Tuesday, April 10, 2018

இராமாயணத்தில் ஒரு மாயமான். காவிரியில் ஸ்கீம் என்றொரு மாயமான்........

இராமாயணத்தில் ஒரு மாயமான். காவிரியில் ஸ்கீம் என்றொரு மாயமான். தூலக் கோல் நிலையில் இருக்க வேண்டிய உச்ச நீதிமன்றம் காவிரியில் ஸ்கீம் என்ற மாயமானை வைத்து தமிழகத்தை வஞ்கிக்கின்றதா?
அங்குள்ள நீதிபதி செலமேஸ்வரரே ஜெயலலிதா வழக்கில் இருந்து பல வழக்குகளைப் பற்றி உச்ச நீதிமன்றத்தின் தடுமாற்றங்களை வெளிப்படுத்தி விட்டார். நீதிமன்றத்திலுள்ள நீதிபதிகளின் குறைகளையே தீர்க்க முடியாத உச்ச நீதிமன்றம் தமிழகத்தினை வஞ்சிப்பதா? காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு நீதி கிடைக்காமல் காலந்தாழ்த்தியவர்கள்.
1. உச்ச நீதிமன்றம்
2. காவிரி நடுவர் மன்றம்
3. நரசிம்மராவ் காலத்திலிருந்தே காவிரி விவகாரத்தில் மத்திய அரசுகள்
4. நடுவர் மன்ற உத்தரவை அரசிதழில் வெளியிடாமல் ஆட்சியில் இருந்தவர்கள்
5. முன்னாள் பிரதமர் தேவேகவுடா
6. கர்நாடக அரசு
எனச் சொல்லிக் கொண்டே போகலாம்.

காவிரி பிரச்சனையில் மத்திய அரசினுடைய காலம் தாழ்த்துகிற முயற்சிக்கு உதவி செய்யும் வகையிலேயே இன்றைய (9-4-2018)உச்சநீதிமன்றத்தின் உத்தரவு அமைந்துள்ளது.
ஏற்கனவே ஆறு வார காலத்திற்குள் ஒரு ஸ்கீமை உருவாக்கிட வேண்டுமென்ற தீர்ப்பினை ஏற்காத மத்திய அரசு ஆறு வார காலம் கிடப்பில் போட்டதை பற்றி உச்சநீதிமன்றம் மத்திய அரசை கண்டிக்கவில்லை. காவிரி மேலாண்மை வாரியம் என்று சொல்லவில்லை, ‘ஸ்கீம்’ என்றுதான் குறிப்பிட்டிருந்தோம் என நீதிபதிகள் சொல்லியிருப்பதும், மேலும் இப்பிரச்சனையை குழப்பி விடுவதாக அமைந்துள்ளது.
பிப்.16-ம் தேதி உச்சநீதிமன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பில், நடுவர் மன்றத்தினுடைய அனைத்து அம்சங்களையும் ஏற்றுக் கொண்டு (காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உட்பட) குறிப்பிட்டுள்ள நதிநீர் பங்கீட்டு அளவை மட்டும் நாங்கள் மாற்றம் செய்துள்ளோம் என கூறியிருந்த நீதிபதிகள், அதற்கு மாறாக இப்போது கூறுவது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
மே மாதம் 3-ம் தேதி வரைவு திட்டத்தை மத்திய அரசு தாக்கல் செய்த பின்னரும் பதில் மனு தாக்கல்கள்,வாத பிரதி வாதங்கள் என்ற நிலையில் மேலும் இந்த வழக்கை இழுத்துக் அடிக்க வாய்ப்பு உள்ளது.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
09-04-2018

No comments:

Post a Comment

*Every situation in life is temporary*

*Every situation in life is temporary*. Don't be afraid, your fate can't be taken from you, it is a gift. Life will always move in t...