Monday, July 2, 2018

தனியாக இருப்பவனே கபடமற்றவன்.




மனிதன், ஆழ்ந்து தனிமைப்பட்டு போதலே அவனுடைய துயரத்தின் ஒரு காரணி. உங்களுக்கு தோழமை,இயற்கை , பேரளவு அறிவு ஆகியவை இருக்கலாம், நீங்கள் சமூக செயலில், சுறுசுறுப்பாக ஈடுபடலாம், அரசியலைப் பற்றி முடிவில்லாமல் பேசலாம் –பெரும்பாலானோர்  பேசியே பொழுதை கழிப்பார்கள் என்பது வேறு விஷயம் – ஆனால், இந்த தனிமைப்படுத்தப்பட்டதோர் உணர்வு இருந்துகொண்டேயிருக்கிறது.

அதன் காரணமாக, மனிதன் வாழ்க்கைக்கு ஒரு முக்கியத்துவத்தை கண்டுபிடிக்கிறான். ஆனாலும், இந்த தனிமைப்படுத்தப்பட்டதோர் உணர்வு இருந்துகொண்டேதான் இருக்கிறது.  எனவே, எந்தவொரு ஒப்பீடு செய்யாமல், அதைவிட்டு ஓட முயற்சிக்காமல், அதை மூடிமறைக்க முயற்சி செய்யாமல் அல்லது அதிலிருந்து தப்பிக்க முயலாமல், அதை உள்ளது உள்ளபடி நீங்கள் பார்க்க முடியுமா? அப்போது அந்த தனிமைப்படுத்தபட்ட உணர்வு, முற்றிலும் வேறு கோணமாக மாறுவதை நீங்கள் காண்பீர்கள்.

தனிமைப்படுத்தப்பட்டு போவது வேறு, தனிமையாக இருப்பது வேறு. நாம் தனிமையாகவே இருப்பதில்லை. ஆயிரக்கணக்கான தாக்கங்கள், உளவியல் மரபு, கலச்சாரம், பிராச்சாரங்கள் ஆகியவற்றின் விளைவுகளாக நாம் இருக்கிறோம். ஆயிரக்கான விஷயங்கள், நம் மனதை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கின்றன. நாம் தனிமையாக இருப்பதில்லை, நாம் இரண்டாம் தர மனிதர்களாக இருக்கிறோம்.

நாம் தனிமையாக இருக்கும்போது, நாம் குடும்பத்திலிருந்தாலும், எந்தவொரு குடும்பத்தை சாராதவராக, எந்தவொரு நாட்டையும் கலாச்சாரத்திற்கும் உட்படாமல், நம்மை குறிப்பிட்ட விஷயத்திற்கு அர்ப்பனித்து கொள்ளாமலும் இருப்போம்.

அப்போது, வெளிப்புறத்தே இருக்கும் நபர் போன்றதோர் உணர்வு வரும் – அனைத்து வித எண்ணங்கள், செயல், குடும்பம், நாடு முதலானவற்றிற்கு வெளிப்புறத்தே இருக்கும் நபர். இவற்றிலுருந்து முற்றிலும் தனியே வந்த அவனே, கபடமற்றவன்.

கபடமில்லா தன்மையால்தான் மனதை துயரத்திலிருந்து விடுவிக்க முடியும்.
-ஜே.கே

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...