Monday, April 23, 2018

பாஜக....

பாஜக அமைச்சரவையில் அமைச்சர்களாக 1990களிலும், 2000 துவக்கங்களிலும் பா.ஜ.க.வை தூக்கிப் பிடித்த முன்னாள் அமைச்சர்கள் யஸ்வந்த் சின்கா, ராம்ஜெத் மலானி, அருண் சோரி, வாஜ்பாயின் ஆலோசகர் மோகன் குருசாமி, மறைந்த மத்திய முன்னாள் அமைச்சர் ஜஸ்வந்த் சிங் போன்றோர்கள் எல்லாம் ஏன் மோடியுடைய பராக்கிரமத்தை எதிர்க்கிறார்கள் என்பது கவனிக்க வேண்டிய விசயமாகும். வாஜ்பாய்க்கு பல ஆலோசனை கூறி அதற்கான தரவுகளை கொடுத்து நம்பிக்கைக்குரியவராக விளங்கிய மோகன் குருசாமி கடுமையாக ஆசியன் ஏஜ், டெக்கான் குரானிக்கல் போன்ற ஆங்கில ஏடுகளில் மோடி அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். எங்கோ ஒரு கோளாறு, தவறு இருக்கப் போய்தான் இன்றைய பாஜக அரசை கடுமையாக விமர்சிக்கிறார்கள். இத்தனைக்கும் இவர்கள் காங்கிரஸ் கட்சியின் எதிர்ப்பாளர்கள்.

முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா பாஜகவிலிருந்து விலகுவதாக அறிவிப்பு.
* மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளை யஷ்வந்த் சின்ஹா கடுமையாக விமர்சித்து வந்த நிலையில் பாஜகவிலிருந்து விலகல்
* வேறு எந்த கட்சியிலும் சேரப் போவதில்லை என்றும் யஷ்வந்த் சின்ஹா அறிவிப்பு
யஷ்வந்த் சின்ஹாவின் மகன் ஜெயந்த் சின்ஹா மத்திய விமான போக்குவரத்துத்துறை இணையமைச்சராக உள்ளார்

#KSRpostings
#KSRadhakrishnanPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
21-04-2018

No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...