீவிலிருந்த அமெரிக்காவில் இருந்த அந்த காலத்தில் எச்சரித்து திரும்ப அனுப்பப்பட்டது.
இந்த நிலையில் அமெரிக்கா இலங்கை அரசின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்ற நேரத்தில் நிச்சயமாக ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை ஐ.நா. மனித உரிமை ஆணையத்திற்கு எடுக்குமா என்பது கேள்விக்குறி? இந்தியாவும், இந்தப் பிரச்னையில் எப்போது போல் தட்டிகளிக்கும். பிரிட்டன் இதைக் குறித்தான ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளது.
ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் ஏற்கெனவே ஈழத்தமிழர்களுக்கு எதிராகதான் முடிவுகளை எடுத்தது.
ஆஸ்திரேலியாவும், கனடாவும் இந்த முறை என்ன அனுகுமுறை எடுக்கபோகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
திரும்பவும் சிங்கள அரசு கால அவகாசம் கேட்டும், உதவிகள் கேட்டும்தான் ஆணையத்தில் தனது வேண்டுகோளை வைத்துள்ளது. திரும்பவும், பழைய திருடி கதவை திறடி என்ற கதையைதான்.
இன்றைக்கு ஈழத்தமிழர்கள் நலனுக்காக செய்ய வேண்டிய கடமை உலகச் சமுதாயத்திற்கு உள்ளது.
அவை
1. இலங்கையில் நடந்த கொடுமைகளை விசாரிக்க சர்வேதேச சுதந்திரமான நம்பகமான விசாரனைதான் அடிப்படையில் உண்மைகளை வெளிப்படுத்தும். இதனால், ஈழத்தில் கடந்த காலத்தில் நடந்த போர்க் குற்றங்களின் உண்மைகளை அறிய முடியும்.
2. தமிழர்களிடம் அபகரித்த நிலங்கள் வீடுகளை சிங்கள மக்களிடமிருந்து திரும்ப பெற்று அதன் உரிமையாளர்களிடம் வழங்குவது.
3. வடக்கு, கிழக்கு மாநிலங்களிலிருந்த இராணுவத்தை திரும்பப் பெறுவது.
4. மாகான கவுன்சிலகளுக்கான அதிகாரங்களை கூடுதலாக்கி நில நிர்வாகம், உள்துறை சார்ந்த காவல் துறை அதிகாரம், மீன்பிடித் தொழில் சம்பந்தமான அதிகாரம் போன்ற முக்கிய அதிகாரங்களை மாகான கவுன்சிலருக்கு வழங்க வேண்டும்.
5. ஈழத்தமிழர்கள் விரும்பும் தீர்வை அறிய பொது வாக்கெடுப்பை ஐ.நா. மன்றத்தின் மேற்பார்வையில் நடத்த வேண்டும்.
இந்த நடவடிக்கைகளையாவது குறைந்தபட்சம் மேற்கொண்டால்தான் ஈழத்தமிழருக்கு மறுவாழ்வு கிடைக்கலாம். இதற்கு உலக நாடுகளுடைய ஆதரவு இல்லையென்றால் ஒன்றும் செய்ய முடியாது. இந்த நிலையில் ஈழத்தமிழருடைய நலனும், உரிமைகளும் கேள்விக்குறியாக இருப்பது வேதனையான விடயம்.
#ஈழத்தமிழர் 
#இலங்கைபிரச்னை
#ஐநாமனிதஉரிமைஆணையம்
#srilankatamils
கே.எஸ். இராதாகிருஷ்ணன்
28.02.2017

No comments:

Post a Comment

*ஈழவேந்தன் Eelaventhan

#*ஈழவேந்தன் மறைவு*.. ———————————— என்னுடன் 1985 - 86 பிப் வரை தங்கி இருந்தார். சொந்த ஊர்  ஈழம் பருத்திதுறை. இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்...